குலாலர் திருமகன்
கர்நாடகத்தின் ஹவேரி மாவட்டம், ஹிரேகெரூர் தாலுகாவைச் சேர்ந்த அபலூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர். திரிபதி என்று கூறப்படுகின்ற மூன்றடிகளைக் கொண்ட அவரது செய்யுள்கள் வசனா என வழங்கப்படுகிறது.
அவரது மொழிநடையையும் அவரைப்பற்றிய பிற அறிஞர்களின் குறிப்புகளையும் கொண்டு அவர் பதினாறாம் நூற்றாண்டின் பின்பகுதி அல்லது பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார்.[1]
அவரது இயற்பெயர் புசுபதத்தா என்று அவரது செய்யுள்கள் சிலவற்றில் உள்ள குறிப்புகள் மூலம் கணிக்கின்றனர். அவர் தந்தை ஓர் குயவர் பிறந்த குழந்தையுடன் காசிப்பயணம் மேற்கொண்டார். இதனால் சர்வக்ஞர் நாடோடி துறவியாகவே வளர்ந்தார்.கவிஞர், முற்போக்குச் சிந்தனையாளர், தத்துவவாதி, புரட்சிகர சிந்தனை உடையவர் என்று பன்முகம் கொண்டவர்.
இவரது படிப்பற்றவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான பாடல்கள் ஏழை மக்களைச் சென்றடைந்து மிகவும் வாய்மொழியாகவே பரவியது. தற்போது ஏறத்தாழ இரண்டாயிரம் செய்யுள்கள் 47 அல்லது 49 தலைப்புகளில் கிடைத்துள்ளன. இரண்டு அச்சு செய்யுள்கள் ஒன்றுபோல இருப்பதில்லை. தவிர இடைச்செருகல்களும் உள்ளன.அவை சமயம்,பண்பாடு,ஒழுக்கம்,குமுகம் என்ற பொருட்களில் உள்ளன.