குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Thursday, February 7, 2013

மண்பாண்ட தொழிலை பாதுகாக்க வலியுறுத்தல்


  மண்பாண்ட தொழிலை பாதுகாக்க  தொழிற்கூடம், விற்பனை மையம் அரசு    ஏற்படுத்தி தர வேண்டும் மாவட்ட   மாநாட்டில் வலியுறுத்தல்


                  சென்னை, : தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) சங்க வடசென்னை மாவட்ட மாநாடு, பெரம்பூர் அகரத்தில் நடந்தது. மாநில துணைத் தலைவர் எம்.டி.ராமசாமி தலைமை தாங்கினார். சண்முக தயானந்தம், டி.எஸ்.முத்துராமன், எஸ்.என்.பழனி, ஜி.தண்டபாணி, வ.அன்பழகன் முன்னிலை வகித்தனர். 
மாநில தலைவர் சேம.நாராயணன் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மின் சக்கரம், ஏழை பெண்களுக்கு தையல் மெஷின், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பிளாஸ்டிக் பொருட்களின் வரவால் மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருகிறது. இந்த தொழிலை பாதுகாக்க, தொழிற்கூடங்களையும் விற்பனை மையங்களையும் அரசு சொந்த செலவில் கட்டித்தர வேண்டும். மண்பாண்ட தொழிலுக்கு வேண்டிய மூலப்பொருள்களான களிமண், விறகு, வரட்டி, வைக்கோல் போன்றவற்றை சேமித்து வைத்தால் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு நஷ்டஈடு வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழமைவாய்ந்த மண்பாண்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.