குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Wednesday, May 16, 2018

தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த '' வேட்கோவர் '' யார் என்று புரிகிறதா குலால

நன்றி
By கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை, துணை கண்காணிப்பாளர் (ஓய்வு)




கிராமங்களில் பல்வேறு தொழில் செய்பவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் சுய தேவைக்கு மற்றும் வேண்டும் பொருள்களை அங்கேயே செய்து கொண்டனர். அவ்வாறு பல தொழில்கள் மேற்கொள்ளப்பட்டாலும், மக்களின் தேவைக்கு ஏற்ப மட்பாண்டங்களை

 செய்து அளித்த குயவர் பெருங்குடி மக்கள் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விளங்குகின்றனர். தொழில்களில் தொன்மைச் சிறப்பு வாய்ந்தது மட்பாண்டத் தொழில். மனிதன் ஓர் இடத்தில் நிலையாகத் தங்கி உணவு உற்பத்தி செய்யத் தொடங்கியது புதிய கற்காலத்தில் (சங்ஜ் நற்ர்ய்ங் அஞ்ங்). அவனுக்கு அப்பொழுது உணவையும், நீரையும் சேகரித்து வைத்துக்கொள்ள மண்பானை போன்ற ஒரு பாத்திரம் தேவைப்பட்டது. களிமண்ணைப் பிசைந்து உருட்டி கைகளால் மண்பானை செய்து, வெயிலில் காயவைத்து பயன்படுத்தினான். இவ்வாறு கைகளால் செய்த பானைகள்   பழுப்பு நிறமுடைய - சொரசொரப்பான பானைகள் புதிய கற்கால இடங்களில் - அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன


இதற்குப் பின்னர் வருகிற இரும்பு உலோகக் காலமான பெருங்கற்காலம் மனிதன் நாகரிகத்தில் ஏற்பட்ட பல முன்னேற்றங்களை எடுத்துக் காட்டுகிறது. தங்குவதற்கு வீடுகள், இரும்புப் பொருள்கள், வண்ணக் கல் மணிகள், சக்கரத்தில் வைத்து வனையப்பட்ட பானைகள் போன்றவை அக்கால நாகரிகத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டுகிறது. பானைகளில் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. சூளையில் வைப்பதால் பானையின் உட்பகுதி கறுப்பாகவும் வெளிப்பகுதி சிவந்த நிறமாகவும் காணப்படும். இத்தகைய கறுப்பு - சிவப்பு நிற பானை ஓடுகள் தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் காணப்படுகின்றன. இராமநாதபுரம் அருகே 30.கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள "தேரிருவேலி' என்ற இடத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் சங்ககால பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அதில் "கொற்றன்' "நெடுங்கிள்(ளி)' போன்ற பெயர்கள் பண்டைய தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.



இத்தகைய பானை ஓடுகளில் குறியீடுகள் (எதஅஊஊஐபஐ) பண்டைய தமிழ் எழுத்துகள் எழுதப்பட்டு - பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. சாதாரண மக்களின் பயன்பாட்டுச் சிறப்பு, பொருளாதார நிலை, கல்வி அறிவு, உணவு உற்பத்தி செய்யும் நிலை போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ளப் பண்டைய பானை ஓடுகள் பெரிதும் உதவுவதால், தொல்லியல் ஆய்வில் இவை முக்கியமான சான்றாகவும் விளங்குகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாகப் பயன்படுத்திய பொருள், மட்பாண்டங்களே ஆகும். அதன் தொடர்ச்சிதான் இன்றும் பொங்கல் பண்டிகையின் போது மண்பானை வைத்து பலர் பொங்கலிடுகின்றனர்.




தமிழகம் அயல் நாடுகளுடன் கொண்டிருந்த வணிகம் மற்றும் கலாசாரத் தொடர்பு குறித்து அறிந்து  கொள்ளவும், மண்பானை ஓடுகள் பெரிதும் உதவுகின்றன. அரிட்டைன், ரெளலடட், ஆம்பொராமதுஜாடி போன்ற ரோமானிய பானை ஓடுகள் போன்றவை வெளிநாட்டுத் தொடர்பினை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் கரூர், கொடுமணல், மாங்குடி, மரக்காணம், அழகன்குளம், அரிக்கமேடு, மாமல்லபுரம், காஞ்சிபுரம், கங்கைகொண்ட சோழபுரம், நாகப்பட்டினம், பெரியபட்டினம் முதலிய பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் தொன்மை சிறப்புமிக்க மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன.



