குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Friday, June 28, 2013

நிர்வாகிகள்

நிர்வாகிகள்


திருவள்ளூர்சேலம் திருச்சிராப்பள்ளிசிவகங்கை 
சென்னைநாமக்கல் பெரம்பலூர்மதுரை
காஞ்சிபுரம்ஈரோடு அரியலூர்தேனி
வேலூர்திருப்பூர் கடலூர்விருதுநகர்
கிருஷ்ணகிரிநீலகிரி நாகப்பட்டினம்இராமனாதபுரம்
தர்மபுரிகோயம்புத்தூர் திருவாரூர்தூத்துக்குடி
திருவண்ணாமலைதிண்டுக்கல் தஞ்சாவூர்திருநெல்வேலி
விழுப்புரம்கரூர் புதுக்கோட்டைகன்னியாகுமரி


குலாலர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும்  குலாலர்களின் இணைப்பு பாலமாகவும்,சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுகசெய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "குலாலர் தளம்"தொடர்ந்தது தனதுசமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம்

தொடர்புக்கு

கைபேசி.




மின்னஞ்சல்: sundarkulalar@gmail.com



Thursday, June 20, 2013

மாவீரன் சாலிவாகனன் உருவச் சிலை




                                     ஆந்தர மாநிலத்தில் உள்ள சாலிவாகன அசிரமம்த்தில் 
                                       மாவீரன் சாலிவாகனன் உருவச் சிலை      திறப்பு
                              கொங்கு குலாலர் சங்கம் சர்பில் சிலை திறந்து வைக்கப்பட்டது

