குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Thursday, April 30, 2015

பேராதரவுடன் 5000 facebook kulalar







உங்கள் பேராதரவுடன் 5000 உறவுகள் .. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி நன்றி நன்றி....
வாழ்க குலாலர்
வளர்க சமுதாய ஒற்றுமை
ஓங்குக வீரன்சாலிவாகனன் புகழ்
திக்கெட்டும் பட்டொளி வீசி பறக்கட்டும் குலாலர் கொடி







Sunday, April 26, 2015

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா குலாலர் மண்டகப்படி

தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்றான மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரைத் திருவிழா புகழ்பெற்றது. இது மதுரை நகரின் கலாச்சாரத்துக்கு பெருமை சேர்க்கும் திருவிழாக்களில் ஒன்றாகும். இந்து மதத்தில் உள்ள சைவ - வைணவ பிரிவுகளை இணைக்கும் அற்புதமான ஒரு விழாவாக சித்திரைத் திருவிழா உள்ளது. சித்திரைத் திருவிழாவில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி, விருதுநகர், தேனி, ராமநாதபரம், திண்டுக்கல் உட்பட அண்டை மாவட்ட மக்களும் வண்டிகட்டி வந்து பங்கேற்பது சிறப்பான ஒன்றாகும்.இப்படிப்பட்ட சித்திரைத் திருவிழா நேற்று மாலை வாஸ்து சாந்தி பூஜையுடன் தொடங்கியது.

 காலை கோயில் திறக்கப்பட்டதும் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு கோயிலுக்குள் குலாலர் மண்டகப்படி நடந்தது. மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் ஆகியோர் கொடி மண்டபத்தில் எழுந்தருளினார். இதன் பின்னர் காலை 11.36 மணிக்கு கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தர்பைப் புற்கள் மற்றும் பல வண்ண மலர்களால் கொடி மரம் அலங்கரிக்கப்பட்டது. பூஜை, அலங்காரத்துக்கு பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி சித்திரைத் திருவிழா கொண்டாட்டங்கள் தொடங்கியது. இன்று இரவு 7 மணிக்கு மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் ஆகியோர் கற்பக விருட்சம் சிம்மவாகனத்தில் எழுந்தருள்கின்றனர். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 28ம் தேதி நடக்கிறது. ஏப்ரல் 29ம் தேதி மீனாட்சியம்மன் திக் விஜயம் செய்கிறார். ஏப்ரல் 30ம் தேதி மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 1ம் தேதி சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடக்கிறது. மே 2ம் தேதி தீர்த்தவாரியுடன் மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது. சித்திரைத் திருவிழாவால் மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Saturday, April 25, 2015

வீர குயத்தியார் மானமே பெரிது




             


          வீரப் பெண்மணி வெண்ணிக் குயத்தியார்



வெண்ணிக் குயத்தியார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி குலாலர் குலத்தைச் சேர்ந்தவர் இவரின் ஒரு பாடல் மட்டும் புறநானுற்றில் 66 பாடலாக அமைகிறது. இதர பாடல்கள் கிடைக்கவில்லை.