மட்பாண்டங்கள் செய்யும் குயவர் பெருமக்களைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவர்கள், "வேட்கோவர், கலம் செய்கேரி, மண்வினை மாக்கள், மண்மகன்' என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அவர்கள் கிராம மக்களுக்கு வேண்டிய பானைகள், சட்டிகள், என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அவர்கள் கிராம மக்களுக்கு வேண்டிய பானைகள், சட்டிகள், குறியீடுகளுடன் காணப்படும் உலோகக் கால மட்பாண்டங்கள்குறியீடுகளுடன் காணப்படும் உலோகக் கால மட்பாண்டங்கள்




பண்டைக் காலத்தில் கிராம சபைகளின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பானைகள் ஓட்டுப்

பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின்'' (அகம். 77:7-8)
இறந்தவர்களை மண் பானைக்குள் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது என்பதை, ""சுடுவோர் இடுவோர் தொடுகுழி படுப்போர் தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர்''என மணிமேகலை குறிக்கிறது. சோழ மன்னன் கிள்ளிவளவன் இறந்தபொழுது அவனைப் புதைக்க,

தாழியைச் செய்யும் குயவனைப் பார்த்து ஐயூர்முடவனார் கேட்பதாக ஒரு பாடல்  கோவே கலஞ்செய் கோவே') புறநானூற்றில் வருகிறது. இன்னொரு பாடலில், "போரில் மாண்ட என் கணவரை அடக்கம் செய்யும் ஈமத்தாழியிலேயே என்னையும் சேர்த்து அடக்கம் செய்ய சற்றே அகன்ற வாயுடைய பெரிய தாழியாகச் செய்து தர வேண்டும்' என்று வேட்கோவை வேண்டுகிறாள் (புறம்-256) என்ற செய்தி காணப்படுகிறது. இதற்குச் சான்றாக தமிழகத்தில் முதுமக்கட்தாழிகள் ஆதிச்சநல்லூர், கொற்கை, அமரிதமங்கலம், பூம்புகார், செம்பியன் கண்டியூர், கோவலன் பொட்டல், எடமணல் (சீர்காழி அருகில்) முதலிய பல இடங்களில் தொல்லியல் ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


பிற்கால வரலாற்றிலும் "வேட்கோவர்' சிறப்பிடம் பெற்று விளங்குவதை கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. மண் பானை செய்பவர்கள் "வேட்கோவர், வேட்கோ, கலமிடும் குசவன், மண்ணுடையார், பெருங்குசவன்' என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பதைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது


.
குயவர்கள் கோயில் ஊழியர்களாகப் பணிபுரிந்துள்ளனர். திருக்கோயில்களுக்கு வேண்டிய பானைகள், குடங்கள், சட்டிகள், கலசங்கள் போன்றவற்றை செய்து அளித்துள்ளனர். திருவக்கரை கோயிலுக்கு செம்பியன் மாதேவியரால் அளிக்கப்பட்ட தானங்களைக் குறிப்பிடும் கல்வெட்டில்,


""கலங்களும் மற்றுஞ் சால்களும் குடங்களும் பெருந்திருவமுதுக்கு பானைகளும் சட்டிகளும் திருமுளைக்கு பாலிகைகளும்  இடும் குசவன்''

எனக் குறிப்பிடப்படுகிறது. திருவரங்கம் கோயிலில் பெருமாளுக்கு அமுது படைக்கப்படும் மண்பானை "கூன்' என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. திருக்கோயிலில் மடங்கள், மடைப்பள்ளிகளிலும் அவர்கள் பணிபுரிந்திருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு நிலங்களும் அளிக்கப்பட்டன. கிராம சபைகளும் அவர்களுக்கு நிலம் அளித்துள்ளது. இவ்வாறு அளிக்கப்பட்ட

நிலம் "குசக்காணி, குசவன் நிலம், குசப்பட்டி, குலால விருத்தி, வேட்கோவக்காணி' என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கப்பட்டதைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. கோயிலில் பணிபுரிபவருக்கு வீட்டுமனைகளும் அளிக்கப்பட்டுள்ளது. குயவர்கள் செய்யும் தொழிலின் மீது குசக்காணம், சக்கர காணிக்கை, திரிகை ஆயம் போன்ற வரிகளும் விதிக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. திருக்கோயிலுக்கு வெளியூரிலிருந்து வந்து வழிபடும் பக்தர்களின் வசதிக்காக உணவு அளிக்கப்பட்டுள்ளது. அது "சட்டிச்சோறு' எனக் குறிப்பிடப்படுகிறது. அதற்காக அளிக்கப்பட்ட நிலம் "சட்டிச்சோறுபுறம்' என அழைக்கப்பட்டது.