குலாலர் கவி சர்வக்ஞர் கூறும் அறம்


நம் நாட்டில் பழங்காலத்தில் இருந்து அறம் மற்றும் நீதிக்குத் தான் முதலிடம். முக்தி அடைவதுதான் அக்கால மனிதர்களின் வாழ்க்கை லட்சியமாக இருந்தது. அதற்கு முக்கியமான கருவி அறம். இந்த மனித உலகில் எப்படி வாழ வேண்டும் என்று சொல்வதுதான் அற இலக்கியங்களின் முக்கிய நோக்கமாகும்.
தார்மிகக் காவியங்களும் சாஸ்திர நூல்களும் கூறுவது இதனைத்தான். காவியங்களில் ஏதோ ஓர் அரசனின் அல்லது மகா புருஷனின் கதை இருந்தாலும் அதன் லட்சியப் பின்னணி தருமத்தை நோக்கியதாக இருக்கும். இந்த உலகத்தில் அவர்கள் வாழும் பொழுது எப்படி நாலு பேருக்கு முன்மாதிரியாக வாழ்ந்தார்கள். நன்னடத்தையால் பெயர் பெற்றார்கள் என்று சொல்வது தான் அந்த நூல்களின் குறிக்கோள் என்று சொல்லலாம். நீதி இல்லாமல் அறம் இல்லை; நல்லொழுக்கம் இல்லாமல் நற்கதி இல்லை. அதனால் அறத்தைப் போதிக்கிற எல்லோரும் நீதியைச் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் பிற மொழிகளிலும் நீதி இலக்கியங்கள் உள்ளன. கர்நாடகத்தில் கி.பி. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் சர்வக்ஞர். இவர்  ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொள்ள முடியும். தான் இப்படித்தான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாக சர்வக்ஞர் ஒரு பாடலில் தெரிவிக்கிறார்:
சர்வக்ஞன் என்பவன் கர்வத்தால் ஆனவனோ?
சர்வபேரிடமும் ஒவ்வொன்றைத் தான் கற்றுக் கல்வியின்
மேருவாய் ஆனான் சர்வக்ஞன்
“த்ரிபதி’ எனும் பெயர் கொண்ட மூன்றடிகளால் எழுதப்பட்ட உரைப்பாக்களை இவர் எழுதியுள்ளார். கன்னட நாட்டுப்புறப் பாடல்களின் வழியாகத்தான் இந்த மூன்றடி வடிவ உரைப்பாக்கள் மிகுதியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வடிவம் கொண்டதால் இப்பாடல்கள் மக்களுக்கு உகந்த பாடல்களாயின. த்ரிபதிகள் மூலமாக சர்வக்ஞர் தம் கருத்துகளைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். எளிய மக்களுக்குப் புரிகின்ற நிலையில் மிக எளிமையாக உயர்ந்த கருத்துகளைக் கூறுகின்றார். கேட்டால் போதும் அவை மனதில் தங்கும் இயல்புடையவையாகும்.
சர்வக்ஞர் என்பது இவருடைய இயற்பெயர் அல்ல. மக்களிடமிருந்து கிடைத்த விருதுப்பெயர் அல்லது பட்டப்பெயராக இருக்கலாம் அல்லது கன்னட வீரசைவ வசனக்காரர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரையே தமது காவியத்தில் புனைபெயராக வைத்துக்கொள்கிற பழக்கம் கர்நாடகத்தில் உண்டு. அதைப்போல் இவரும் தெய்வத்தின் பெயரையே தனது புனைபெயராக வைத்துக் கொண்டிருக்கலாம். அனைத்தும் அறிந்த அறிவன் இறைவன் மட்டும்தான். அவ்விறைவனை மனத்துள் நிலைத்து வைத்துக் கொண்டுள்ளதன் குறியீடாகவும் இது இருக்கலாம்.
அனைவரும் தம் உறவினர் என்று வாழ்ந்த உலகக் குடிமகன் இவர். எனவே, யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்கிறார். சமூகத் தொண்டே வாழ்க்கையின் லட்சியம் என்று கருதி வாழ்ந்தவர். வாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களைப் பற்றியும் பாடுகிறார்.
இசையில்லாப் பாட்டும் இன்பமில்லா வாழ்வும்
இசைவில்லா அரசனின் ஆட்சியும் பாழூரின்
மிசை வாழும் கூகை காண் சர்வக்ஞா
அரசன் என்றாலே அத்துடன் தியாகக் குணத்தையும் கொண்டிருக்க வேண்டும். அப்படி அல்லாத அரசனின் ஆட்சி பாழடைந்த ஊரிலுள்ள கூகைபோல் என்கிறார் அவர்.
கோடி வித்தைகளில் உழவே சிறந்தது.
நாட்டில் இராட்டைகளும் சுழலும். இலையெனில்
வாட்டங்கள் மிகுமே சர்வக்ஞா
இப்பாடலில் விவசாயத்தின் சிறப்பை அழகாகக் கூறுகிறார். கோடி வித்தைகளை ஒருவர் கற்றிருந்தாலும் விவசாயத்தை என்றும் மறக்கக் கூடாது. ஆட்சி நிர்வாகத்திற்கான அடிப்படைப் பொருளாதாரமாக இருப்பது விவசாயமே ஆகும்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை’….
என்கிற குறளுடன் இதை இணைத்துப் பார்க்கலாம். வாழ்க்கையைப் பற்றி சர்வக்ஞர் ஓர் எளிமையான சூத்திரத்தை நம்முன் வைக்கிறார். அது,
அன்னம் படைப்போருக்கும் உண்மை உரைப்போருக்கும்
