குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம்
06 July 2013 02:00
திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சியில் அனைத்து குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அதன் தலைவர் ஏ. பெருமாள் தலைமை வகித்தார். கழகம் சார்பில் 7-ம் ஆண்டு பரிசளிப்பு விழாவை வரும் ஆகஸ்ட் இறுதியில் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த விழாவில் 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற குலாலர் மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இதற்காக மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வரும் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் என். வேல்முருகையன், முத்துகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், முருகன், கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.