மானாமதுரை, :
மின்வெட்டு காரணமாக மானாமதுரையில் மண் பாண்டங்கள் தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள் ளது.
பானைகள் தயாரிக்க பெரிய சக்கரத்தை சுற்றி விட்டு அதில் மண் வைத்து பக்குவப்படுத்த வேண்டும். முன்னர் இந்த சக்கரம் கையால் சுற்றப்பட்டது. தற்போது மின்சார மோட்டாரில் இந்த சக்கரம் இணைக்கப்பட்டு, பானை தயாரிக்கப்படுகிறது. மோட்டார் இணைக்கப்பட்ட இந்த சக்கரம் மூலம் ஒரு நாளில் 100 பானைகள் வரை தயார் செய்ய முடி யும். தற்போது நிலவி வரும் தொடர் மின் வெட்டால் மின் மோட்டார் பயனின்றி முடங்கியுள்ளது.
வேறு வழியின்றி கையா லேயே சக்கரத்தை சுற்றி பானை, சட்டிகள் மற்றும் அடுப்புகளை தயாரித்து வருகின்றனர். இதனால் பண்டிகை கால தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையில் மண் பாண்டங்களை தயாரிக்க முடியவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
பட்டரை தெருவை சேர்ந்த கணேசன் கூறுகை யில், “அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையே பானை செய்ய உகந்த நேரம். வெயில் அதிகரித்தால் பானை நேர்த்தியாக வராது. பானை தயாரிக்க தேவையான களி மண், கரம்பை மண், சவடு மண் உள்ளிட்டவற்றை அருகிலுள்ள கண்மாய்களில் இருந்து டிராக்டர், மாட்டுவண்டிகளில் கொண்டு வருகிறோம். டிராக்டர் ஒரு லோடு ரூ.4 ஆயிரம், மாட்டுவண்டியில் ஒரு லோடு மண் ரூ.500 என விலை கொடுத்து வாங்குகிறோம். இந்நிலையில் தொடர் மின்வெட்டு காரணமாக இந்த ஆண்டு பானை உற்பத்தி தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலை நம்பி உள்ள 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வருமானம் போதாமல் தவித்து வருகிறோம்“ என்றார்.