தன்போல் பிறரைப் பார்ப்போருக்கும் கையிலாயம்
கண்முன் காட்சியாம் சர்வக்ஞா
அன்னம் படைப்பது, உண்மை உரைப்பது, தன்னைப் போலவே பிறரையும் காண்பது ஆகிய இம்மூன்றும் சர்வக்ஞன் கூறுகின்ற சூத்திரம். இதன் மூலமாகத் தானத்தையும், தானம் செய்கிறவன் சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறார். இவைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமாக முக்தியை அடையலாம் என்பது அவருடைய நம்பிக்கை. இதனால், தானம் கொடுப்போனுக்கும் இறைவனுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்கிறார்.
சர்வக்ஞரின் உலக அனுபவம் பரவலானது. அவருக்கு சாஸ்திர ஞானமும் இருந்தது. அதைவிட விவகார ஞானம் அதிகமானது. வாழ்க்கையில் எது சரி, எது சரியல்ல என்ற பார்வையின் மூலமாகத்தான் நீதியை நிலைநாட்டப் புறப்படுகிறார். சில நேரங்களில் அவரது உரைப்பாக்கள் சிந்திக்கவும் வைக்கின்றன. சர்வக்ஞர் புதிதாக எந்தத் தத்துவத்தையும் சொன்னவர் அல்ல. வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டும் எளிமையாகச் சொல்கிறார்.
நல்லவன் இல்லாத ஊரும் கள்ளனுடன் தொடர்பும்
பொய்யன் சொல்லும் – இம்மூன்றும் சகதியில்
முள்ளை மிதித்தாற் போல் சர்வக்ஞா
என்கிறார். நாம் எந்தவிதமான மனிதர்களுடன் பழகுகிறோமோ அதே குணம் நமக்கும் வந்துவிடும். அதனால், எப்பொழுதும் நல்லவருடனான நாட்டத்துடனேயே இருக்க வேண்டும்.
ஒள்ளியருடன் இணைந்த கள்ளன் ஒள்ளியனாம்
ஒள்ளியன் கள்ளனுடன் இணையில் அவனொரு
கள்ளனே ஆவான்காண் சர்வக்ஞா
நல்லவரிடம் இருக்கிற சில குறைகளைப் பொருள்படுத்தக் கூடாது. அவர்களிடம் இருக்கின்ற நற்செய்திகளை மட்டும் காண வேண்டும் என்று கூறும்போது இப்படிக் கூறுகிறார்:
பழங்களில் வளைந்துள்ளது வாழை
பழமது சுவையில் மிகுவதுபோல் பெரியார்தம்
பிழையும் நன்மைக்கே சர்வக்ஞா
பெண்ணைப் பற்றி சர்வக்ஞர் பலவிதமான கருத்துகளைக் கூறுகிறார். நாட்டுப்புறப் பாடல்களில் வரும் கருத்துகளுடன் அதை ஒப்பிடலாம். பெண்ணின் அழகு, ஈர்ப்பு, குடும்ப வாழ்க்கை, சஞ்சல குணங்களை எல்லாம் அழகாகச் சொல்கிறார்.
மனிதருடைய எல்லா நடவடிக்கைகளுக்கும் முக்கியக் காரணம் வாழ்க்கையை நாம் காணும் விதம். நமது பார்வைதான் நமது சிந்தனைகளை வழிநடத்துகிறது. எல்லாவற்றையும் எல்லோரையும் பார்க்கின்ற கண்தான் நம் எல்லாச் செயல்களுக்கும் முக்கியக் காரணம்.
கண்ணினால் புண்ணியம் கண்ணினால் பாவம்
கண்ணினால் இகம் பரம் எனவே – உலகிற்கு
கண்ணே காரணம் சர்வக்ஞா
நாம் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்வது கண்ணின் மூலமாகத்தான். ஐம்புலன்களில் கண்ணே சிறந்தது. கண் பார்த்ததை மனம் விரும்புகிறது. பல விஷயங்களைப் பேச்சைவிடக் கண்ணே மிகுதியும் உணர்த்துகிறது.
கண்ணைப் போலவே நாக்கைப் பற்றியும் சர்வக்ஞர் கூறுகிறார். நாம் பேசும் பேச்சு அடுத்தவர் மனதில் புண் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். நாக்கைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்தால் நிம்மதியான வாழ்க்கை நமக்குக் கிட்டும்.
கத்தியால் ஆனபுண் மாயுமே
சுற்றியாடும் நாவினால் ஆனபுண் – மாயுமோ
சாகும் நாள்வரையும் சர்வக்ஞா
இது திருவள்ளுவர் சுட்டும் “தீயினாற் சுட்ட புண்’ எனும் குறளை நினைவுபடுத்துகிறது.
உடலெனும் புற்றிற்கு நாக்கே பாம்பாகும்
கடும் கோபமெனும் விடமேற தன்மை கெட்டு
மடிய நேரிடும்காண் சர்வக்ஞா
வாழ்க்கையைப் பற்றி சர்வக்ஞர் கூறுகின்ற பல விஷயங்கள் சுவையாகவும் மனதில் நிற்கும்படியும் உள்ளன. கடவுள், கோயில், பக்தி, குரு முதலிய விஷயங்களைச் சொல்கிறபொழுது சர்வக்ஞருடைய கற்பனை தெளிவாக விளங்குகிறது. வாழ்க்கையில் கிட்டும் அனுபவம்தான் எல்லா நீதிகளையும்விட மிகப்பெரியது என்பது அவருடைய கருத்தாக உள்ளது.
2009 ஆகஸ்டு 13ம் நாள் சென்னை அயனாவரம் ஜீவா பூங்காவில் கவிஞர் சர்வக்ஞர் சிலையைக் கன்னட அரசு நிறுவப்பாட்டது நம் குலால மக்களுக்கு மணிமகுடம் சூட்டினார்போல் சிலை நிறுவ இசைவளித்தாவர் டாக்டர் கருணாநிதி 

