குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Friday, February 1, 2013

சாதி சங்க கூட்டத்தின் வலியுறுத்தல்


தருமபுரியில், நத்தம் காலனியைச் சேர்ந்த ஆணுக்கும், கவுண்டர் பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கும் நடந்த திருமணம், ஜாதிக் கலவரமாக வெடித்தது. இதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்டோர் அல்லாத இனத்தவரை ஒன்றிணைக்கும் கூட்டங்களை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருகிறார்.


இந்நிலையில், கொங்கு வேளாள கவுண்டர் பேரவையினர் தலைமையில், நாடர் மாக ஜன சபை, அகில இந்திய மூவேந்தர் முன்னணி, யாதவர் மகா சபை, குலாலர் சங்கம், ஒகலிக்க கவுண்டர்கள், சோழிய வேளாளர், பிள்ளை, முதலியார் கூட்டமைப்பு உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், பா.ம.க., மற்றும் ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்த அமைப்பினரும் பங்கேற்கவில்லை. பெற்றோர் சம்மத த்துடன் காதலித்து, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், திருமணம் செய்ய வேண்டும்.
 
பெற்றோரை ஏமாற்றும் வகையில், இவர்கள் நடந்து கொள்வ தைத் தவிர்க்க வேண்டும். காதலித்து திருமணம் செய்யும்போது, பெற்றோரின் சம்மதத்தைப் பெற முயற்சித்து, சம்மதம் கிடைக்கும் வரை, காத்திருக்க வேண்டும். 
சம்மதம் இல்லாமல் நடக்கும் திருமணங்களால், பெற்றோருக்கு ஏற்படும் வலியை உணர வேண்டும்’’என்று வலியுறுத்தப்பட்டது.

No comments: