பிறப்பு
தாயார் .ஆதி சேஷன் ஆரவேளியம்மை தம்பதிக்கு கி.பி 78 இல் மகனாகப் பிறந்தார்
இவரது பிறப்பு தெய்வத்தின் அருளால்வந்தது என்றே கூரலாம் ஏன் என்றால் இவர் பிறந்த குலம் குலாலர் குலம் தன் நாட்டில் அடிமைகளாக வாழும் மக்களை மீட்டெடுக்க வீர போர்நடத்தி வெற்றி கண்டவர்,,வீர வேந்தன் சாலிவாகனன் புரந்தரபுரி ஊரில் உள்ள குலாலசேரியில் தங்கி அங்கு ஆண்குழந்தையைப் பெற்று அங்கேயே வசித்தும் வந்தனர் ஆதி சேஷன் ஆரவேளியம்மை தம்பதிகள். அந்தச் சிறுவனுக்கு ‘சாலிவாகனன்’ எ னப் பெயர்சூட்டினர். அவர் தினமும் அங்கு சிறுவர்களுடன் விளையாடி வந்தான். அவன் விளையாட்டு அரசன், மந்திரி, ராஜாங்கம் போன்ற விளையாட்டாகவே இருந்தது. ஐந்து வயதே நிரம்பாத இந்த சிறுவன் அரச வாழ்க்கையை பார்த்தது கூடக் கிடையாது. பின் எப்படி தெரியும் என எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். விளையாடும் போது அந்த வழிவந்த ஒரு பிராமணர் இவனுடன் உண்மையைப் போல விளையாடினார். பிராமணர் அந்த சிறுவனான அரசனுக்கு பஞ்சாங்கம் சொன்னார். அதனால் அந்த சிறுவன், தான் ஒரு அரசன் என்பதைப் போல கருதிக்கொண்டு அவருக்கு ஒரு குடம் கொடுக்கச் சொன்னான்.இளம் வயதினிலேயேதன் குலத்தொழிலைநன்கு கற்றுத்கொண்டார்
இளமைபருவம்;
“ மைந்தர்களே! என்னுடைய மரணத்திற்கு பின் உங்களுக்குள் சச்சரவு வரக்கூடாது. என்னுடைய சொத்துக்களை நீங்கள் பாகம் பிரித்துக் கொள்ள ஏதுவாக நான்கு பாகங்களாக பிரித்து என்னுடைய கட்டிலின் கீழே நான்கு அடி ஆழத்தில் நான்கு கால்களின் அடியில் புதைத்து வைத்து உள்ளேன். பெரியவனிலிருந்து சிறியவன் வரை முறைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார்.
சிலநாட்களில் வியாபாரி இறந்துவிட்டார். அவர் சொல்லியபடி கட்டிலின் அடியில் தோண்டியபோது நான்கு கால்களின் அடியிலும் நான்கு செப்புக் குடங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த குடங்களில் பொன்னோ நகையோ வைர வைடூரியங்களோ எதுவும் இல்லை. முதல் குடத்தில் மண்ணும் இரண்டாவதில் வைக்கோலும் மூன்றாவதில் எலும்புத்துண்டுகளும் நான்காவதில் கரியும் இருந்தன.
இதை வைத்துக் கொண்டு எப்படி பாகம் பிரிப்பது என்று அவர்களுக்குப் புரியவில்லை. எனவே பஞ்சாயத்தார் வசம் சென்று பிரித்துத் தரும்படி கூறினர். அவர்களுக்கும் இதை எப்படி பாகம் பிரிப்பது என்று புரியவில்லை! எனவே விக்கிரமாதித்த மன்னனிடம் அனுப்பினர்.
விக்கிரமாதித்தனுக்கும் அவனது சபையில் இருந்தோருக்கும் கூட இந்த வழக்கின் தீர்ப்பை சொல்ல முடியவில்லை! கரி, மண், வைக்கோல், எலும்புத்துண்டுகள் இதை எப்படி பாகம் பிரிப்பது என்று அறிஞர்களும் கைவிரித்துவிட நான்கு சகோதரர்களும் மிகவும் விசனத்துடன் ஊர் திரும்பினர்.