Monday, June 17, 2013

திருநீலகண்ட நாயனார் சிறப்பு விருது வழங்கும் விழா




அந்தமான் குலாலர் சங்கம்

திருநீலகண்ட நாயனார் 16- ஆம் ஆண்டு சிறப்பு விருது வழங்கும் விழா


















Friday, June 7, 2013

பிரம்மாக்கள்

மண்ணுலகின் பிரம்மாக்கள்


நம் முன்னோர்கள் நம்மைவிட ஆயிரம் மடங்கு புத்திசாலிகள்...

அதற்கு ஒரு உதாரணம் தான் மண்பாண்டங்கள்...

வீட்டிற்கு தேவையான அனைத்து உபகரனங்களும் மண்ணிலிருந்து செய்து

 எடுத்துகொண்டனர்...

அதன் உபயோகம் முடிந்ததும் அதனை மண்ணிடமே சேர்த்துவிட்டனர்... எந்த 

பாதிப்பும் இல்லை மண்ணுக்கும் சரி.... மனிதனுக்கும் சரி....

இன்று நாகரீகம் என்ற பெயரில் ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த 

தொடங்கிவிட்டோம்.... அது மண்ணுக்கும் கேடு... மனிதனுக்கும் கேடு....


சிலைகளைக் காசு கொடுத்து வாங்கிப் போய் தங்கள் வசதிக்கேற்றவாறு பூஜை -புனஸ்காரங்கள் எல்லாம் செய்வார்கள். கொண்டாடுவார்கள். ஆனால்அவற்றைப் படைத்த பிரம்மாக்கள் குடிசையிலேதான் முடங்கிக் கிடக்க வேண்டும். கிடக்கிறார்கள். வேடிக்கையான உலகம்...

குலாலர்களின் சிறப்பு


குலாலர்களின் சிறப்பு

மண்பாண்டம்

கல் தோன்றி மண் தோன்றிய காலம் தொட்டு சமுதாயம் நலம் பயக்கும் நல் உணவுகளை சமைக்கவும், சுகாதாரத்துடன் வாழவும், மண்ணால் ஆக்கப்பட்ட பாண்டங்களையும், வீடு கட்ட செங்கல்லையும், ஓடுகளையும் உருவாக்கி, கோயிலின் உருவச் சிலைகளையும் உருவாக்கி அர்ச்சகர்களாகவும் பணிபுரிந்து மக்கள் நலண்களை பேணிக் காத்து வந்தவர்கள் குலாலர்கள்.

தமிழும் குலாலரும்
குலாலர் குலத்தில் அவதரித்து உலகமே போரற்றும் மாபொரும் 
கவிப்பேரரசர் கம்பரே
உலக மொழிகளிலேயே உயர்ந்த மொழி தொன்மை வாய்ந்த மொழி தமிழ் மொழி தான். அத்தகைய தமிழ் மொழியைப்
படைத்தவன் குலால சமுகத்தில் தோன்றி கும்பமுனி அகஸ்தியர்.
புறநானூற்றில் புகைழ்பெற்ற நம் குலபெண்மணி வெண்ணிக் குயத்தியார்


கோலோட்சிய குலாலர்

சரித்திரம் படைத்த சாலிவாகனன்

வீக்கிரமாதித்த அரசனை வீழ்த்தி ஜ்ம்பத்தாறு தேசங்களையும் ஓரு குடையின் கீழ் ஆண்டு ஏகச் சக்கரவர்த்தியாய் திகழ்ந்து சாலிவாகன் சகாப்தத்தை ஏற்படுத்திய மாவீரன் குலாலன் சாலியவாகனனே !

இறைத் தொண்டில் குலாலர்

பக்தித் துறையில் பல்வகை சாதனைகளைப் புரிந்த திருநீலக்கண்டரையும், கோராக் குல்பாரையும், கூபாகும்பாரையும், மாயாண்டி சுவாமிகளையும், ஈன்றெடுத்த சமூகம் குலாலர் சமுகம்.
 —

சாலிவாகனன் (திரைப்படம்)

மாவீரன் குலாலன்சாலிவாகனன் (திரைப்படம்) 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                                 சரித்திரம் படைத்த சாலிவாகனன்





பொன்மனசெம்மலின் 12 வது திரைப்படமாகீய "சாலி வாஹனன்" வரலாறு கதைச் சுருக்கம் :
அவதானி என்றொரு குயவன் உலகில் ஐந்து கிரகங்கள் அபூர்வமாக ஒரே இடத்தில் கூடும் அதிசயம் நிகழும் கால கட்டத்தில் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து சுகித்தால் உலகம் போற்றத்தக்க ஒருவன் பிறப்பான் என்று சாத்திரம். 