மானமே பெரிது வெண்ணிக் குயத்தியார் 

சோழ நாட்டின் தலைநகரம் காவிரிப் பூம்பட்டினம்.
அரசவை கூடியுள்ளது. அரியணையில் அரசர் பெருவளத்தான் பெருமிதத்துடன் அமர்ந்து உள்ளார். அமைச்சர்களும் படைத் தலைவனும் அவையினரும் இருக்கைகளில் அமர்ந்து உள்ளனர்.
"அமைச்சரே! சேர நாட்டின் மீது போர் தொடுக்க முடிவு செய்தோம். முறைப்படி நம் தூதரை அந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தோம். எங்கு எப்பொழுது இரு நாட்டுப் படைகளும் போரிடுவது? இது குறித்து சேர நாட்டு அரசரே முடிவு செய்ய வேண்டும் என்றோம். இதுவரை அந்த அரசரிடம் இருந்து எந்தச் செய்தியும் இல்லை."
"வெற்றி வேந்தே! சேர அரசரும் போருக்கு அஞ்சுபவர் அல்லர். எங்கு போர் செய்வது? ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பதில் தாமதம் என்று நினைக்கிறேன். விரைவில் செய்தி வரும்" என்றார் அமைச்சர்.
அப்பொழுது வீரன் ஒருவன் அரசவைக்குள் வந்தான். அரசரைப் பணிவாக வணங்கினான்.
"காவிரி நாட வாழி! வெற்றி வேந்தே வாழி! நீதிநெறி தவறாத வேந்தே வாழி" என்று வணங்கினான்.
"வீரனே! என்ன செய்தி?"
"அரசே! சேர நாட்டுத் தூதர் வந்திருக்கிறார். உங்கள் அனுமதிக்காக வாயிலில் காத்திருக்கிறார்."
"தூதனை உடனே இங்கு அழைத்து வா."
"கட்டளை அரசே" என்று வணங்கிவிட்டு வீரன் சென்றான்.
தூதன் உள்ளே நுழைந்தான். அரசரைப் பணிவா வணங்கினான்.
"அரசே! வாழி! எங்கள் பேரரசர் சேரமான் நெடுஞ்சேரலாதன் செய்தி அனுப்பி உள்ளார்."
"தூதனே! உன் வருகையைத் தான் எதிர்பார்த்து இருந்தோம். அந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல். எங்களுக்குத் திறை செலுத்த உங்கள் அரசர் ஒப்புக் கொண்டாரா? அல்லது சோழர் பெரும்படையைச் சந்திக்க உள்ளாரா? எதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்?"
"அரசே! எங்கள் அரசர் பெருமான் வீரர்களுக்கு எல்லாம் வீரர். பகை அரசர்கள் நடுங்கும் பேராற்றல் வாய்ந்தவர். எம் நாட்டு மக்களும் போர் வேண்டி எங்கள் நாட்டிற்கு ஓலை வந்தது இல்லை.
உங்கள் ஓலையைக் கண்டு எங்கள் அரசர் மகிழ்ச்சி அடைந்தார். வீரர்களோ நல்விருந்து கிடைத்தது என்று ஆரவாரம் செய்தார்கள்.
போர் என்று முடிவு செய்து விட்டார் எங்கள் அரசர். போரிடுவதற்கு ஏற்ற இடத்தையும் தெரிவு செய்து விட்டார்.
வெண்ணிப் பறந்தலை என்ற இடம் தான் அது. வரும் முழுமதி நாளன்று இரு படைகளும் அங்கே சந்திக்கலாம். இதுதான் எங்கள் அரசர் அனுப்பிய செய்தி" என்றான் தூதன்.
சோழ அரசரை வணங்கி விட்டுப் புறப்பட்டான்.
"அமைச்சரே! கடல் போன்ற பெரும்படை நம்மிடம் உள்ளது. போர்ப் பயிற்சி மிக்க எண்ணற்ற வீரர்கள் உள்ளனர். நம்மை வெல்லும் ஆற்றல் யாருக்கு உள்ளது? நம் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசனாக சேரன் இருந்து இருக்கலாம். வீணாக நம்முடன் போரிட்டு அழியப் போகிறான்."
"அரசே! சேர அரசரின் தன்மானம் நமக்குக் கீழ்ப்படிய மறுக்கிறது. வரும் முழுமதி நாள் நம் நாட்டிற்கு வெற்றி நாள். உங்கள் வீரச் சிறப்பை உலகமே அறியும் நன்னாள்" என்றார் அமைச்சர்.
"நன்று சொன்னீர்! அமைச்சரே! படைத்தலைவரே! நம் பெரும்படை நாளையே வெண்ணிப் பறந்தலை நோக்கிப் புறப்படட்டும். சேரர் படையின் வருகைக்காக நாம் அங்கே காத்திருப்போம்.
வீரம் பேசிய அந்தச் சேரனைப் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திக்கிறேன். என் வேலுக்கு அவன் பதில் சொல்லட்டும்."
"கட்டளையை உடனே நிறைவேற்றுகிறேன்" என்றார் படைத்தலைவர். அரசரை வணங்கி விட்டுச் சென்றார்.
சோழர் படை வெண்ணிப் பறந்தலையை அடைந்தது.
"படைத் தலைவரே! இந்த இடம் தான் வெண்ணிப் பறந்தலையா? கண்ணுக்கு எட்டிய தொலைவு மணற் பரப்பு தான் உள்ளது. செடிகளோ கொடிகளோ மரங்களோ எதுவும் இல்லை.
நல்ல இடத்தைத்தான் சேர அரசர் தேர்ந்து எடுத்து உள்ளார்" என்றார் சோழ அரசர்.
"ஆம் அரசே" என்றார் படைத்தலைவர்.
முழுமதி நாள் வந்தது.
காலை நேரம். இரு நாட்டுப் படைகளும் எதிரெதிரே அணிவகுத்து நின்றன.
சோழர் பெரும்படை முன் சேரர் படை சிறுத்துக் காட்சி அளித்தது.
கரிகாற் பெருவளத்தான் சோழர் படைக்குத் தலைமை தாங்கித் தேரில் அமர்ந்தார்.
அதே போலச் சேரமான் நெடுஞ்சேரலாதனும் தன் தேரில் அமர்ந்தார்.
இரு நாட்டு முரசங்களும் ஒரே நேரத்தில் முழங்கின. போர் தொடங்கியது.
வீரர்கள் வீர முழக்கம் செய்தனர். ஒருவரோடு ஒருவர் கடுமையாகப் போரிட்டனர்.
யானைகளின் பிளிறல் ஒரு பக்கம் கேட்டது. குதிரைகளின் கனைப்பொலி இன்னொரு பக்கம் கேட்டது. வாளோடு வாள் மோதும் ஓசை பல இடங்களில் கேட்டது.
எங்கும் ஆரவாரம் இருந்தது.
கரிகாற் பெருவளத்தானும் நெடுஞ்சேரலாதனும் போர்க் களத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர். சினத்தால் இருவர் கண்களும் தீ உமிழ்ந்தன.
இருவரும் போர் செய்யத் தொடங்கினர்.