அவர்கள் திரும்பி வரும் வழியில் குலாலசேரி என்ற ஊரில் தங்கினார்கள். அங்கே சாலிவாகனன் இருந்தார். அவர் சிறந்த அறிவாளி. அவரிடம் தங்கள் வழக்கைக் கூறினர் நால்வரும்.
அவர், உங்கள் தந்தை செலவந்தர் மட்டுமல்ல! அறிவாளியும் கூட, அதனால்தான் இவ்வாறு பிரித்து வைத்துவிட்டு போய் உள்ளார். தன்னுடைய சொத்துக்களை உங்கள் நால்வருக்கும் அவரவருக்கு தகுந்தவாறு பிரித்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
வயதில் மூத்தவன் மண் நிறைந்த குடத்தையும், இரண்டாமவன் வைக்கோல் இருந்த குடத்தையும், மூன்றாமன் எலும்புதுண்டுகள் இருந்த குடத்தையும், கடைசிநபர் கரித்துண்டுகள் நிறைந்த குடத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பொருள் என்ன வென்றால், மண் என்பது நிலத்தையும், வைக்கோல் என்பது தானியத்தையும், எலும்புத்துண்டுகள் கால்நடைகளையும், கரி என்பது தங்கள் வெள்ளி வைரங்களையும் குறிக்கிறது.
இதன்படி மூத்தமகன் நிலத்தையும் இரண்டாமவன் அவர் சேமித்த தானியங்களையும் மூன்றாமவன் கால்நடைகளையும் நான்காமவன் நகை ஆபரணங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னான். சாலிவாகனனது தீர்ப்பால் மகிழ்ந்த நால்வரும் அவனிடம் விடைபெற்று அவன் சொன்னபடி பங்கீடு செய்து கொண்டார்கள்.
போர் துவக்கம்
இந்த விஷயம் விக்கிரமாதித்த மன்னனை சென்றடைந்தது. அறிவாளியான சாலிவாகனனை சந்திக்க விரும்பி பிரதிஷ்டான நகரத்திற்கு சேவகன் ஒருவனை அனுப்பி சாலிவாகனனை அழைத்துவரச் சொன்னான். ஆனால் சாலிவாகனன் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டார். விக்கிரமாதித்தன் பேரரசனாக இருந்தாலும் அவனும் மனிதன் தானே! அவனை பார்க்க நான் போகமாட்டேன். அவனுக்கு காரியம் ஆகவேண்டுமானால் இங்கு வரட்டும்! நான் வரமாட்டேன்! என்று சொல்லிவிட்டார் சாலி வாகனன்.விக்கிரமாதித்த அந்த நாட்டுமக்களை அடிமைகளாக கொடுமை படுத்தி ஆட்சி நடத்தி வந்தனர் விக்ரமாதித்தனும் காளி தேவியை வேண்டி வரம் இருந்து பட்டி 200வருடமும் விக்ரமாதித்தன் 100 வருடமும் அரசாளுவார்கள் என்று வரம் பெறுகிறார்கள் இதையெல்லாம் மனதில்
வைய்த்து தன் நாட்டில் அடிமைகளாக வாழும் மக்களை மீட்டெடுக்க வீர போர் நடத்த வேண்டும் என்று இளம் வயதிலேயே முடிவெடுத்தார் அதற்கான சரியான நேரம் இதுதான் என முடிவு செய்தார்
தன்னுடைய அழைப்பை சாலிவாகனன் நிராகரித்தமையால் கோபம் கொண்ட விக்கிரமாதித்தன் பிரதிஷ்டான நகரம் மீது படையெடுத்துச் சென்று கோட்டை வாயிலில் நின்று மீண்டும் சாலிவாகனனுக்கு எச்சரிக்கை அனுப்பினான். ஆனாலும் சாலிவாகனன் தானும் படையுடன் சந்திப்பதாக சொல்லி மண்ணினால் சேனைகளை பொம்மைகளாக உருவாக்கினான். தன்னுடைய அதிசய சக்தியால் அவைகளுக்கு உயிர் கொடுத்தான்.