அவதானி தன் மனைவியை அனுபவிக்க வேண்டுமானால் கோதாவரி நதியைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும். அந்த நேரம் பார்த்து நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது வடகரையில் இருக்கும் தன் மனைவியின் இல்லத்துக்கு போகாமல் மழையில் அவதானி தவிக்கிறான். 

அச்சமயம் அங்கு தோன்றிய பகவான் ஆதி சேஷேன் சந்நியாசி உருவில் கரையில் தோன்றி அவதானியின் பயன்படத் தக்க வலிமை பாழாகக் கூடாது என்று நினைத்து அவனை நதியின் தென்கரையில் வசிக்கும் குயவன் சிங்கண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்று மணமாகாத குயவனின் மகள் சொரூபா என்பவளை மணம் முடித்து வைத்து மறைகிறார். 

அவதானி மூலம் சொரூபா கருவுற்று ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த நிலையில் உஜ்ஜினி நாட்டு அரசன் விக்கிரமாதித்தன் தனக்கு நேர்ந்த சில அபச குணங்களை கண்டு அச்சமுற்று, ஜோதிடனை அழைத்து காரணம் கேட்க அதற்கு ஜோதிடர், "அரசே ! உங்களுக்கு ஒரு எதிரி குழந்தை பிறந்திருக்கிறது. அக்குழந்தை ஒரு-நாள் கருவில் பிறந்தான்" என்று கூறுகிறான் 

உடனே விக்கிரமத்த்தன், வேதாளத்தை ஏவி குழந்தையை கொல்லும்படி கூறுகிறான். சந்நியாசி உருவில் இருக்கும் ஆதி சேஷன் குயவனின் பேரனைக் காப்பாற்ற மண்ணினால் ஆன ஒரு குழந்தையை உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து விட்டு மறைகிறார் 

வேதாளம் நிஜக் குழந்தையை விட்டு விட்டு மண் குழந்தையை கொன்று விட்டு, அந்த தகவலை விக்கிரமாதித்தனிடம் கூற, விக்கிரமாதித்தன் பயம் நீங்கியவனாய் ஆகிறான்.

சொரூபா உண்மைக் குழந்தைக்கு சாலிவாஹன் என்று பெயரிட்டு வளர்க்கிறாள். தனக்கு ஓர் ஆண் குழந்தையிருக்கிறது. பெண் குழந்தை இல்லையே என்று கவலையுற்று, நந்தினி என்ற பெண்ணையும் தன் மகள் போல் பாது காத்து வருகிறாள். 

சந்நியாசி சாலிவாஹனுக்கு மந்திர தந்திரங்கைளையும் கல்வியினையும் போதிக்கிறார். சாலிவாஹனன் அழகு வாய்ந்த காளைப்பருவமடைகிறான். நந்தினியும் கன்னிப் பருவமடைகிறாள். 

ஒரு நாள் மகாதானபுரத்து பூமுக மன்னன் குமாரி சநதிரலேகை கோதாவரி நதியில் உல்லாசப் படகில் வந்து தென் கரையின் காட்சிகளை பார்க்கும் போது, நந்தினி ஒரு மான் பொம்மை வைத்து விளையாடுவதை கண்டு அதனை தனக்கு தரும்படி கேட்கிறாள் நந்தினி தர மறுக்கிறாள். சந்திரலேகை அதனை பறித்து தானே கொண்டு போகிறாள். நந்தினி ஓடி சென்று சாலி வாஹனனிடம் முறையிட்டு அவனை கூட்டி வருகிறாள். சாலிவாஹனன் சந்திரலேகை மான் பொம்மையை கொண்டு போக விடாமல் தடுக்கிறான். கோபத்தில், அரச குமாரியுடன் நடந்து கொள்ள வேண்டிய மரியாதையை மறந்து விடுகிறான். ஆனால், சந்டிரலேகையின் கண்களும், சாலிவாஹனன் கண்களும் சந்தித்து பேசிக் கொள்கின்றன காதல் இருவர் உள்ளத்தையும் பிணைக்கிறது. 

தோழியின் மூலம் பூமுகன் சாலிவாஹனன் நடத்தையை கேள்விப்பட்டு ஏழைக் குயப்பயலுக்கு என்ன திமிர் என்று அவனை அழைத்து வரும்படி சேவகர்களை அனுப்புகிறான் சேவகர்கள் அழைப்பிற்கிணங்கி செல்ல சாலிவாஹனன் மறுக்கிறான். அவனது தாய் சொரூபா அவனை சமாதானப்படுத்தி அரண்மனைக்கு அனுப்பி வைக்கிறாள். 

