திருநீலகண்ட நாயனார் என்பவர் 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவர். இவரைப் பற்றிய குறிப்பு, 8 ஆம் நூறாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் எழுதியதிருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், பின்னர் 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார்எழுதிய பெரியபுராணத்திலும் குறிப்புகள் உள்ளன. இவர் சிதம்பரத்தில் குலாலர் குலத்தில் பிறந்தவர் என்பது மேலுள்ள நூல்களில் உள்ள செய்தி.
"திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்" - திருத்தொண்டத் தொகை
- “சொல்லைச் சிவன் திரு ஆணைதன் தூம்மொழி தோள் நசையால்
- ஒல்லைத் துறந்து உரு மூத்தற் பின் உமைகோன் அருளால்
- வில்லைப் புரைநுத லாளொடு இளமை பெற்று இன்பம் மிக்கான்
- தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே” - திருத்தொண்டர் திருவந்தாதி
ஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி "என்னை இனி தொடக்கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை!' என்றாள். சிவன் மீது கொண்ட பக்தியால், அவர் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டார் நீலகண்டர். மனைவியைத் தொடாமலேயே பல்லாண்டுகள் வாழ்ந்தார்.
இவரது பக்தியை உலகறியச் செய்வதற்காக சிவன், ஒரு அடியவர் வடிவில் நீலகண்டரிடம் சென்று ஒரு திருவோடைக் கொடுத்தார். "இது விலைமதிப்பற்றது. நான் காசி சென்று திரும்பி வந்து வாங்கிக் கொள்கிறேன்!' என்று சொல்லிச் சென்றார். சிறிது நாள் கழித்து வந்து திருவோட்டை கேட்டார். நீலகண்டர் ஓடு இருந்த இடத்தில் பார்த்தபோது, காணவில்லை. வருந்திய பக்தர் தன்னை மன்னிக்கும்படி கேட்டும் சிவன் ஒப்புக்கொள்ளவில்லை.
மனைவியுடன் தீர்த்தக்குளத்தில் மூழ்கி "திருவோடு தொலைந்துவிட்டது!' என தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் சத்தியம் செய்து தரும்படி கேட்டார். மனைவியுடனான பிரச்னையை சொல்ல முடியாதவர், ஒரு குச்சியின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, மறு முனையை மனைவியைப் பிடிக்கச் சொல்லி குளத்தில் இறங்குவதாகச் சொன்னார். சபையினர் ஒப்புக்கொள்ளவே அவ்வாறு செய்தார்.
அப்போது, அடியாராக வந்த சிவன், ரிஷபத்தின் அம்பிகையுடன் காட்சி தந்தார். திருநீலகண்டர் தம்பதிக்கு முதுமை நீக்கி, இளமையைக் கொடுத்தார். நீலகண்டரை நாயன்மார்களில் ஒருவராக பதவி கொடுத்தார். இதனால், சுவாமிக்கும் இளமையாக்கினார் என்ற பெயர் ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடுத்து, இவரே முதல் நாயனாராக போற்றப்படுகிறார்.
இறைவன் மீதான பக்தியின் உச்சத்திற்கு நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஈசன் மீது ஆணையிட்டதற்காக இல்லற வாழ்வையே தியாகம் செய்த திருநீலகண்டர், பக்தி வைராக்கியத்தின் ஒரு வடிவம். அவரது புகழை உலகறியச் செய்ய ஈசன் நடத்திய திருவிளையாடல், பக்தன் மீதான இறைவனின் கருணையை வெளிப்படுத்துகிறது. இன்றும் ஆண்டுதோறும் திருநீலகண்டர் குருபூஜையின் போது, சிதம்பரம் இளமையாக்கினார் கோயிலில் உள்ள குளத்தில் தம்பதியராக மூழ்கி எழும் வைபவம் நடத்தப்படுகிறது.
திருநீலகண்ட நாயனாருக்கு,
திருப்பூரில் குருபூஜை விழா நடந்தது. கொங்கு குலால சமுதாயப்பேரவை
சார்பில் திருநீலகண்டபுரம், செல்வ விநாயகர் கோவிலில் திருநீலகண்ட நாயனார்
குருபூஜை நடந்தது. பெண் பக்தர்கள் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து
மேளதாளம் முழங்க ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வந்தனர். விநாயகருக்கு புஷ்ப
அலங்காரம் செய்து, அபிஷேகம் நடந்தது. திருநீலகண்ட நாயனார் உருவப்படம்
வைத்து, அரளி, துளசி, செவ்வந்தி உள்ளிட்ட பலவகை பூக்களால் சிறப்பு
அலங்கராம் செய்யப்பட்டது. உணவு பதார்த்தங் கள் படைத்து, திருநீலகண்ட
நாயனாருக்கு குரு பூஜை நடந்தது. தொடர்ந்து, திருநீலகண்டரின் வாழ்க்கை
வரலாறு பாராயணம் செய்யப்பட்டது; திரளான பக்தர்கள் பங்கேற்று, நாயனாரை
வழிபட்டு, வரலாறு கேட்டனர். அடியார்களுக்கு காவி வேட்டி, துண்டு, திருவோடு
வழங்கி, உணவு பரிமாறப்பட்டது; வேண்டுதல் நிறைவேறுவதற்காக, பெண்கள்
அடியார்களிடம் மடியேந்தி, அன் னத்தை யாசகமாக பெற்றனர். மதியம் 1.00 மணிக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது. * குலால சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில்,
கரட்டாங்காடு ஸ்ரீசித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவிலில் திருநீலகண்ட
நாயனார் குருபூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 5.00 மணிக்கு
விநாயகர், மாகாளியம்மன் கோவி லில் உள்ள திருநீலகண்ட நாயனாருக்கு அபிஷேகம்
செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் எழுத் தருளிய
திருநீலகண்ட நாயனார், வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, அடியார்களுக்கு திருவோடு வழங்கி, அமுது யாசகம் அளிக்கப் பட்டது.
பக்தர்கள் திரளாக பங்கேற்று, நாயனாரை வழிபட்டு, அவர் அருள்பெற்றனர்.