வெற்றி தோல்வி அறியவே முடியவில்லை. இருவரும் இணையாகப் போர் செய்து கொண்டிருந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் அது நடந்து முடிந்தது.
சோழ அரசர் தன் வேலைச் சேர அரசரின் மார்பில் பாய்ச்சினார். சேர அரசரின் மார்பை ஊடுருவிப் பாய்ந்தது அந்த வேல். அப்படியே மண்ணில் சாய்ந்தார் சேர அரசர். அவர் உடலிலிருந்து வழிந்த குருதி நிலத்தைச் செம்மை ஆக்கியது.
"ஆ! நம் அரசர் வீழ்ந்து விட்டார்" என்ற சேர வீரர்களின் அவலக் குரல் எங்கும் கேட்டது.
"நாம் வெற்றி அடைந்து விட்டோம். நம் வீரத்திற்குப் பெருமை சேர்ந்து விட்டது. வீரத்துடன் போரிட்டான் சேர அரசன். என்ன பயன். என்னிடம் தோற்று வீழ்ந்தான்.
வெற்றி அடைந்த நம் படை போரிடுவதை நிறுத்தட்டும். ஆரவாரத்துடன் நாடு திரும்பட்டும்" என்று கட்டளை இட்டார் சோழ அரசர்.
வேல் பாய்ந்ததால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் சேர அரசர். வீரர்கள் அவரைப் பாசறைக்குக் கொண்டு சென்றனர்.
அரசரைச் சோதித்த மருத்துவர் "அரசரின் மார்பில் பாய்ந்த வேல் முதுகைத் துளைத்து உள்ளது. ஏராளமான குருதி வெளியேறி விட்டது.
வேலைப் பிடுங்கி விட்டேன். மேலும் குருதி வெளியேறா வண்ணம் மருந்திட்டு உள்ளேன்.
உடனே நம் அரசரை அரண்மனைக்குத் தூக்கிச் செல்லுங்கள். ஆற்றல் வாய்ந்த மூலிகைகள் பல அங்கு உள்ளன. அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. நாடித்து துடிப்பு அடங்கிக் கொண்டே வருகிறது. விரைந்து செயல்படுங்கள்."
மயங்கிக் கிடந்த சேர அரசரைப் பல்லக்கில் வைத்தார்கள் வீரர்கள். பல்லக்கு விரைந்து கருவூரை அடைந்தது.
சோழ நாடெங்கும் விழாக் கோலம் பூண்டது. வீதியெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டன.
வெற்றியுடன் திரும்பும் அரசரையும் வீரர்களையும் வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர் மக்கள்.
எங்கும் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.
வெண்ணிப் பறந்தலைப் போர் நிகழ்ந்து சில திங்கள் கழிந்தன.
வழக்கம் போல அரசவை கூடி இருந்தது. அரியணையில் கரிகாற் பெருவளத்தான் அமர்ந்து இருந்தார். அவையினர் அவரவர் இருக்கையில் இருந்தனர்.
வீரன் ஒருவன் உள்ளே வந்து அரசரை வணங்கினான்.
"வெற்றி வேந்தே வாழி! பெரும்புலவர் வெண்ணிக் குயத்தியார் வந்து கொண்டிருக்கிறார்" என்றான்.
"ஆ! பெரும்புலவர் வெண்ணியக் குயத்தியாரா? இங்கு வருகிறாரா? அவர் வருகையால் நம் நாடே பெருமை பெற்றது" என்று அரியணையில் இருந்து இறங்கினார் அரசர்.
புலவர் வெண்ணியக் குயத்தியார் உள்ளே நுழைந்தார்.
அவரை வரவேற்ற அரசர் "வாருங்கள்! வெண்ணிக் குயத்தியாரே! வாருங்கள்" என்ற மலர்ந்த முகத்துடன் வரவேற்றார்.
அவையினர் எல்லோரும் எழுந்து "புலவர் வெண்ணிக் குயத்தியார் வாழ்க" என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.
உயர்ந்த இருக்கை ஒன்றைக் காட்டிய அரசர் "புலவரே! இதில் அமருங்கள்" என்று வேண்டினார்.
தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ந்தார் புலவர். அந்த இருக்கையில் அமர்ந்தார்.
அரசரும் அரியணையில் அமர்ந்தார்.
புலவர் எழுந்து நின்று "நானிலம் காக்கும் அரசே வாழி! செங்கோல் தவறாத அரசே வாழி! பகை நடுங்கும் வெற்றி வேந்தே வாழி! தமிழின் மீது நீர் கொண்டிருக்கும் பேரன்பை உலகமே போற்றுகிறது. உம்மைப் போல் புலவர்களை மதிக்கும் அரசர் யார் இருக்கிறார்கள்? உம்மோடு உரையாடி மகிழவே இங்கு வந்தேன். என் சில நாட்கள் இங்கே தங்குவதாகத் திட்டம்" என்றார்.
"தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் புலவர் பெருந்தகையே! கிடைத்தற்கு அரிய பெரும் பேறாகக் கருதுகிறோம். உங்கள் வருகையால் இந்தச் சோழ நாடே சிறப்புப் பெற்றது. நீங்கள் இங்கேயே நிலையாகத் தங்கினால் பெரிதும் மகிழ்வோம்" என்றார் அரசர்.
"வெற்றி வேந்தே! எங்கள் அறிவுச் செல்வம் ஒரு நாட்டிற்கு உரியது அல்ல. உலகிற்குப் பயன்பட வேண்டும். பல நாடுகளையும் சுற்றி விட்டுச் சேர நாடு சென்றேன். அங்கே சில நாட்கள் தங்கினேன். அங்கிருந்து இங்கு வந்தேன்" என்றார் அவர்.
"சேர நாட்டிலிருந்தா வருகிறீர்கள்? எனக்கும் சேர அரசனுக்கும் நிகழ்ந்த போரைப் பற்றிக் கேட்டு இருப்பீர்கள்.
அதைப் போன்று கடுமையான போர் எங்கும் நிகழ்ந்தது இல்லை.
அந்தப் போரில் அடைந்த வெற்றி எனக்குப் பெரும்புகழைத் தந்தது. அதைப் போற்றிப் புகழாத புலவர்களே இல்லை.
அந்தப் போரைப் பற்றி நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார் அரசர்.
"அரசே! போர் முடிந்து விட்டது. சேர நாட்டு நிகழ்ச்சிகள் எதுவும் உமக்குத் தெரியாதா?"
"புலவரே! சேரரின் படையைப் போர்க்களத்தில் சந்தித்தேன். என் வேலால் தாக்கப்பட்ட ரே அரசன் நிலத்தில் வீழ்ந்தார். வெற்றிக்காகப் போர் செய்தேன். என் எண்ணம் நிறைவேறியது.
தோல்வி அடைந்த அவர்களால் பல ஆண்டுகள் போரிட முடியாது. அதனால் அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை நான் பொருட்படுத்தவில்லை."