கன்னி மாடத்தின் நந்த வனத்தில் சாலிவாஹனன் சந்திரலேகையை சந்திக்கிறான். தன் உள்ளக் கிளர்ச்சியை உரைக்கிறான். சந்திரலேகை அவனை எச்சரிக்கிறாள் தன் மன உணர்ச்சியை மறைத்துக் கொண்டு. அந்த சமயம் அங்கு வந்த பூமுகன் சாலி வாகனனை சிறையிலிடசேவகர்களுக்கு கட்டளை இடுகிறான். சாலிவாஹனன் சிறையில் வருந்துகிறான் 

சந்திரலேகை தன் தந்தையான பூமுகனிடம் சாலிவாஹனனை சிறையில் அடைத்தது நல்லது அல்ல என்று வாதாடுகிறாள். பூமுகன் தன் மகளின் விபரீத போக்கை கண்டுகொண்டு, அவளையும் கன்னி மாடத்தில் கட்டுக் காவலுடன் சிறையிலிடுகிறான். 

சந்திரலேகை கூண்டுக்கிளியாக குமைகிறாள். பூமுக மன்னன் தன் மந்திரியின் யோசனைப்படி சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்கிறான். அதனை சந்திரலேகைக்கு தெரிவிக்கிறான் சந்திரலேகை பூமுகன் செய்கையை ஒப்புக் கொள்ள வில்லை. என்றாலும் பூமுகன் எல்லா தேசத்து அரசர்களுக்கும் சுயம்வரக் கடிதம் அனுப்புகிறான். 

சக்கரவர்த்தி விக்கிரமாதித்தன் சுயம் வரத்துக்கு வருகிறான். சுயம்வரத்துக்கு தேர்ந்த்தேடுக்கக் கூடிய உறைவாள்களும் அவ்விடம் வைக்கப்பட்டிருந்தன. சந்தர்ப்பங்கள் விக்கிரமாதித்தனுக்கு அனுகூலமாக அமையவே, சந்திரலேகை முற்றிலும் ஏமாற்றம் அடைந்தாள். எல்லோரையும் திடுக்கிட செய்யும் சம்பவமும் நடந்தன. சாலிவாஹனனும் சிறையிலிருந்து தப்பி யானை மேல் ஏறி சுயம்வர மண்டபத்தை அடைகிறான். சந்திரலேகை சாலிவாஹனனுக்கு மாலையிடுகிறாள். விக்கிரமாதித் தனுக்கும் பூமுகனுக்கும் இது முற்றிலும் பிடிக்க வில்லை. விக்கிரமாதித்தனுக்கும், சாலி வாஹனனுக்கும் போர் நடக்கிறது. சாலிவாஹனன் வெற்றி அடைகிறான். இருந்தும் பூமுகன் சாலி வாஹனனை மருமகனாக ஏற்றுக் கொள்ள மறுத்தான். 

ஆதி சேஷன் பிரதயஷமாகி பூமுகனுக்கு 56 தேசங்களை ஆண்டர் சாலிவாஹனின் வரலாற்றை தெரிவிக்கவே சாலிவாஹன் சந்திரலேகையை மணந்து சிம்மாசனம் ஏறுகிறான்.

அம்மாப்பேட்டை குலாலர் சங்கம்


அம்மாப்பேட்டை குலாலர் சங்கம் 
உடையாப்பட்டி முதல் வித்யா நகர் வரை
சேலம் மாநகரம்- 636003


திருச்செந்தூர் குலாலர் மணமாலை



16-June-2013 Sunday 10.00 am Kulalar Kalyana Mandapam, Sannathi street, Thiuchendur.
திருச்செந்தூர் மணமாலை உங்களை அன்புடன் வரவேற்க்கிறது
மணமாலை படிவங்கள் அச்சிடப்பட்டு கரூர், கடலூர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களிளெல்லாம் நடக்கும் திருமணம், கிரஹப்பிரவேஸம், போன்ற ஸுப நிகழ்ச்சிகளிளெல்லாம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.


