குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Tuesday, January 29, 2013

கடடிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்

திருவடியே சரணம்!மண்ணில் உதித்த மகான் ஒரு குலாலர் 



அருட்சித்தரான மாயாண்டி சுவாமிகள் கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள திருத்தலங்களுக்கெல்லாம் சென்று திருவருள்  பெற்று அற்புதங்கள் பல ஆங்காங்கே நிகழ்த்திக் காட்டியருளினார்கள். தென்பதிகளை அவர் தரிசிக்கச் சென்றபோது அப்போதைய இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதியும்,  சுவாமிகளை வரவேற்று நல்லாசியும் வாழ்த்துக்களும் பெற்றார்கள். அனைவராலும் சற்குரு மாயாண்டி சுவாமிகள் என போற்றப்பட்ட இவர் கட்டிக்குளத்திற்கு மேற்கே கருப்பனேந்தலில் தியானத்திருமடம் ஒன்றை உருவாக்கியருளினார்கள். அம்மண்டபம் ஞானபீடமாகப் புகழ் பெற்றது. பின்பு செளமிய ஆண்டு (1909) பங்குனி மாதம் விளாச்சேரி இ.பெரியசாமி வாத்தியார்,  விராட்டிபத்து பொன்னையா சுவாமிகள் ஆகியோருக்கு நல்லாசிகள் வழங்கி, திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலையில் அருள்பாலித்தார்கள்.
திருக்கூடல் மலையில் கட்டிக்குளம் அருள்மிகு மாயாண்டி சுவாமிகள் அருளாசி 
அருட்சித்தரான சுவாமிகள் திருக்கூடல் மலையை அ‍டைந்த மறுநாள் அதிகாலையில் சரவணப் பொய்கையில் நீராடி, அங்கே மண் எடுத்து, லிங்கமாகச் செய்து பூசை செய்தார்கள். பின்பு மலையின் மேல் பக்கத்தில் உள்ள குகை ஒன்றில்  அதனை ஆகம விதிப்படி வைத்து வழிபட்டார். அங்கேயே தங்கி தம்மை நாடிவரும் மெய்ஞ்ஞான அன்பர்களுக்கு மெய்ஞ்ஞான வாழ்வையும், உலகியல் பேறு  வேண்டுவோருக்கு சகல செல்வங்களையும் அருளாசியோடு வழங்கத்தொடங்கினார்கள். 
(ஆதாரம்-  மாயாண்டி சுவாமிகள் திருக்கூடல்மலை தலவரலாறு )
..........................................

(அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் வேண்டுவோருக்கும், உலகியல் துன்பம் நீங்கி இன்பம் வேண்டுவோருக்கும், வேண்டியதை வேண்டியபடியே  இன்றும் அரூப வழங்கியருளுகின்றார் மாயாண்டி சுவாமிகள்.  நீங்களும் ஒருமுறை திருக்கூடல் மலைக்கு சென்று சுவாமியின் சன்னதிக்கு சென்று வாருங்கள். வாழ்வில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். சுவாமிகள் ஜீவசமாதி அடைந்து விட்டாலும் இன்றும் என்னுடன் அரூபமாக தொடர்புகொண்டு அருளாசி செய்து வருகின்றார்கள். மானுடர்களின் பிறவிக் கணக்கை துல்லியமாக அறியக்கூடியவர் மாயாண்டி சுவாமிகள். நான் இந்தப்பிறவி எடுக்கும் முன்பாக வான்வெளியில் சுவாமிக்கு நான் கொடுத்த வாக்கை, இப்புவியில் நான் பிறவி ‍எடுத்த பிறகு, அவரின் இருப்பிடத்திற்கே,  2000 ம் ஆண்டு வாக்கில் (காந்தம் இரும்பை கவர்வது போல்) என்னைக் கவர்ந்து, அழைத்து, நினைவுபடுத்தி, "வந்து விட்டாயே" என்று கூறி அருளாசி வழங்கினார்கள். இந்நிகழ்ச்சி குறித்து பிறிதொரு நேரம் பதிவிடுகின்றேன்.
இந்த சம்பவத்தின் காரணகர்த்தர்களுள்,  மாயாண்டி சுவாமிகள் திருக்கோயிலுக்கு அருகில் ஜீவசமாதி கொண்டிருக்கும் அருள்மிகு சிவப்பிரகாச சுவாமிகளும், மேற்படி சிவப்பிரகாச சுவாமிகள் திருக்கோயிலின் தற்போதைய நிர்வாகி திரு. செளந்தர்ராஜனும் ஆவார்கள். மாயாண்டி சுவாமிகள் சன்னதிக்கு செல்பவர்கள், அருகிலுள்ள சிவப்பிரகாச சுவாமிகள் சன்னதிக்கும் சென்று வாருங்கள். 