"அரசே! உங்கள் வேலால் தாக்கப்பட்டார் அரசர் நெடுஞ்சேரலாதன். அவர் உயிர் பிழைத்து விட்டார். அந்தச் செய்தியாவது உங்களுக்குத் தெரியுமா?"
"புலவரே" என்னால் நம்ப இயலவில்லையே. என் வேல் நெடுஞ்சேரலாதனின் மார்பைத் துளைத்து ஆழமாகப் பாய்ந்தது. அப்படியே நிலத்தில் அவர் வீழ்ந்தார். அவர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லையே."
"அரசே! சேர நாட்டு மூலிகைகளின் ஆற்றல் அளவிட முடியாதது. அவை இறந்தவரின் உயிரையே மீட்கும். அப்படி இருக்கையில் படுகாயம் அடைந்த அரசரின் உயிரையா மீட்காது?"
"மூலிகைகளால் சேர அரசர் உயிர் பிழைக்கட்டும். என்னிடம் தோற்ற பழி அவரை விட்டு நீங்காதே. அதற்கு அவர் போர்க்களத்திலேயே இறந்து இருக்கலாம். உயிர் பிழைத்துப் பழி சுமக்கின்ற கொடுமை யாருக்கு வேண்டும்?"
"அரசே! சேர அரசர் உயிர் பிழைத்ததால் புகழில் உயர்ந்து விட்டார். புலவர்கள், சான்றோர்கள் எல்லோரும் சேர அரசரையே புகழ்ந்து பேசுகிறார்கள். நீங்கள் போரில் அடைந்த வெற்றிப் புகழும் மங்கி விட்டது."
"புலவரே! போரில் பெருவீரம் காட்டி வென்றவன் நான். என்னிடம் தோற்று உயிர் பிழைத்தவன் சேர அரசன். அவனை இந்த உலகம் புகழ்கிறதா? கேட்பதற்கு வேடிக்கையாக உள்ளதே?"
"அரசே! உங்கள் வேல் சேர அரசரின் மார்பில் ஆழமாகப் பாய்ந்தது. முதுகைத் துளைத்து வெளியே வந்தது."
"என் வீரத்திற்கும் வலிமைக்கும் அந்த வேலே சான்று ஆகிறதே."
"அரசே! உங்கள் வேலால் நிலத்தில் வீழ்ந்தார் சேர அரசர். வீரர்கள் அவரைக் கருவூருக்கு எடுத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் அரிய பச்சிலைகள் கட்டினார்கள்.
ஒரே திங்களில் அவர் மீண்டும் பழைய வலிமையைப் பெற்றார்.
மார்பிலும் முதுகிலும் வேல் குத்திய வடு இருப்பை அறிந்து துடித்தார்."
"இதில் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? புலவரே"
"அரசே! விழுப்புண் பட்ட வடு மார்பில் இருந்தால் பெருமை. நேருக்கு நேர் நின்று போர் செய்தவர். எதிரியின் படைக் கலங்களை மார்பில் தாங்கியவர் என்று புகழ்வார்கள். முதுகில் வடு இருந்தால் புறமுதுகு காட்டி ஓடி வந்தது ஆகாதா? அது வீரர்களுக்கு மாறாப் பழி தரும் செயல் அல்லவா?"
"ஆம் புலவரே! புறமுதுகிட்டு ஓடுவது மிக இழிவான செயல். அப்படிப்பட்டவனை ஈன்ற தாய் வேண்டாள். மனைவி விரும்பாள். உற்றாரும் மற்றோரும் வெறுப்பார்கள்.
இதில் சேர அரசர் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? என் வேலை அவர் மார்பில் தாங்கியதை எல்லோரும் அறிவார்களே. அதே வடுதானே முதுகில் உள்ளது."
"அரசே! சேர அரசர் மானம் மிக்கவர். முதுகில் வடு உள்ளது. உண்மை அறியாதவர்கள் என்ன நினைப்பார்கள்? புறமுதுகு காட்டியதால் ஏற்பட்ட வடு என்று தானே நினைப்பார்கள். என்ன செய்வது என்று கலங்கினார்.
அந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கும் முடிவிற்கு வந்தார்."
"என்ன! செய்யாத பழிக்காக வடக்கிருக்க நினைத்தாரா? இதைப் புலவர்களும் சான்றோர்களும் தடுக்க வில்லையா?"
அரசே! சேர அரசரின் செயலை எல்லோரும் தடுக்க முயற்சி செய்தார்கள்.
ஆனால் அவரோ எம் சேரர் குடி மானம் மிக்க குடி. என் முன்னோன் ஒருவன் பகைவரால் சிறையிடப்பட்டான் காலந்தாழ்த்து வந்த நீரைப் பருகாமல் உயிரை விட்டான்.
அப்படிப்பட்ட உயர்ந்த மரபில் வந்தவன் நான். என்னைப் புறப்புண் கண்டவன் என்றால் குடிக்கே இழுக்கு நேருமே. என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் வடக்கிருந்து உயிரைத் துறப்பது உறுதி என்றார்.
"பிறகு என்ன நடந்தது புலவரே?"
"வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. அரசர் வடக்கிருப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்து எடுத்தார்கள். அங்கேயே வடக்கிருந்து உயிர் துறந்தார் அவர்."
"ஆ! என்ன சேர அரசரின் மானச் சிறப்பு! செயற்கருஞ் செயலை அல்லவா அவர் செய்து விட்டார். செய்யாத பழிக்காக இதுவரை யார் உயிரைத் துறந்து இருக்கிறார்கள்? அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்".
"அரசே! போரில் பெரு வீரம் காட்டி வெற்றி பெற்றவர் நீங்கள். உங்களிடம் தோற்ற சேர அரசரோ புறப்புண்ணுக்கு நாணினார். வடக்கிருந்து உயிர் துறந்தார். உங்கள் புகழை விட அவர் புகழையே சிறப்பித்துப் பாடுகிறார்கள் புலவர்கள்."
"புலவரே! என் வீரத்தினும் சேர அரசரின் மானம் உயர்ந்து நிற்கிறது. வென்ற நான் தோற்றவனாகி விட்டேன். தோற்றும் அவர் புகழில் என்னை வென்று விட்டார். வாழ்க அவர் புகழ்" என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் கரிகாற் பெருவளத்தான்.
1. "நனியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
செனறமர்க் கடந்தனின் னாற்றற் றோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப் 
புறப்புண் ணாகி வடக்கிருந் தோனே"
(புறநானூற்றுப் பாடல் 66, வெண்ணிக் குயத்தியார் பாடியது)