நமது சமுதாயத்தை உயர்த்திட குலாலர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து விழாக்களை வெற்றிபெறசெய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

Wednesday, June 5, 2013

அந்தமான் குலாலர் சங்கம்

அந்தமான் குலாலர் சங்கம்

திருநீலகண்ட நாயனார் 16- ஆம் ஆண்டு சிறப்பு விருது வழங்கும் விழா







Saturday, June 1, 2013

வீரப் பெண்மணி குயத்தியார்


வீரப் பெண்மணி வெண்ணிக் குயத்தியார்


புறநானூற்றில் புகைழ்பெற்ற நம் குலபெண்மணி வெண்ணிக் குயத்தியார்
நம் குலால மரபில் மங்கையர் பலர் மங்காப் புகழுடன் எங்கும் 
ஒளிபெற்று விளங்கினர் என்பதை இலக்கியங்களிலே காண முடிகிறது 
குலால குல மாணிக்கங்கள் தவறு கண்டவிடத்துக் தட்டிக் கேட்கும் உள்ளம் 
கொண்டவர்களாக விளங்கினர்.
வெண்ணிக் குயத்தியார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி 
குலாலர் குலத்தைச் சேர்த இவரின் ஒரு பாடல் மட்டும் புறநானுற்றில் 66 
பாடலாக அமைகிறது. இதர பாடல்கள் கிடைக்கவில்லை.
நம் குல பெண்மணி வெண்ணிக் குயத்தியார் இவர் வெண்ணி என்னும் ஊரிலே 
தஞ்சை மாவட்ட நீடாமங்கலத்துக்கு மேற்கே உள்ள ஓர் ஊர் வெண்ணி. இது 
தேவாரப் பாடல் பெற்ற தலம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் "சங்கப் 
புலவர் கோயில் " 
என்னும் ஒரு பகுதி உண்டு அதில் சங்ககாலப் புலவர் பெருமக்களின் 
திருவடிவங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன அச்சிலைகளில் முதலில் இடம் 
பெறுபவர் இறையனார் ,அடுத்தது இடம் பெற்றிருப்பவர் வெண்ணிக் 
குயத்தியார் புலவர் வரிசையில் முதல் இடம் நம்குலப் பெண்மணி 
அடைந்திருக்கிறார்,

வெண்ணிக் குயத்தியார் பாடல் 

* பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
* திணை: வாகை. துறை: அரச வாகை.

வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால்வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற

வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?

குலாலர் பிரபலங்கள்

              குலாலர் பிரபலங்கள்

குலாலர் இனத்தில் பிறந்து பல்வேறு பட்டங்களில் வாழும் குலாலர் இனப் பிரபலங்கள்(இப்பட்டியல் இன்னும் முழுமை அடையவில்லை,குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்பட்டியல் புதுப்பிக்கப்படும்)

 அரசர்கள்

வீர வேந்தன் சாலிவாகனன்


குலாலர்மைசூர் மகாராஜா


போராளிகள்


P.S.உடையார்

A.S.சுப்புராஜ்


தியாகி பொருமாள் உடையார்


ஆன்மிகம்


திருநீலகண்டர்


மாயாண்டி சுவாமிகள்


மொழி

கம்பர்


வெண்ணிக் குயத்தியார்


அத்துகுரி மொள்ள


திரைப்படத் துறை


மஹா கவி கம்பதாசன்



அரசியல் பங்களிப்பாளர்கள்


M.பெரிய வீரன் Ex MLA  பெரியகுளம் தொகுதி


சுப்புராஜ் - முன்னாள் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர்






































குலாலமன்னர்களின் மைசூர் அரண்மனை

குலாலமன்னர்களின் சின்னமாகத் திகழும் மைசூர் அரண்மனை

குலாலமன்னர்களின் மைசூர் அரண்மனை


மைசூர், தென் இந்தியாவுக்குள் நுழைந்ததும் அனைவரும் காண விழையும் நகரம் மைசூர். பட்டு, மல்லிகை, சந்தனம், ஊதுவத்தியை நினைத்தாலே நினைவுக்கு வரும் மைசூரில், அனைவரும் காணத் துடிக்கும் கட்டடம் உடையாரின் அம்பாவிலாஸ் அரண்மனை.

தசராவிழா, மன்னர் குடும்பத் திருமணங்கள், மன்னர்களின் வரலாற்றுச் சந்திப்புகள், நவராத்திரி விழா போன்றவற்றுக்குப் புகழ்வாய்ந்த மைசூர் அரண்மனையை ஆண்டுதோறும் 15 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள்.


