குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Monday, February 25, 2013

தயாரிப்பு பயிற்சி


மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பு பயிற்சி




தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது
 தூத்துக்குடி மாவட்ட கலை பண்பாட்டுத் துறை, சாரா கலைப் பயிற்சி நிலையம், சாரா கலை வளர் மையம் ஆகியவை சார்பில், மண்பாண்ட கலை குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தென்காசி ஆய்குடியைச் சேர்ந்த நடராஜன், பிச்சையம்மாள் ஆகியோர் இந்த பயிற்சியை அளிக்கின்றனர்.
 நாளொன்று 60 மாணவ, மாணவிகள் வீதம் மூன்று நாள்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மண்பாண்ட பொருள்கள் செய்வதற்கான மண்ணை குளத்தில் இருந்து எவ்வாறு எடுப்பது, மண்ணை பதப்படுத்துவது எப்படி, பொருள்களாக தயாரிப்பது எப்படி என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
 முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
 பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.


மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க ஆட்சியர் அனுமதி


    வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100 மண்பாண்ட கலைஞர்கள் தங்கள் தொழிலுக்கான மண்ணை ஏரிகளில் இருந்து இலவசமாக எடுத்துக் கொள்வதற்கு ஆட்சியர் எஸ்.நாகராஜன் வியாழக்கிழமை அனுமதி வழங்கினார்.
 மாவட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் குலாளர் நல வாரிய பிரதிநிதிகள், மண்பாண்டத் தொழில் செய்வதற்கு ஏரிகளில் இருந்து களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
 தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் விதி 6(2)-ன்படி நபர்  ஒருவருக்கு 800 மாட்டு வண்டிகள் அதாவது 80 டிராக்டர் மண் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 5 மண்பாண்டத் தொழிலாளர்கள் வீதம் 20 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 100 மண்பாண்டத் தொழிலாளர்கள் இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்தார்.