Friday, April 24, 2015

ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்

தமிழ்நாடு குலாலர் பேரியக்கதின் அடுத்த கட்ட முயற்ச்சி நமது குலாலர் தளத்தின் குலாலர் சாமுதய செய்திகளை உடனுக்குடன் உங்கள் தொலைபேசியில் தெரிந்து கொள்ள ஒரு ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை உருவாக்கி உள்ளோம் இதை நீங்கள் பதிவிறக்கம் செய்யா 


இதை கிளிக் செய்யவும் Downloads















இந்த  அப்ளிகேஷனை Downloads  செய்த உறவுகள் நமது அனைத்து குலாலர் சொந்தகளுக்கும் SHAREit முலமாக அனுப்புங்கள் 




Tuesday, April 21, 2015

கட்டிக்குளம் சூட்டுக்கோள் மாயாண்டி சுவாமிகள் அற்புதங்கள்




1926ல் மாயாண்டி சுவாமியாரைச் சந்தித்த ஒருவர் கட்டிக்குளம் சூட்டுக்கோள் மாயாண்டி சுவாமிகள் பற்றியும் அவரின் அற்புதங்கள் பற்றியும் கூறினர் அதை நாம் இந்த  பதிவில் காணலாம்




1926ல் நான் முதல் முதலில் கட்டுக்குளம் சுவாமியாரைச் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது பதினான்கு. கட்டுக்குளம் சுவாமியாரு க்கு மாயாண்டி சுவாமியார் என்றும் மற்றொரு பெயரும் உண்டு. இவர் குயவர் வகுப்பைச் சேர்ந்தவர். ஓர் ஒற்றை மாட்டு வண்டியில் போய்க் கொண்டிருந்தார்: ஓர் இடத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மேல் தங்குவதில்லை. முக்கியமாக மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இவர் வண்டியில் போய்கொண்டிருந்தார்.
சுவாமிகள் வண்டியில் மண்ணால் செய்த ஒரு வண்ணான் சால் வைத்திருந்தார். வண்டி ஓர் ஊருக்குள் அல்லது நகரத்திற்குள் சென்றதும் மக்கள் சாதம், சமைத்த காய்கறி, சாம்பார், ரசம், பருப்பு, மோர், தயிர் உறித்த வாழைப்பழம் (மாமிச பண்டங்கள் நீங்கலாக) முதலிய உணவுப் பொருள்களை அந்தச்சாலில் போடுவார்கள். (அவரவர்கள் வீட்டில் இருக்கும் உணவுப்பண்டங்களைப் போடுவது வழக்கம்) சால் நிறைநததும் அந்தக் கதம்பத்தைக் கிளரிச் சுற்றி இருக்கும் மக்கள் ஒவ்வொரு வருக்கும் ஓர் உருண்டை கொடுப்பர். அவரும் இரண்டு உருண்டை சாப்பிடுவர். பிறகு சாலில் தண்ணீர்க் கொட்டி அதைக் கலக்கி மக்களுக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்துத் தாமும் அதைக் குடிப்பர்.
1926ம் ஆண்டு கோடை வீடு முறைக்கு நான் சென்னையிலிருந்து மதுரைக்குப் போனேன். மதுரையில் என் தகப்பனார் நீதிபதியாகப் பணியாற்றிவந்தார். அப்போது சுவாமியார் பிரபல புத்தக வியாபாரியான கோபாலகிருஷ்ண கோன் வீட்டுத்தோட்டத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்குச் சென்றேன். சுமார் 100 நபர்கள் ஆடவரும், மகளிரும் சுவாமியாரைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர் வழக்கம் போல் சாலில் உணவுப் பண்டங்களைக் கையால் கலந்து அதை வினியோகம் செய்து கொண்டிருந்தார். அவர் செய்வது எனக்கு அருவறுப்பாய் இருந்தபடியால் அவர் கொடுக்கும் உருண்டையை வாங்காமல் நான் ஒதுங்கி நின்று கொண்டிருந்தேன். என்னையாரும் கவனிக்கவில்லை. நான் அந்நகரின் நீதிபதியின் புதல்வன் என்பதும் யார்க்கும் தெரியாது. ஆனால் நான் மட்டும் உணவு உருண்டையை வாங்கவில்லை. என்பதைச் சுவாமியார் கவனித்து என்னை அருகில் அழைத்தார். தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அவர்கைகளை சுத்தமாக கழுவினார். பிறகு ஒரு வாழை இலையில், வாழைப்பழம், திருகினதேங்காய், நாட்டுச்சக்கரை ஆகியவைகளைக் கலந்து வைத்துக் கொண்டு என்னைப்பார்த்து சொன்னார். ‘தம்பி நான் மற்றவர்களுக்குக் கொடுத்த உணவு உருண்டை உனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆனால் சுத்தமாக உனக்குப் பஞ்சாமிருதம் செய்திருக்கிறேன்; இதைச்சாப்பிடு. என்னிடம் வந்தயாரும் பிரசாதம் வாங்காமல் போகக் கூடாது, என்றார். நான் மகிழ்ச்சியுடன் பஞ்சாமிருதத் தைச் சாப்பிட்டேன். நான் விடை பெற்றுப் போவதற்கு முன் சுவாமியார் என்னைப் பார்த்துச் சொன்னார்.
சொன்னதும் நடந்ததும்:
‘நீ பெரியவனானதும் உனக்கு ஓய்வே இருக்காது. நீ ‘‘சுந்தர் அனுபூதி” ‘’சுந்தர் அலங்காரம்” என்னும் இரண்டு நூல்களையும் நாள் தோறும் படித்து வந்தால் போதும் என்றார் அதற்கு நான் பதில் உரைத்தேன். சுவாமி, நான் என் தகப்பனாரைப் போல் கஷ்டப்பட்டு வேலை செய்யமாட்டேன். எனக்கு எப்போதுமே போதிய ஓய்வு இருக்கும் என்றேன். அதற்கு சுவாமியார் பதில் சொன்னார் போகப் போக உனக்கு உணவு சாப்பிடக் கூட அவகாச மில்லாமல் கஷ்டப்படுவாய் என்றார். சுவாமியார் சொன்னபடி ‘‘கந்தர் அனுபூதியை” மனப்பாடம் செய்து இன்று வரை துதித்து வருகிறேன். நான் சென்னை மருத்து வக் கல்லூரியில் பல ஆண்டு கள் பணிபுரிந்து வந்தேன். அப்போது பல அரசாங்க வேலைகளைப் பொறுப் பேற்று நடத்த வேண்டி வந்தது. உறங்குவதற்கும், காலா காலத்தில் உணவு அருந்துவதற்கும் அவகாச மில்லாமல் கஷ்டப்பட்டேன். அப்போது 1926ல் சுவாமிகள் சொன்ன வார்த்தைகள் அடிக்கடி என் நினைவுக்கு வரும்.
தெய்வீக ஆற்றல் :