68 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள அரண்மனையின் அழகை, 96 ஆயிரம் பல்புகளின் ஒளிவெள்ளத்தில் காணக் கண் கோடி போதாது. மைசூருக்கு வரும் எவரும் தவறாமல் காணும் அரண்மனையின் செங்கற்களில் இழையோடும் சோகக்கதை அனைவரின் இதயத்தையும் பிழிந்துவிடும்.

17-ம் நூற்றாண்டில் இந்த இடத்தில் அமைந்திருந்த அரண்மனையில் உடையார் மன்னர்கள் வசித்து வந்தனர். ஆட்சியைக் கைப்பற்றிய ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தான், உடையார்களின் சுவடு தெரியாமல் மைசூர் நகரை அழித்ததோடு, அரண்மனையையும் தரைமட்டமாக்கினார்.

மைசூர் நகரில் நாசர்பாத் என்ற புதிய நகரை உருவாக்க திப்புசுல்தான் திட்டமிட்டிருந்தார். ஆனால் 1799-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களுடனான 4-வது மைசூர் போரில் திப்புசுல்தான் உயிரிழந்தார். மைசூர் அரசாட்சி மீண்டும் உடையார்களின் கைக்கு திரும்பியது. உடையார்களுக்கு அரண்மனை இல்லாததால், சிறிய வீட்டில் 1799-ல் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
கிருஷ்ணராஜ உடையார் 


மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் மரத்தினாலான பிரம்மாண்டமான அரண்மனையை கட்டினார். அதில் ஆயுதச்சாலை, நூலகம், அலுவலகம், திருமண மண்டபம், தனி அறைகள், உணவறை, கூட்ட அரங்கு ஆகியவை அமைத்து, மிகப்பெரிய நுழைவு வாயிலைக் கட்டினார். 245 அடி நீளம், 156 அடி அகலம், 145 அடி உயரத்தில் கட்டப்பட்ட அரண்மனைக்கு உயரமான சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.

ராணி கெம்பராஜமம்மணி தலைமையில், இளவரசி ஜெயலட்சுமம்மணி மற்றும் இளவரசர் எம்.காந்தராஜ் அர்ஸ் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அன்று மாலை அகல்விளக்கு கீழே விழுந்து தீ பற்றியதில் அரண்மனை முழுவதும் எரிந்து சேதமானது. திருமணமண்டபம், அம்பாவிலாஸ், ராமவிலாஸ் அரண்மனை ஆகியவை தீயில் கருகி தரைமட்டமானது.

பெங்களூரில் இருந்து தீயணைப்புப் படையினர் வருவதற்குள் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், ஆயுதங்கள், சிம்மாசனம் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதனால் மனம் நொந்திருந்த கெம்பராஜமம்மணி, ஷிம்லாவில் உள்ள வைஸ்ராய் மாளிகையைப் போன்றதொரு அரண்மனையை மைசூரில் கட்டுவதற்கு வருமாறு எச்.இர்வின் என்ற ஆங்கிலேயருக்கு அழைப்பு விடுத்தார்.


மயில்தொட்டி, திருமண மண்டபம், மயில் அரங்கம், கண்ணாடிக்கூரை, பளிங்குத்தரை, மின்தூக்கி, ஆயுதச்சாலை, நூலகம், கூட்ட அரங்கம், தர்பார் மண்டபம், அறைகள் கொண்ட 3 அடுக்கு அரண்மனையை ஹொய்சளர் மற்றும் கிரேக்கக் கட்டடக் கலைப்படி, 1897 அக்டோபர் முதல் 1912-ம் ஆண்டுவரை 15 ஆண்டுகளில் இர்வின் கட்டி முடித்தார்.

இதில் 5 அடுக்கு கோபுரமும், தங்கத்தால் பூசப்பட்ட குவிந்தக்கூரையும் (டூம்) உண்டு. வாஸ்து காரணத்துக்காக அரண்மனையில் சில வடிவங்கள் 1932-ல் மாற்றியமைக்கப்பட்டது. இப்படி அழகைக் கொட்டி வடிக்கப்பட்ட எழில் கொஞ்சும் அரண்மனையைதான் இப்போது நாம் காண்கிறோம். கால வெள்ளத்தில் உடையார் ஆட்சி மறைந்தாலும், ஆட்சியின் மிச்சத்தை இன்னும் நினைவூட்டும் அரண்மனை மட்டும் வரலாற்றுச் சின்னமாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.


உடையார்களின் அடையாளச் சின்னமாகத் திகழும் அரண்மனையின் நூற்றாண்டு விழாவை அக்டோபரில் கொண்டாட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.