நன்னிலம் அருகே உள்ள திருவீழிமிழலைத் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏழு நாள்கள் நடைபெற்ற போது குயவர்கள் அந்த ஏழு நாள்களும் "அடுகலன்களும் நீர்கலன்களும்' அளிக்க தானம் அளிக்கப்பட்டதாக முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. திருக்கோயில்களுக்கும் வேட்கோவர்கள் தானம் அளித்துள்ளதை பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அவர்கள் "ஊர் கணக்காக' செயல்பட்டு வந்ததை திருவீழிமிழலை கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. நாகப்பட்டினத்தில் பெüத்த விகாரம் அமைக்க ஆனைமங்கலம் என்ற ஊர் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் அளிக்கப்பட்டது. அதனை வரையறுக்கும்பொழுது சாத்தமங்கலம் என்ற ஊரின் சார்பாக வேட்கோவன் நேந்திரன் சாத்தனான நானூற்றுவ பெருங்கோவேளான் கையெழுத்திட்டதை ஆனைமங்கலம் செப்பேடு கூறுகிறது.



மனிதனின் எல்லா சடங்குகளிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மண்பானை முக்கிய இடம் பெற்று விளங்குவதைப் போன்று தமிழக பண்பாடு - வரலாற்றில் வேட்கோவர்கள் முக்கிய இடம் பெற்று விளங்குவதை வரலாற்றுச் சான்றுகளால் அறிந்து பெருமை கொள்ள முடிகிறது. இக்கட்டுரை, "வேட்கோவர்' என்ற பெயரில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 1979-ஆம் ஆண்டு நடத்திய "தமிழ்நாடு அரசு கருத்தரங்கில்' படிக்கப்பெற்று நூலில் இடம்பெற்றுள்ளது.



விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுக்கா செட்டியார்பட்டி ரெங்கநாதபுரம் கொமந்தாபுரம் குலாலர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அரசரடி ஸ்ரீசித்தி விநாயகர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேகம் அழைப்பிதழ்








விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுக்கா செட்டியார்பட்டி ரெங்கநாதபுரம் கொமந்தாபுரம் குலாலர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அரசரடி ஸ்ரீசித்தி விநாயகர் திருக்கோவில் புனருத்தாராண அஷ்டபந்தனம்


                               மஹாகும்பாபிஷேகம் அழைப்பிதழ் 


25/05/2018. வைகாசி -11 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு மங்கள இசை முழங்க. கணபதி ஹோமம் , கோ பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெறும்

அதணை தொடர்ந்த் பிரசாதம் வழங்கல் மாலை 5:00 மணிக்கு முதல் யாகசாலை பூஜைகள் ஆரம்பம்

26/05/2018. வைகாசி 12 சனிக்கிழமை காலை 8:00. மணிக்கு இரண்டாம்கால யாகசாலை பூஜை நடைபெறும்
 மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெறும்
 
27/05/2018 வைகாசி 13. ஞாயிற்றுக்கிழமை காலை :3-00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெறும்
காலை 5:10. மணிக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெறும்
காலை 5:30. நையாண்டி மேளம் முழங்க பால் குடம் வீதி உலா

அதணை தொடர்ந்து காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும்

அதணை தொடர்ந்து காலை 10:00 மணியளவில் அன்னதானம் நடைபெறும்
கும்பாபிஷேக விழாவில் அனைத்து ஆண்மீக நெஞ்சங்களும் கலந்து கொண்டு
அரசரடி ஸ்ரீசித்தி விநாயகர் அருள் பெருக........

 news by Sakthi Vel

சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் வரலாறு


நம்முடைய ஆன்மிகத் தேடலுக்கும் அடைய விரும்பும் பேரின்பத்துக்கும் நல்ல குரு ஒருவரே வழிகாட்ட முடியும் . ஒரு குருவை நாம் தேடிக் கண்டடையும் போது அவரின் திருமேனியைத் தரிசிப்பதும் அவருடைய திருநாமத்தைச் சொல்லுவதும் அவருடைய உபதேசத்தைக் கேட்பதும் அவருடைய திருவுருவை நம் மனதில் வைத்துத் தியானிப்பதும் ஞானத்தை அளிக்கும். நமக்கு நல்ல கொடுப்பினை இருந்தால் சிவனே குருவாக வந்து நமக்கு மெய்யுணர்வை அளிக்கிறார் என்று திருமூலர் கூறுகிறார் .

