திருச்செந்தூர் பாண்டிய குலாலர் மடத்தில் முப்பெரும் விழா நடந்தது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த குலாலர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட திருச்செந்தூர் பாண்டிய குலாலர் மடத்தின் பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு, மாசித்திருநாள் அன்னதான விழா நடந்தது.
பொதுக்குழு கூட்டத்திற்கு தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் கணபதி சேகர் வரவேற்றார். பொருளாளர் முத்துகிருஷ்ணன் வரவு, செலவு அறிக்கை சமர்ப்பித்தார். துணைத்தலைவர் கணபதி, செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், கணபதி, முருகன், நடராஜன், வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய தலைவராக ஸ்ரீவைகுண்டம் மாயாண்டி, செயலாளராக ஆழ்வார்திருநகரி மாயாண்டி சேகர், பொருளா ளராக மணக்கரை ஐயப்பன், துணைத்தலைவராக வள்ளியூர் விஸ்வநாதன், துணை செயலாளராக சேரகுளம் சுப்பையா, அன்னதான கமிட்டி உறுப்பினர்களாக ஆழ்வார்திருநகரி சேகர், சுப்பிரமணியபுரம் கணபதி, சட்ட ஆலோசகர்களாக விசாலாட்சி, சுரேஷ் தேர்வு செய்யப்பட்டனர். மாசித்திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.