அச்சம் என்பது மடமையடா..அஞ்சாமை திராவிடர் உடமையடா..
தேனி மாவட்டத்தில். பெரியகுளம் தொகுதி ஓர் அழகிய தொகுதி பச்சை பசேரென தென்னை மரங்களும், மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைகானலும் உட்பட்ட தொகுதி. இப்பகுதியில் கள்ளிப்பட்டி என்னும் கிராமம் அக்கிராமத்தில் பெரிய குடும்பம் என்றழைகின்ற அரசன் குலாலர் குடும்பம் ஏராளமான வயல் வெளிகளுடன் பண்ணையாருக்குரிய மதிப்பு கொண்டது அவரின் குமாரர் முத்து பையம்மாள் தம்பதியரின் மகனாக 1956 ம் ஆண்டு டிசம்பர் 11 ல் பிறந்தார் வீராச்சாமி எருது கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த குடும்பம். கால சக்கரத்தால் வழக்கு நீதிமன்ற படிகளில் ஏறியது . அதனால் சொத்துகளும். சுகங்களும் பறந்தோடன. குலத்தொழிலான மண்பாண்ட தொழில் அவர் குடும்பத்தை பசியாற வைத்தது .
நீண்ட நெடுந்தோளும், அகண்ட மார்பும் அனைத்து அம்சங்களுடன் வளர்ந்த வீராச்சாமி கடினமாக உழைத்தார்.கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதால் குடும்பம் மீண்டும் தழைந்தது மண்பாண்ட தொழிழும் நாட்டு செங்கல் உற்பத்தியை துவங்கினார். சிறுவயது முதலே எம் . ஜி . ஆர் நடித்த திரைப்படங்களில் ஆர்வம் மிக்கவர் அவரின் தீவிர ரசிகரும் ஆவார். அவரைப் போலவே அஞ்சா நெஞ்சம் கொண்டவராக வளர்ந்தார். சமூக ஈடுபாடு ஏழைகளுக்கு உதவுதல். அனைத்து சமூகத்தினருடன் பழகுதல் போன்ற குணங்கள் குலாலானுக்கு பிறப்பிலே உண்டு எம் .ஜி .ஆர். புதிய கழகத்தை துவங்கி தமிழக முதல்வராக பதவி ஏற்றபின் கட்சி நடவடிக்கைளில் பங்கு கொண்டார் 1980 ல் தீவிர அரசியலில் பங்கு கொண்டவர்.எம் .ஜி .ஆர்ன் ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து காவலர் களுடன் துணிந்து போராடினார். பின்னர் சிறைவாழ்க்கை முடிந்து வீடு திரும்பியவர் தீவிர அரசியலில் வீறுகொண்டு எழுந்தார் இவரின் தீவிர அரசியல் பணி நேர்மை இவற்றை கண்ட அப்போதைய அமைச்சர் இராஜா முகம்மது சிறை சென்றவர் களுக்கான பாராட்டு விழாவில் இவருக்கு பெரிய வீரன் என்று பெயர் சூட்டினார்.
அன்றிலிருந்து வீராச்சாமி என்ற பெயர் பெரிய வீரன் என மாறியது.
வாழ்வில் பெயர் மட்டும் மாறவில்லை அவரின் அரசியல் பணிக்கு கிடைத்த அச்சாரமாக பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளராக கட்சியின் பொது செயலர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்டார். அனைத்து சமூக ஆதரவுடன் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜந்து வருட அரசியல் வாழ்க்கையில் ஆதாயம் தேடாதவர். கறை படியா கைக்கு சொந்தக் காரர். தாம் பதவி வகித்த காலத்தில் குலாலர் மக்களின் கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் தவறாது சென்று வருவார்
23 வருடங்கள் அரசியலில் இருந்தாலும், தனக்கென எதையும் சேர்த்து வைக்கும் எண்ணம் இல்லாதவர்
நம் இனப் பிரமுகர் எம். பெரியவீரன் நம் சமூக மக்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். எங்காவது நம் சமூக மக்கள் பிற சமூக மக்களால் நசுக்கப்படம் போது தனது அரசியல் பலத்தால் அவற்றை முறியடித்து குலால மக்களுக்கு உதவி புரிகிறார்.
மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னன் இவனென போற்றி புகழ வேண்டும். என்ற எம்.ஜி. ஆர் பாடிய பாடலின் வரிகளுக்கு சொந்தகாரரான அஞ்சாசிங்கம் குலாலன் M.பெரிய வீரன் Ex MLA அவர்களை குலாலர் தளம் வாழ்த்துகிறது