அதனால்தானோ என்னவோ சிவனாகவே மாறிவிட்ட மாயாண்டி சுவாமிகள் ‘தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’ என்று ஒரு நல்ல குருவாக இருந்து பல சித்தர்களை உருவாக்கியிருக்கிறார் .

சிறுவனைச் சுற்றிய நாகம்

மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளார், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளார் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .

குத்துக்காலிட்டு மகன் தியானம் செய்துகொண்டிருப்பதையும் அவனுடைய உடலை நாகம் ஒன்று சுற்றிக்கொண்டு தலையின் மீது படம் எடுத்து நிற்பதையும் கண்டார் . “அய்யனாரப்பா என் மகனைக் காப்பாற்று” என்று குரல் எழுப்ப அந்தப் பாம்பு சட்டென்று மறைந்துவிட்டது. அதைக் கண்ட அவர் தம் மகன் சாதாரணப் பிறவியல்ல என்று உணர்ந்து கொண்டார்.

சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.

குரு செல்லப்ப சுவாமிகள்

மன்னார்குடியைச் சேர்ந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரான செல்லப்ப சுவாமிகள் இராமேசுவர யாத்திரை செல்லும் வழியில் கட்டிக்குளத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார் .

ஆசிர்வாதமும் வழிநடத்தலும்

ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .

ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .

ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .

அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார் .

சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் .

சட்டையைக் கழற்றிவிடலாமா?

நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் .
சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார்


Sunday, May 13, 2018

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சித்திரை திருவிழாவில் முதல் மண்டகப்படி குலாலர் மண்டகப்படி

 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 29-ம் தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்தையொட்டி, சாமி சந்நிதியில் உள்ள கம்பத்தடி மண்டபம்  மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு, பட்டர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர்.


சித்திரைத் திருவிழாவிற்காக காப்புக் கட்டிய பட்டர்கள், காலை 10.05 மணிக்கு 66 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடிப் பட்டத்தை ஏற்றினார்.  பிறகு,கொடிமரத்துக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்து, யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளி, பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். கொடியேற்றம் நடந்த பிறகு, மேலே இருந்து மலர்கள் தூவப்பட்டன. பின்னர், சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில்,

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதன் பிறகு, அம்மனும் சுந்தரேஸ்வரரும் சாமி சந்நிதி இரண்டாம் பிராகாரத்தில் 3 முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். பின்னர், கோயிலுக்குள் உள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளினார்கள். தொடர்ந்து, இரவில் கற்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனங்களில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வர உள்ளனர்.  கொடியேற்ற நிகழ்ச்சியில், மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கோயில் இணை ஆணையர் நடராஜன் உட்பட, பலர் கலந்துகொண்டனர்.

Saturday, May 12, 2018

மைசூர் மகாராஜா குலாலர் இனமே உன்மையான வரலாற்றில் இன்று

                            குலாலர்   மாநாட்டில் கலந்து

                             கொண்ட  மைசூர் மகாராஜா









மாநிலத் தலைவர் s.கண்ணன்



தமிழ் நாட்டில் முதன் முதலில் மாமன்னர் சாலியவாகணன் சிலை திறந்த

ஒன்றுபட்ட குலாலர் பொதுநலசங்கத்திற்க்கும் மாநிலத் தலைவர் s.கண்ணன்

அவர்களுக்கும் M.அழகாபுரி குலாலர் சமுதாய மக்கள் மற்றும் இளைஞர்கள்

சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கெள்கிறோம்

வீர மரணம் அ டைந்த எங்கள் குலாலகுல வம்ச ஜி சுசீலன்




ஜெய்ஹிந்.15 ம் ஆண்டு நினைவு அஞ்சலி.தாய் திருநாட்டுக்காக சத்தீஸ்காரில் வீர மரணம் அ டைந்த எங்கள் குலாலகுல வம்ச ஜி சுசீலன் அவற்களுக்கு நினைவு அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்
இப்படிக்கு .மனைவி.மகன்கள்&முட்டைக்காடு.குலார் தெரு ஊர் பொதுமக்கள்.

Thursday, May 10, 2018

welcome all

                                      

 

                                       welcome all 

 

                     this website all kulalar famly news