திருக்கூடல் மலையின் மீது உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற்ற பின்னர், கடந்த 31.08.2011 அன்று முதல் முறையாக மதுரை நண்பர் ராம் (ராமசுப்பிரமணியன்) அவர்களுடன் மலையின் மீது செல்லும் அருட்பேறு எனக்கு கிடைத்தது.  ஆராவாரம் நிறைந்த மதுரை நகருக்கு அருகில் இப்படி ஒரு அமைதியும், ஆன்மீகமும் நிறைந்த திருக்கூடல் மலை என்னை ஆச்சரியப்படுத்தியது.  இந்த மலையில் ஆழ்நிலை தியானம் செய்ய விரும்புவர்களுக்கு ஏற்ற ‍சூழல் நிறையவே உள்ளது. எண்ணற்ற சித்தர்களின் அருளாற்றல் நிறைந்துள்ளதை உணரமுடியும். மலையின் மீதிருந்து பார்த்தால் மீனாட்சியம்மன் சன்னதியின் 
நான்கு கோபுரங்களும் தெளிவாக தெரிகின்றது. இங்கிருந்தே சொக்கநாதரையும், மீனாட்சியம்மனையும் சேவித்து மகிழலாம். மதுரை நகரின் ஆராவாரத்தில் எரிச்சலடைபவர்களும், பணிகளுக்கு இடையே ஆன்மீக சாதகம் செய்பவர்களும், வார இறுதி நாட்களில் இம்மலைக்கு சென்று மனமகிழ்ச்சி அடையலாம்.  ) 

கட்டிக்குளம் அருள்மிகு சூட்டுக்கோல் மாயாண்டிசுவாமிகளின் 81ம் ஆண்டு குருபூஜை விழா மதுரை திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுவாமியின் ஜீவசமாதி திருக்கோயிலில் 02.10.2011  அன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

குலாலர் மணமாலை




                மொழி வேறுபாடுகளை களைந்திடவும்,
குலம், கோத்திரம், வம்சம்,நாடு, ஊர், பட்டம் என 
மனித வாழ்க்கையை குறுக்கிக் கொண்டே போகும் குலாலர்களுக்கு வழி வாய்ப்புக்களை ஏற்படுத்தவும், 
கற்ற கல்விக்குரிய மதிப்பைக்கொடுக்கவும்.
வேலை வாய்ப்பினை அடையாளம் காட்டவும்,
உயர்ந்த இடத்தில் பெண்ணைகொடு , தாழ்ந்த இடத்தில் பெண்ணை எடு
என்கிற நல்வாக்கினை நிலைநாட்டவும்,
மாணவர்க்ளிடையே கல்வியை ஊக்கப்படுத்தவும், 
ஜோதிட மாயையில் சிக்குண்டு தவிப்பவர்களை வெளிக்கொணரவும்,
வரதக்ஷ்னை வலையில் சிக்காமல் இருக்கவும்,
உங்கள் விருப்பப்படி உங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கையை அமைக்கவும்,
குறிப்பாக ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயரவும் 
500 க்கும் மேற்பட்ட வரன் தேடும் குலால குடும்பத்தினரிடையே ஒரே நாளில் சந்திக்கவும், அறிமுகம் செய்து கொள்ளவும்,
அவர்களிடையே உடனடியாக ஜாதக பரிவர்த்தனை செய்து கொள்ளவும்,



போன்ற அனைத்து குறிக்கோள்களையும் தன்னகத்தே கொண்டு 
அறிவியல் பூர்வமாக சமூக சிந்தனையோடு நடத்தப்படுவதுதான் 
குலாலர் மணமாலை.


நமது உறவினர்கள் அனைவருக்கும் இந்த நிக்ழ்ச்சியைப்பற்றி தெரியப்படுத்தி, அவர்களோடும் கலந்து கொண்டு விழாவை சிற்ப்பித்து, வெற்ற்பெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தங்களன்புள்ள

குலாலர் நடராஜன் M.A . 9444 334768 Assistant Commissiner (C-Tax) Retd.
குலாலர் வெள்ளைசாமி 9677 816426
குலாலர் இராஜேந்திரன் 9842 335628
குலாலர் வெள்ளைசாமி 9952 863929