குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Tuesday, March 19, 2013

தினமும் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்







         சிக்கலில் மண்பாண்ட தொழில் : தினமும் பல்வேறு இன்னல்களை                                                                           சந்திக்கும் தொழிலாளர்கள்



                      குமரி மாவட்டம் தாழக்குடியை சுற்றியுள்ள பகுதியில் 
                      மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள 
                     50க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல்வேறு இன்னல்களை தாண்டி
                      தொழில் செய்து வருகின்றனர்.
                      ஒரு காலத்தில் கரண்டி முதல் பெரிய வகையான பானைகள்  
                       வரை,   பெரும்பாலான சமையல் பாத்திரங்களுக்கு 
                      மண்பாண்டங்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.
ஆனால், அலுமினியப் பொருட்களின் ஆதிக்கத்தால் மண்பானையின் மவுசு மெல்ல குறையத் துவங்கியது. எனினும், இன்னும் பானைகள், மீன் குழம்பு சட்டிகள், விறகு அடுப்புகள், பூந்தொட்டிகள் போன்ற மண்பாண்டங்களுக்கு வரவேற்பு உள்ளது. இந்த மண்பாண்டங்களை செய்யும் தொழிலாளர்களோ தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
களிமண் எடுக்க அனுமதிப்பதில்லை
காதி வாரியத்தின் கீழ் இயங்கும் மண்பாண்ட கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் கட்டப்பட்ட இரண்டு கட்டடங்கள் தாழக்குடியில் உள்ளன. இங்கு மண்பாண்டங்களை சுடுவதற்கு ஒரு சூளை மட்டுமே உள்ளது. சூளைக்கு மேற்கூரை இல்லாததால், மழை காலங்களில் சுடப்படும் பொருட்கள் சேதமடைந்து பெரும் நஷ்டத்தை ஏறபடுத்துகின்றன.
இதனால் தனியார் சூளைகளை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி, அவர்கள் செய்யும் பொருட்களை காய வைக்க இடவசதி இல்லை. மின் தடை பிரச்னை வேறு. இந்நிலையில், முக்கிய மூலப் பொருளான களிமண் எடுக்க, முறையான அனுமதி வழங்குவதில்லை என்று மண்பாண்டத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடன் கிடைக்காமல் அவதி
1980 ம் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த தாழக்குடி கூட்டுறவு மண்பாண்ட உற்பத்தியாளர்கள் சங்கம், பின் மெல்ல செயலிழக்க துவங்கியது. தற்போது மானியத்துடன் கடன் வழங்கும் பணியும் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறுகின்றனர் உற்பத்தியாளர்கள்.
மண்பாண்டத் தொழில் என்பது தமிழர்களின் பழமையான தொழில்களில் ஒன்றாகும். நமது கலாச்சாரத்துடன் ஒன்றிய இத்தொழிலை பாதுகாக்கவும், மண்பாண்ட உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கூட்டுறவு சங்கத்துக்கு நிதி வழங்குவதுடன் உற்பத்திப் பொருட்களை கூட்டுறவு சங்கமே எடுத்து விற்பனை செய்ய வேண்டும் என்பதே மண்பாண்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

                                                                                குலாலர் தளம்