குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Sunday, January 17, 2016

அவசர ஆலோசனை கூட்டம்



   குலாலர் மாகசபை அவசர ஆலோசனை கூட்டம்

நாள் 19:01:2016
இடம்  கவுண்டன் பாளையம்  திருப்பூர்


நாளை குலாலர் மாகசபை மாநில தலைவர் கண்ணன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிர்வாகிகள் மற்றும் குலாலர்  மக்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்




Tuesday, January 12, 2016

உருப்பினர்

மக்களே மண்பாணை, மண் அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தி பொங்கலை கொண்டாட வேண்டும்







ண்பாண்ட தொழில் நாளுக்கு நாள் நலிந்து வரும் நிலையில், பொங்கலை மண்பாண்டங்களோடு கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பண்டைய காலத்தில் உண்ணும் உணவே மருந்தாக விளங்கியது. உணவு சமைக்க நம் முன்னோர்கள் இயற்கையான முறையில் மண்ணில் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண் பாண்டங்களில் உணவு  சமைத்து சாப்பிட்டு 100 ஆண்டுகள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால், இன்று நாகரீக மாற்றத்தால் பழமையான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு தயாரிக்கும் முறைகள் முற்றிலும் மாறிவிட்டன. காஸ், எலக்ட்ரிக் மற்றும் மைக்ரோ ஓவன் போன்ற அடுப்புகளில் எவர்சில்வர், அலுமினிய பாத்திரங்களை கொண்டு உணவு சமைக்கிறோம். இவற்றால் ஏற்படும் கெமிக்கல் ரீதியான கெடுதல்கள் நம்மில்  பலருக்கும் தெரிவதில்லை.

செயற்கை உணவு முறையால் நாம் ஆரோக்கியத்தை இழந்து  மனிதனின் சராசரி ஆயுளை நூறிலிருந்து 70க்கும் கீழாக இறக்கி கொண்டோம். தற்போது, பொங்கலன்று கூட விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலரே மண்பாண்டங்களை பயன்படுத்துகின்றனர். இதனால், இத்தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.

குறுவை மண் மற்றும் ஆற்று மண்ணை, 10க்கு 2 என்ற விகிதத்தில் கலந்து நன்றாக காய வைத்து ஒரு வாரத்திற்கு பிறகு நன்றாக மிதித்து, பிசைந்து பானை செய்யும் கருவியில் வைத்து இறுதி வடிவம் கொடுக்கின்றனர் இவ்வாறு செய்யப்பட்ட பானைகளை விறகுகள் மற்றும் இளநீர் கூந்தல்களை அடுக்கி சூளையில் வைத்து நன்றாக சுடுகின்றனர். பின்னர் இவற்றை விற்பனைக்கு அனுப்புகின்றனர்.


நாம் பெரும்பாலும் இன்று மண்பாண்டங்களை கோவில் கொடை விழாக்களுக்கும், துக்க வீட்டில் இறுதிச்சடங்குகள் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். பொங்கல் திருநாள் என்பது நமக்கு உணவளிக்கும் இயற்கைக்கு அதாவது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றிற்கு நன்றி சொல்லும்  விதமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.  புகையில்லா பொங்கல், சமத்துவ பொங்கல், மாசில்லா பொங்கல் என பொங்கலை கொண்டாடும் நாம் இந்த ஆண்டிலாவது மண்பாணை, மண் அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தி  இந்த மண்பாண்ட தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும்   இயற்கையான முறையில் பொங்கலை கொண்டாட வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.