குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Monday, September 30, 2013

விருதுநகர் மாவட்ட குலாலர் சங்கம்





குலாலர் சங்கம்




குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை 3–வது ஆண்டு விழா

மண்பாண்டங்களின் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் குலாலர் சங்கம் தீர்மானம்

நெல்லை
மண்பாண்டங்களின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று குலாலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சங்க கூட்டம்
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை 3–வது ஆண்டு விழா பாளையங்கோட்டையில் நடந்தது. நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் முருகானந்த வேளார் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரிய முன்னாள் தலைவர் சேம நாராயணன், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் குப்புசாமி, தொழில் அதிபர்கள் நடராஜன், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுடலைமுத்து என்ற சேகர் வரவேற்று பேசினார். தமிழ்நாடு குலாலர் சங்க தலைவர் ஹரிஹரன் சிவாச்சாரியார், ஆறுமுக நம்பி ஆகியோர் குலாலரின் சிறப்பு பற்றி பேசினர்.
நலத்திட்ட உதவிகள்
இதில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், உலோக பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் வரவால் நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை பாதுகாக்க நிதி உதவியும், தொழிற்கூடம், விற்பனைக்கூடங்களை அரசு கட்டித்தர வேண்டும். மண்பாண்டங்கள் செய்வதற்கு மின்சாரத்தில் இயங்கும் சக்கரம் இலவசமாக வழங்க வேண்டும். பழமைவாய்ந்த மண்பாண்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெல்லை மாவட்ட துணை செயலாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முருகன், மாவட்ட பொருப்பாளர் அய்யப்பன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Monday, September 23, 2013

குலாலர் முரசு

குலாலர்களின் அனைத்து நிகழ்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள படியுங்கள் குலாலர் முரசு,
குலாலர் நிகழ்ச்சிகள், செய்திகள் கல்வி, வேலைவாய்ப்பு, திருமண தகவல் மற்றும் விளம்பரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் குலாலர் முரசில் வெளியிட கீழ்கண்ட நபரை முகவரியிலோ, தொலைப்பேசியிலோ அல்லது மின் அஞ்சலிலிலோ தொடர்பு கொள்ளவும்.

M.ராமசுப்பு (எ) மணி
9, முதல் மெயின் ரோடு, செல்வராஜ் நகர்,
திருநின்றவூர் - 627 003
செல் 9444981032

குலாலர் சிங்கங்களுக்கு

குலாலர் சிங்கங்களுக்கு

 
நம்மில் சிலருக்கு நம்முடைய இனத்தவருக்கு இன உணர்வு இல்லையே என்ற ஒரு ஆதங்கம் இருக்கலாம். அவ்வாறு நினைபவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நம் இனத்தவர்கள் இன உணர்வை இழந்து பல நூற்றுகணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று ஒரேநாளில் நாம் அவர்களுக்கு இன உணர்வை ஏற்படுத்த முடியாது. அனால் ஓன்று மட்டும் நிச்சயம் இதுவரை தான் யார் என்றே உணராதவர்கள் ஒருசில இளைஞர்களின் எழுச்சியால் தன் பலம் என்னவென்று உணரத்துவங்கி உள்ளனர்.அதற்கு அடையாளம்தான் தான் இன்ன ஜாதி என்று சொல்லிக்கொள்ள தயங்கியவர்கள் இன்று நான் குலாலர் இனம் என்று பெருமையாக சொல்லிகொள்ளும் அளவிற்கு வந்துவிட்டார்கள் இன்னும் போகப்போக மாபெரும் சக்தியாக நம் குலாலர் இனம் உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்".
அந்த நிலையை அடையும்வரை நாம் தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று உறுதி எடுத்துகொள்வோம்

மதுரையில் குலாலர் சமுதாய பொதுக்குழு

மதுரையில் குலாலர் சமுதாய பொதுக்குழு : மாநில தலைவர் தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் ஆதரவு யாருக்கு என்பது குறித்து விவாதிக்க மதுரையில் பொதுக்குழு நடைபெற உள்ளதாக குலாலர் சமுதாய மாநில தலைவர் தெரிவித்துள்ளார்,

நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவை எங்கள் அமைப்பு ஆதரித்தது. மண்பாண்ட தொழிலாளர் களுக்கான நலவாரியம் அமைத்து தரப்படாத நிலையில் நெல்லை மாவட்டம் தவிர இதர மாவட்டங்களில் மண்பாண்டம் செய்ய தேவையான குளத்து மண் அள்ள அனுமதி வழங்க படவில்லை. அதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கபட்டது.

மாநில அளவில் தொகுதிக்கு 1 லட்சம் வாக்காளர்களை கொண்ட எங்கள் அமைப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து விவாதிக்க மதுரையில் வருகிற 22ம் தேதி பொதுக்குழுவை கூட்டியுள்ளோம் ,அதில் நாடாளுமன்ற தேர்தலில யாருக்கு எங்கள் ஆதரவு என்பகு குறித்தும், 2014 ஜனவரியில் முதலாவது மாநில மாநாடு நடத்துவது குறித்தும் முடிவு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார் பேட்டியின் போது மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Monday, September 9, 2013

குலாலர் ஸ்ரீ சூழக்கரை காளியம்மன்

                                                          பருக்கைக்குடி


குலாலர் ஸ்ரீ சூழக்கரை  காளியம்மன்  17 ஆம் ஆண்டு  பொங்கல் வழா