தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலால) சங்கத்தின் , வட சென்னை மாவட்ட மாநாடு நேற்று (ஞாயிற்றுகிழமை) சென்னை அகரத்தில் நடைபெற்றது. இதில த.வெள்ளையன், சி.ஆர்.பாஸ்கரன், சந்திரன் ஜெயபால், பன்னீர் செல்வம், கே.எம்.நிஜாமுதீன், சங்கத்தின் தலைவர் டாடர் சேம.நாராயணன், பத்திரிகையாளர் மணிம் ஹென்றி மற்றும் சங்க நிர்வாகிகள் எம்.டி.ராமசாமி, பழனி, பலராமன் ஆகியோர் கலந்துகொண்டு, ஏழை எளியோர்களுக்கு நல உதவிகளை வழங்கினார்கள்.
பல்வேறு வெளிநாட்டு பொருட்களினாலும், பிளாஸ்டிக் பொருட்களினாலும் நலிந்து வரும் மண்பாண்ட தொழிலை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மண்பாண்டங்கள் செய்வதற்கான மின் சக்கரங்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும், இத்தொழிலுக்கான மூலப் பொருட்களை மழையினால் சேதமடைந்தால் அவற்றுக்கு அரசு உரிய உதவித்தொகை வழங்க வேண்டும், மண்பானைகளை சுடுவதற்கு உயர்ந்த அடுப்புகளை அரசு கட்டித்தர வேண்டும், பழமை வாய்ந்த மண்பாண்டங்களின் நலன்குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசின் சென்ட்ரல் தொழிற்பயிற்சி நிலையம் சி.ஐ.டி யிலும், தமிழக அரசின் தொழிற்பயிற்சி ஐ.டி.ஐ யிலும் வெல்டர், ஃபிட்டர், எலக்ட்ரிக்கல், தையற்கலை பயிற்சிகளைப் போன்று கலைநயமிக்க மண்பாண்டங்கள் செய்யவும் ஒரு பிரிவை உருவாக்கி பயிற்சி அளித்து மண்கலைஞன் என சான்று வழங்கி அத்தொழிலுக்கான வேலை வாய்ப்பை உருவாக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட தீர்மானங்கள் இந்த்ப மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. (டி.என்.எஸ்)