1926க்குப் பிறகும் சுவாமிகளைப் பற்றியும் அவர் சம்பந்தப்பட்ட சில நிகழ்ச்சிகளைப் பற்றியும் கேள்விப்பட்டேன். அவருக்குச் சில நோயாளிளைக் குணப்படுத்தும் தெய்வீக ஆற்றல் இருந்தது. நோயாளி களுக்கு ‘‘ஓம் நமச்சிவாய” என்று சொல்லி விபூதி ‘’மலேரியா ” சுரத்திற்கு கொடுத்தால் சுரம் நீங்க சில நாள்கள் பிடிக்கும். ஆனால் சுவாமியார் விபூதி கொடுத்தால் நோயாளி உடனே சுரம் நீங்கி எழுந்து விடுவான். ஆனால் சில சமயங்களில் சுவாமியார் விபூதி கொடுக்க மறுத்து விடுவார். அந்தச் சமயங்களில் நோயாளி தேறியது இல்லை.
எங்கள் வீட்டில் நிகழ்ந்தது :
என்னுடைய மூத்த தமயனார் வாசுதேவனுக்கு விடாமல் சுரம் அடித்துக் கொண்டிருந்தது. ஆறு மாதமாகியும் டாக்டர்களால் இன்ன சுரம் என்று கண்டு பிடிக்கவில்லை. என் தகப்பனார் சுவாமியாரை வீட்டுக்கு அழைத்து வந்து என் தமயனாரைக் காண்பித்தார். சுவாமியார் நோயாளியைப் பார்த்த உடன் விபு+தி கொடுக்காமல் ‘’நான் ஒரு குயவன் எனக்கு என்ன தெரியும்” என்று சொன்னார். விடாமல் என் தகப்பனார் வற்புறுத்த ‘’பிரயோஜன மில்லை” என்று சொல்லி விபூதி கொடுத்தார். சில நாள்களுக்குப் பின் என் தமையனார் காலமாய் விட்டார்.
நான் அறிந்த நிகழ்ச்சி :
மற்றொரு சம்பவம் நான் ஒரு டாக்டரிடம் இருந்து கேள்விப் பட்டேன். அந்த டாக்டர் சுவாமி யாரிடம் போனாராம். டாக்டரைப் பார்த்ததும் சுவாமியார் சொன்னார், உன்னுடைய இரண்டு பிள்ளை களுக்கும் சுரமாயிருக்கிறார்கள், அதற்காக நீ என்னிடம் வந்திருக் கிறாய், உன்னுடைய இரு பிள்ளைகளில் ஒருவன் மாண்டுவிட்டான். நீ திரும்பிப் போவதற்குள் அவனுக்குத் தகனம் கிரிகைகள் முடிந்து விடும். உன் மற்றொரு பிள்ளை சுரம் நீங்கி சௌக்கியமாக இருக்கிறான் என்று கூறினாராம். இதைக் கேட்ட டாக்டருக்கு ஒரு பக்கம் துக்கம், ஒரு பக்கம் கோபம். ‘‘என் ஒரு பிள்ளை மாண்டிருந்தாலும், நான் திரும்பும் வரை சவத்தை பந்துக்கள் வைத்திருப்பார்கள். நானில்லாமல் சவத்தைத் தகனம் செய்ய மாட்டார் கள். நீங்கள் சொல்வது வெறும் பிதற்றல்” என்று ஆவேசத்துடன் கூறிவிட்டு உடனே காரில் ஏறி வீடு நோக்கிச் சென்றார். நாற்பது மையல் கடக்க வேண்டியிருந்தது. அவர் வீட்டுக்குப் போவதனால் சுடுகாட்டைத் தாண்டித்தான் போக வேண்டும். கடுகாட்டை அடைத்ததும் தன் உறவினர்கள் சாலை ஓரம் நிற்பதைக் கண்டார். மாண்ட தன் மகன் தகனக்கிரிகைகள் முடிந்து விட்டது. என்று கேள்விப்பட்ட அவர், ‘’ஏன் நான் வரும் வரையில் சவத்தை வைத்திருக்கவில்லலை” என வினாவினார். பெரிய அம்மையால் மாண்ட தன் மகன் சவத்தை உடனே தகனம் செய்ய வேண்டு மென்று நகர அதிகாரிகள் உத்தரவிட்;டார்கள் என்பதை அவர் அறிந்தார். அதன் பிறகு வீட்டிற்குச் சென்றார். மற்றொரு மகன் ஓடிவந்து தகப்பனாரைக் கட்டிக்கொண்டான். டாக்டர் பின் சுவாமியாரிடம் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என்பது உண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியாகும்.
சுவாமியின் சித்துகள் :
சில சமயங்களில் சுவாமியார் மாட்டு வண்டியை விட்டுவிட்டு நாள் கணக்கில் அன்ன அகாரமின்றிக் காட்டில் தவம் செய்து வருவார். வேறு சில சமயங்களில் சில பேருக்கு அவர்கள் எதிர்காலத்தைப் பற்றச் சொல்லுவார். அதன்படி நடக்கும். சிலருக்குச் சித்தின் மூலம், லட்டு, ஜாங்கிரி முதலிய இனிய தின்பாண்ட ங்களம், மலர்களும் வரவழைத்துக் கொடுப்பார். மாணவர்கள் அவரை அணுகித் தேர்வுக்குப் போவதற்கு முன் அவரிடம் விபூதி வாங்கிப் போவார்கள். அவர் கொடுத்த விபூதி யை இட்டுக் கொண்டு போனால் தேர்வில் வெற்றி பெறுவார்கள். ஒரு சமயம் ஒரு மாணவன் அவரை அணுகி விபூதி கேட்டான் அவர் கொடுக்கவில்லை. அவன் விடாமல் வற்புறுத்தவே விபூதி கொடுத்தார். அவன் சென்றதும் சுவாமியார் அந்த மாணவன் தேர்வில் தேர்ச்சி பெற மாட்டான். என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் சொன்னார். அதே பிரகாரம் மாணவன் தேர்வில் வெற்றி பெறவில்லை. கொடுத்த விபூதியை ஒரு காகிதத்தில் மடித்துச் சட்டைப் பையில் வைத்திருந்தான். அவன் வீட்டில் அவன் அன்னை அந்தச் சட்டையை (விபூதியுடன்) சலவை க்குப் போட்டு விட்டாள். மாணவனும் விபூதியைப் பற்றி மறந்துவிட்டான். தேர்வுக்குப் போவதற்கு முன் தான் ஞாபகம் வந்தது.
வருவது உணர்ந்த ஞானி :
அவர் மறைவதற்கு ஒரு வருடத்திறகு முன்னரே அவர் எந்த இடத்தில் எந்தக்காலத்தில் சமாதி அடைவார் என்று சொல்லியிருந்தார். அவர் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்தார்கள். மக்களுடன் பேசிக்கொண்டேயிருந்த சுவாமிகள் குறிப்பிட்ட நிமிடத்தில் எல்லோ ரையும் கை கூப்பி வணங்கி ‘’ஓம் நமசிவாய” என்று சொல்லிக் கொண்டே சமாதி அடைந்தார்.
இந்தச்சித்தரின் வாழ்க்கை யிலிருந்து முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில் அவர் எல்லா மதத்தாரையும் சமமாக நடாத்தினார். ஒருவருக்கும் (பிராணிகள் உற்பட) தீங்கு செய்யக் கூடாது என்று சொல்லி வந்தார். அவரைப் பற்றிக் குறை கூறியவர்களையும் அவர் அன்போடு நடத்தினார். பாரத தேசமாகிய இந்தப் புண்ணிய பூமியில் தோன்றிய அனேக சித்தர்களில் இவரும் ஒருவர் ஆவார்..............
வாழ்க குலாலர் 
வளர்க சமுதாய ஒற்றுமை
ஓங்குக வீரன்சாலிவாகனன் புகழ்
திக்கெட்டும் பட்டொளி வீசி பறக்கட்டும் குலாலர் கொடி

