சென்னை: குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் பகுதியில்அகில உலக மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் மாநாடு தொடங்கியது. தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத் தலைவர் சேம.நாராயணன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் கணபதி வரவேற்றார். மாநில பொருளாளர் மகேஷ் கண்ணன், இளைஞரணி தலைவர் பழனி முன்னிலை வகித்தனர். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் டிகேஎம்.சின்னையா ஆகியோர் மாநாட்டை துவக்கிவைத்து பேசினர். முன்னதாக தேசிய தலைவர் ராம்பிர்கிஷ் கே.பிரஜாபதி கலந்து கொண்டு, சங்கக் கொடியை ஏற்றிவைத்தார்.
மாநாட்டில், 2014-15ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மூலம் தமிழக அரசு காதி மற்றும் கிராம தொழிலில் பதிவு செய்யப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் மழைக் காலங்களில் மண்பாண்டம் செய்வது கடினம் என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வாழ்வாதார உதவித் தொகையாக ₹4 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்குவது என அரசு அறிவித்ததன் அடிப்படையில் 12,236 குடும்பங்களுக்கு ரூ.4.89 கோடி வழங்கியதற்காகவும், 2015-16-ம் ஆண்டில் நிவாரண நிதியுதவியாக ரூ. 5 கோடி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழச்சியில், ஏராளமான மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர் கலந்த கொண்டனர்.
Friday, February 19, 2016
Thursday, February 18, 2016
Thursday, February 4, 2016
குலாலர் சிங்கங்களே அலைகடலாய் எழுங்கள்
Subscribe to:
Posts (Atom)