மண் பொம்மைகளாக இருந்த வீரர்கள், ரதம், யானை, குதிரை உயிர்பெற்று எழுந்து சித்திரை 1 படையெடுத்தன. சாலிவாகனன் தலைமையில் வந்த படையை எதிர்த்து விக்கிரமாதித்தன் படைகள் மோதின. இருபுறத்து சேனைகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதில் பல்லாயிரக் கணக்கானோர் மடிந்தனர். இறுதியில் சாலிவாகனனது சேனைகள் வெற்றி கண்டது
புரந்தரபுரி நகரமே மகிழ்ச்சி அடைந்தது சேனைகள் படை சுட நகருக்கு வந்தார் மான்னர் சாலிவாகனன் மக்களை அழைத்து இன்று தான் நமது விடுதலை வந்துள்ளது இனி இங்கு மக்கள் ஆட்சி நடக்கும் என்று கூறி மான்னரக மகுடம் சூடினார்
அரசன் சாலிவாகனன் சித்திரை 1 நமது புதுவருடப்பிறப்பாக கொண்டாட வேண்டும் என ஆணைபிறப்பித்தார் அதன் மூலம் தான் இன்றலவும் நாம் சித்திரை1 தமிழ் புத்தண்டாக கொண்டாடி வருகிறோம் இதையும் ஒரு சில அரசியல்வாதிகள் மாற்றினார்கள் இப்படி ஒன்று ஒன்றாக தமிழ் சமுதாயத்திற்கு குலாலர்களின் பங்களிப்பை மறைக்க சதி செய்கிறார்கள்
சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வந்த சாலிவாகன மன்னர் சிறுசிறு போர்களை நடத்தி அண்டை நாடுகளையும் கைபற்றி 56 தேசங்களை ஒரே குடையின் கீல் ஆட்சி செய்தார் சாலிவாகன சகாப்தம்
சாலிவாகன மன்னர் பற்றிய ஒரு சில குறிப்புகள் வரலாறு ஆசிரியர்கள் எழுதிய நுளில் இருந்து எடுக்க பட்டது
சாலிவாகன மன்னர் பற்றிய ஒரு சில குறிப்புகள்
1) சித்திரை 1 நமது தமிழ் புதுவருடப்பிறப்பாக அறிவித்துஆணைபிறப்பித்தார்
2) சாலிவாகன ஆண்டு இன்றலவும் நடைமுறையில் உள்ளது சாலிவாகன ஆண்டை இந்து நாட்காட்டி, இந்திய தேசிய நாட்காட்டி, கம்போடிய பௌத்த நாட்காட்டி இம் முறையையே பின்பற்றுகின்றனர் இந்திய தேசிய நாட்காட்டியில் ( சக ஆண்டு) என்று சுருக்கமாக இருக்கும்
3) தமிழகத்தில் பெரும் சிறப்போடு விளங்கும் பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் இன்றலவும் சாலிவாகனன்,அரசர் பெயரால் நடத்த படுகிறது பொய்க்கால் குதிரை
கோரக்கர் என்ற சித்தர் சாலிவாகனன் பற்றி பதிவு செய்துள்ளார்
சந்திரரேகை என்ற நூலில் பக்கம் 194 முதல் பக்கம்199 வரை சொல்லியுள்ளார்
சாலிவாகனன் (திரைப்படம்) மன்னர் சாலிவாகனனின் முழுமையான வரலாற்றை திரைப்படமாக தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டத்திலேயேஎடுத்து உள்ளனர் திரைப்படத்தின் பெயர் சாலிவாகனன் சகாப்தம்1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சகாப்தத்தின் சொந்தக்காரர் யார் தெரிமா நம் குல மன்னன் தான் வீர சகாப்தம் சாலிவாகனன்
இன்றைக்குசுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த சாலிவாகனன் பல வெற்றிகள் பெற்று பெரும் நிலப் பரப்பைஆண்ட பேரரசன். அவன் தன் ஆட்சியில்ஏற்படுத்திய வருடக்கணக்கு இன்றும் ஆந்திர, கர்நாடகப் பகுதிகளில்உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மாவீரனை மக்கள் மறந்து விட்டனர் ஆனால் வரலாறு மறக்கவில்லை ...........
அடுத்த வருடம் சித்திரை 1
நமது குலாலர் சமுதாயதின் குலதெய்வமான. மாவீரன் சாலியவாகனனுக்கு தமிழ் நாட்டில் மணிமண்டபம் அமைத்து அவருக்கு குருபூசை நடத்துவோம்
ஓங்குக வீரன்சாலிவாகனன் புகழ்
திக்கெட்டும் பட்டொளி வீசி பறக்கட்டும் குலாலர் கொடி
No comments:
Post a Comment