Monday, April 20, 2015

சாலிவாகன சகாப்தம் குருபூஜை விழா








சித்திரை 1 அன்று நடைபெற்ற சாலிவாகனன் குருபூஜை விழா









Monday, April 13, 2015

வீர வேந்தன் சாலிவாகன சகாப்தம் வரலாறு






பிறப்பு

தாயார் .ஆதி சேஷன் ஆரவேளியம்மை தம்பதிக்கு கி.பி 78 இல் மகனாகப்  பிறந்தார் 


இவரது பிறப்பு தெய்வத்தின் அருளால்வந்தது என்றே கூரலாம் ஏன் என்றால் இவர் பிறந்த குலம் குலாலர் குலம் தன் நாட்டில் அடிமைகளாக வாழும் மக்களை மீட்டெடுக்க வீர போர்நடத்தி வெற்றி கண்டவர்,,வீர வேந்தன் சாலிவாகனன்
                                                                                                                                   புரந்தரபுரி ஊரில் உள்ள குலாலசேரியில் தங்கி அங்கு ஆண்குழந்தையைப் பெற்று அங்கேயே வசித்தும் வந்தனர் ஆதி சேஷன் ஆரவேளியம்மை தம்பதிகள். அந்தச் சிறுவனுக்கு ‘சாலிவாகனன்’ எ னப் பெயர்சூட்டினர். அவர் தினமும் அங்கு சிறுவர்களுடன் விளையாடி வந்தான். அவன் விளையாட்டு அரசன், மந்திரி, ராஜாங்கம் போன்ற விளையாட்டாகவே இருந்தது. ஐந்து வயதே நிரம்பாத இந்த சிறுவன் அரச வாழ்க்கையை பார்த்தது கூடக் கிடையாது. பின் எப்படி தெரியும் என எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். விளையாடும் போது அந்த வழிவந்த ஒரு பிராமணர் இவனுடன் உண்மையைப் போல விளையாடினார். பிராமணர் அந்த சிறுவனான அரசனுக்கு பஞ்சாங்கம் சொன்னார். அதனால் அந்த சிறுவன், தான் ஒரு அரசன் என்பதைப் போல கருதிக்கொண்டு அவருக்கு ஒரு குடம் கொடுக்கச் சொன்னான்.இளம் வயதினிலேயேதன் குலத்தொழிலைநன்கு கற்றுத்கொண்டார்


இளமைபருவம்;


புரந்தரபுரி ஊரில் மிகப்பெரிய வசதி படைத்த செல்வந்தனான வியாபாரி ஒருவர் வசித்துவந்தார். அவருக்கு நான்கு மகன்கள். அவர் முதுமை எய்தி இறக்கும் தருவாயில் தன் மகன்களை அழைத்து,
                     “ மைந்தர்களே! என்னுடைய மரணத்திற்கு பின் உங்களுக்குள் சச்சரவு வரக்கூடாது. என்னுடைய சொத்துக்களை நீங்கள் பாகம் பிரித்துக் கொள்ள ஏதுவாக நான்கு பாகங்களாக பிரித்து என்னுடைய கட்டிலின் கீழே நான்கு அடி ஆழத்தில் நான்கு கால்களின் அடியில் புதைத்து வைத்து உள்ளேன். பெரியவனிலிருந்து சிறியவன் வரை முறைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார்.

சிலநாட்களில் வியாபாரி இறந்துவிட்டார். அவர் சொல்லியபடி கட்டிலின் அடியில் தோண்டியபோது நான்கு கால்களின் அடியிலும் நான்கு செப்புக் குடங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த குடங்களில் பொன்னோ நகையோ வைர வைடூரியங்களோ எதுவும் இல்லை. முதல் குடத்தில் மண்ணும் இரண்டாவதில் வைக்கோலும் மூன்றாவதில் எலும்புத்துண்டுகளும் நான்காவதில் கரியும் இருந்தன.


இதை வைத்துக் கொண்டு எப்படி பாகம் பிரிப்பது என்று அவர்களுக்குப் புரியவில்லை. எனவே பஞ்சாயத்தார் வசம் சென்று பிரித்துத் தரும்படி கூறினர். அவர்களுக்கும் இதை எப்படி பாகம் பிரிப்பது என்று புரியவில்லை! எனவே விக்கிரமாதித்த மன்னனிடம் அனுப்பினர்.


    விக்கிரமாதித்தனுக்கும் அவனது சபையில் இருந்தோருக்கும் கூட இந்த வழக்கின் தீர்ப்பை சொல்ல முடியவில்லை! கரி, மண், வைக்கோல், எலும்புத்துண்டுகள் இதை எப்படி பாகம் பிரிப்பது என்று அறிஞர்களும் கைவிரித்துவிட நான்கு சகோதரர்களும் மிகவும் விசனத்துடன் ஊர் திரும்பினர்.



   

அவர்கள் திரும்பி வரும் வழியில் குலாலசேரி   என்ற ஊரில் தங்கினார்கள். அங்கே சாலிவாகனன் இருந்தார். அவர் சிறந்த அறிவாளி. அவரிடம் தங்கள் வழக்கைக் கூறினர் நால்வரும்.

அவர், உங்கள் தந்தை செலவந்தர் மட்டுமல்ல! அறிவாளியும் கூட, அதனால்தான் இவ்வாறு பிரித்து வைத்துவிட்டு போய் உள்ளார். தன்னுடைய சொத்துக்களை உங்கள் நால்வருக்கும் அவரவருக்கு தகுந்தவாறு பிரித்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.


வயதில் மூத்தவன் மண் நிறைந்த குடத்தையும், இரண்டாமவன் வைக்கோல் இருந்த குடத்தையும், மூன்றாமன் எலும்புதுண்டுகள் இருந்த குடத்தையும், கடைசிநபர் கரித்துண்டுகள் நிறைந்த குடத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பொருள் என்ன வென்றால், மண் என்பது நிலத்தையும், வைக்கோல் என்பது தானியத்தையும், எலும்புத்துண்டுகள் கால்நடைகளையும், கரி என்பது தங்கள் வெள்ளி வைரங்களையும் குறிக்கிறது.


இதன்படி மூத்தமகன் நிலத்தையும் இரண்டாமவன் அவர் சேமித்த தானியங்களையும் மூன்றாமவன் கால்நடைகளையும் நான்காமவன் நகை ஆபரணங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னான். சாலிவாகனனது தீர்ப்பால் மகிழ்ந்த நால்வரும்  அவனிடம் விடைபெற்று அவன் சொன்னபடி பங்கீடு செய்து கொண்டார்கள்.


போர் துவக்கம்


இந்த விஷயம் விக்கிரமாதித்த மன்னனை சென்றடைந்தது. அறிவாளியான சாலிவாகனனை சந்திக்க விரும்பி பிரதிஷ்டான நகரத்திற்கு சேவகன் ஒருவனை அனுப்பி சாலிவாகனனை அழைத்துவரச் சொன்னான். ஆனால் சாலிவாகனன் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டார். விக்கிரமாதித்தன் பேரரசனாக இருந்தாலும் அவனும் மனிதன் தானே! அவனை பார்க்க நான் போகமாட்டேன். அவனுக்கு காரியம் ஆகவேண்டுமானால் இங்கு வரட்டும்! நான் வரமாட்டேன்! என்று சொல்லிவிட்டார் சாலி வாகனன்.விக்கிரமாதித்த அந்த நாட்டுமக்களை அடிமைகளாக கொடுமை படுத்தி ஆட்சி நடத்தி வந்தனர்  விக்ரமாதித்தனும் காளி தேவியை வேண்டி வரம் இருந்து பட்டி 200வருடமும் விக்ரமாதித்தன் 100 வருடமும் அரசாளுவார்கள் என்று வரம் பெறுகிறார்கள் இதையெல்லாம் மனதில்

