திருநீலகண்ட நாயனார் குரு பூஜை விழா
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரியில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை ஐந்தாம் ஆண்டு விழா நடந்தது.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள ஞானவிநாயகர் கோயிலில் திருநீலகண்டர் நாயனார் குருபூஜை ஐந்தாம் ஆண்டு விழா நடந்தது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு சோழநாட்டில் சிதம்பரம் என்ற சிற்றூரில் குயவர் குலத்தில், தை மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் திருநீலகண்ட நாயனார். சிவன் மீது அளவற்ற பக்தி கொண்ட திருநீலகண்டர் நாயனார் சிவனடியார்களுக்கு திருவோடுகளை இலவசமாக வழங்குவதை தொண்டாக செய்து வந்தார்.
அவரது நினைவாக கிருஷ்ணகிரியில் உள்ள திருநீலகண்டர் நாயனார் குருபூசை வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் 6ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஞானவிநாயகர் கோயிலில் உள்ள திருநீலகண்ட நாயனாருக்கு நேற்று சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சிவன் பாடல்கள் பாடியவாறு, பால்குடம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் சாதுகளுக்கு திருவோடும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
அறக்கட்டளை தலைவர் வெங்கடேஸ்வரா சுவாமிஜி தலைமையில், செயல்தலைவர் ஜெயபால், மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் ஆறுமுகம், கோவை மண்டல தலைவர் சரவணன், மாநில துணைத் தலைவர் பலராமன், மாநில இணை செயலாளர் சண்முகம், ராமு, செயலாளர் குப்புசாமி, பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
குலாலர் தளம்