வைய்த்து தன் நாட்டில் அடிமைகளாக வாழும் மக்களை மீட்டெடுக்க வீர போர் நடத்த வேண்டும் என்று இளம் வயதிலேயே முடிவெடுத்தார் அதற்கான சரியான நேரம் இதுதான் என முடிவு செய்தார்



தன்னுடைய அழைப்பை சாலிவாகனன் நிராகரித்தமையால் கோபம் கொண்ட விக்கிரமாதித்தன் பிரதிஷ்டான நகரம் மீது படையெடுத்துச் சென்று கோட்டை வாயிலில் நின்று மீண்டும் சாலிவாகனனுக்கு எச்சரிக்கை அனுப்பினான். ஆனாலும் சாலிவாகனன் தானும் படையுடன் சந்திப்பதாக சொல்லி மண்ணினால் சேனைகளை பொம்மைகளாக உருவாக்கினான். தன்னுடைய அதிசய சக்தியால் அவைகளுக்கு உயிர் கொடுத்தான்.


மண் பொம்மைகளாக இருந்த வீரர்கள், ரதம், யானை, குதிரை உயிர்பெற்று எழுந்து சித்திரை 1  படையெடுத்தன. சாலிவாகனன் தலைமையில் வந்த படையை எதிர்த்து விக்கிரமாதித்தன் படைகள் மோதின. இருபுறத்து சேனைகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதில் பல்லாயிரக் கணக்கானோர் மடிந்தனர். இறுதியில் சாலிவாகனனது சேனைகள் வெற்றி கண்டது 


புரந்தரபுரி நகரமே மகிழ்ச்சி அடைந்தது சேனைகள் படை சுட நகருக்கு வந்தார் மான்னர் சாலிவாகனன் மக்களை அழைத்து இன்று தான் நமது விடுதலை வந்துள்ளது இனி இங்கு மக்கள் ஆட்சி நடக்கும் என்று கூறி மான்னரக மகுடம் சூடினார்  

அரசன் சாலிவாகனன் சித்திரை 1 நமது புதுவருடப்பிறப்பாக கொண்டாட வேண்டும் என ஆணைபிறப்பித்தார் அதன் மூலம் தான் இன்றலவும் நாம் சித்திரை1 தமிழ் புத்தண்டாக கொண்டாடி வருகிறோம் இதையும் ஒரு சில அரசியல்வாதிகள் மாற்றினார்கள் இப்படி ஒன்று ஒன்றாக தமிழ் சமுதாயத்திற்கு குலாலர்களின் பங்களிப்பை மறைக்க சதி செய்கிறார்கள்



சிறந்த முறையில் ஆட்சி  நடத்தி வந்த சாலிவாகன மன்னர் சிறுசிறு போர்களை நடத்தி அண்டை நாடுகளையும் கைபற்றி 56 தேசங்களை ஒரே குடையின் கீல் ஆட்சி செய்தார் சாலிவாகன சகாப்தம்




 .......................................................................................................................................................................................................................

சாலிவாகன மன்னர் பற்றிய ஒரு சில குறிப்புகள்
 வரலாறு ஆசிரியர்கள் எழுதிய நுளில் இருந்து எடுக்க பட்டது 



சாலிவாகன மன்னர் பற்றிய ஒரு சில குறிப்புகள்


சாலிவாகனபேரரசு

SatavahanaMap.jpg
சாதவாகனப் பேரரசின் எல்லைகளும் (தொடர்க் கோடு) கைப்பற்றிய பகுதிகளும் (புள்ளிக் கோடு).
ஆட்சி மொழிகள்
தமிழ்
சமஸ்கிருதம்
தலைநகரங்கள்புரந்தரபுரி தரணிக்கொட்டா/அமராவதி
அரசு முறைமுடியாட்சி
குலம்குலாலர் குயவர்
பின்வந்ததுஇஷ்வாகுகள்,கடம்பர், மேற்குச் சத்திரப்புகள்.































1) சித்திரை 1 நமது தமிழ் புதுவருடப்பிறப்பாக அறிவித்துஆணைபிறப்பித்தார்

2) சாலிவாகன ஆண்டு இன்றலவும் நடைமுறையில் உள்ளது சாலிவாகன ஆண்டை இந்து நாட்காட்டி, இந்திய தேசிய நாட்காட்டி, கம்போடிய பௌத்த நாட்காட்டி இம் முறையையே பின்பற்றுகின்றனர்   இந்திய தேசிய நாட்காட்டியில்  ( சக ஆண்டு) என்று சுருக்கமாக இருக்கும் 

3) தமிழகத்தில் பெரும் சிறப்போடு விளங்கும் பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் இன்றலவும் சாலிவாகனன்,அரசர் பெயரால் நடத்த படுகிறது  பொய்க்கால் குதிரை  

கோரக்கர் என்ற சித்தர் சாலிவாகனன் பற்றி பதிவு செய்துள்ளார் 
சந்திரரேகை என்ற நூலில் பக்கம் 194 முதல் பக்கம்199 வரை சொல்லியுள்ளார்
சாலிவாகனன் (திரைப்படம்) மன்னர் சாலிவாகனனின் முழுமையான வரலாற்றை திரைப்படமாக  தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டத்திலேயேஎடுத்து உள்ளனர்  திரைப்படத்தின் பெயர் சாலிவாகனன் சகாப்தம்1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சகாப்தத்தின் சொந்தக்காரர் யார் தெரிமா நம் குல மன்னன் தான் வீர சகாப்தம் சாலிவாகனன்

இன்றைக்குசுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த சாலிவாகனன் பல வெற்றிகள் பெற்று பெரும் நிலப் பரப்பைஆண்ட பேரரசன். அவன் தன் ஆட்சியில்ஏற்படுத்திய வருடக்கணக்கு இன்றும் ஆந்திர, கர்நாடகப் பகுதிகளில்உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த மாவீரனை மக்கள் மறந்து விட்டனர் ஆனால் வரலாறு மறக்கவில்லை ...........

அடுத்த வருடம் சித்திரை 1



நமது குலாலர் சமுதாயதின் குலதெய்வமான. மாவீரன் சாலியவாகனனுக்கு தமிழ் நாட்டில் மணிமண்டபம் அமைத்து  அவருக்கு குருபூசை நடத்துவோம்

ஓங்குக வீரன்சாலிவாகனன் புகழ்
திக்கெட்டும் பட்டொளி வீசி பறக்கட்டும் குலாலர் கொடி