குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Wednesday, December 17, 2014

வாரீர் வாரீர் வாரீர்


வாரீர் வாரீர் வாரீர்
மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது வாருங்கள் ஒன்று சேர்ந்து வென்று காட்டுவோம் மூன்று வருடங்களகா நாம் சந்திப்பதற்கு முயற்சி செய்தோம் முடிய வில்லை அதற்கான நேரம் இப்போது வந்து விட்டது நாம் ஒரு குலாலர் இளைஞர் அமைப்பாக உருவாக உள்ளோம் அதற்கு அனைத்து மாவட்டத்திலும் நிர்வாகிகள் தேவை குலாலர் இளைஞர்கள் வந்து இணைந்து கொள்ளுங்கள்
குலாலர் இளைஞர் அமைப்பு ஆரம்பிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
மற்றும் இரண்டாம் ஆண்டு வீரன் சாலியவாகனன் விருது வழங்கும் விழா
நாள் . 01.02.2015 ஞாயிறு கிழமை
இடம்.ஸ்ரீ சித்திவிநாயகர் திருமணமண்டபம்
நெசவாளர் காலனி P.N ரோடு திருப்பூர்
வருடத்தில் ஒரு நாள் நமது சமுதாயத்திற்காக ஒதுக்குங்கள் குலாலர் இளைஞர்கள் கட்டாயம் வரவேண்டும் வருகை தரும் உறவுகள் உங்கள் தொலைபேசி எண்னை கொடுங்கள்
தொடர்ப்புக்கு
09500763524 kulalar Rama Chandiran
09366156565 kulalar kanna
09933232655 kulalar magesh
08508991703 kulalar muththu

Friday, November 14, 2014

திருநீலகண்ட நாயனார் குருபூஜை அனைத்து குலாலர்களும் கொண்டாட வேண்டும்













திருநீலகண்ட நாயனார் குலாலர் சமுதாயத்தின் குரு இவரது
குருபூஜை தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
இந்த குருபூஜை தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டும்மே கொண்டாடப்படுகிறது இந்தநிலை மாற வேண்டும் வருகின்ற தை மாதம் நடைபெறும் குருபூஜை விழா அனைத்து குலாலர்களும் கொண்டாட வேண்டும் குறிப்பாக குலாலர இளைஞர்கள் இந்த விழாவை கொண்டாட வேண்டும்
உங்களால் முடிந்த வரை அவருடைய புகைப்படத்தை வைத்து வணங்குங்கள் 






மாவீரன் சாலிவாகன சகாப்தம் குருபூஜை T கிருஷ்ணாபுரம்









Wednesday, August 27, 2014

உறுப்பினர்

குலாலர் தளத்தின் புதிய முயற்சி தமிழ் நாட்டில் குலாலர் உள்ள மாவட்டம்,கிராமம், தொலைபேசி எண்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளது

தங்களிடம் இருக்கும் நம் சமுகம் தொடர்பான தகவல்களை எங்களுக்கு அனுப்ப sundarkulalar@gmail.com மேலும் இந்த இணையதளத்தில் இணைய தங்களின் பெயர், மாவட்டம்,கிராமம், தொலைபேசி எண்களை sundarkulalar@gmail.com அனுப்பு வைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

(குறிப்பு:இந்த இணையதளம் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ/அமைப்புக்கோ சம்பந்தம் இல்லை. நம் சமுகத்தின் சார்பாக இயங்கும் அனைத்து அரசியல் கட்சி/அமைப்புகளின் தகவல்களும் பதிவு செய்யபடும்)

இந்த இணையதளத்தில் நம் சமுகம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம் அதனால் அனைத்து பகுதிகளிலும் ஒரு தொடர்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் அதனால் விருப்பம் உள்ளவர்கள்
தங்களின் பெயர், மாவட்டம்,கிராமம், தொலைபேசி எண்களை sundarkulalar@gmail.com அனுப்பு வைக்குமாறு கேட்டுகொள்கிறோம். நீங்கள் அனுப்பும் தகவல் தங்களின் பெயரிலே பதிவு செய்யப்படும்.

.
உறுப்பினர் ........................................முகவரி ......................................தொடர்புக்கு



பெயர்மாவட்டம்தொலைபேசி எண்
திரு.சொ.karthik
 mathurai

திரு.AR,Rajamanickam
Sivagangai
9066420315
திரு. ilaiyaraja Sivagangai-----------
திரு.p.sivasakhi pudukkottai9047488192
திரு.E.SANKARESWARANViruthunagar7667727847
திருS.GanesanDharmapuri9994410829
திரு.K.Saravananthirunelveli8012096566
திரு.Mutthuviruthunagar8508991703
திரு.K.AnbuSivagangai9176992698
திரு.C.PALANISAMYPUDUKKOTTAI 99 654 654 38
திரு.sivakumarTirunelveli                            
திரு.M.mohanrajtheni 8883457321
திரு.S.selvarajthoothugudi9944143275
திரு.C.maharajathirunelveli9715793710
திரு.Arunthanjavur9600201451
திரு.ThittaniSivagangai 9940175866
                             
திரு.Mahendran kulalarthanjavur 8940407089
திரு.T.kali muthuSivagangai 36831302
திரு.V.Lekshmanavelkanyakumari9940022643
  திரு nnnnnnn                                                        ------------                                      -----------

Sunday, August 24, 2014

குலாலர் சமுதாய பாடல் kulalar songs


                                           குலாலர் சமுதாய பாடல்



kulalar new  songs  குலாலர் சமுதாய புதிய பாடல்கள்

kulalar sirappukal songs 01


                                                     

vava tholane  kulalar songs 02

                                                         

kulalar kula mani velakke kulalar mp3  03

                                                         

venniya kuyaththi kulalar songs 04
                                                           


       
thirunila kandar kulalar songs 05

                                             

suriyan uthikku munne kulalar songs 06

                                                   



mannale panai seythom kulalar songs 07

                                                   






old kulalae songs




kulalar mp3 01
kulalar mp3 02
kulalar mp3 03






kulalar kulaalar kuyavar velar udaiyar pirammakkal  songs 


Sunday, August 17, 2014

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் 4ம் ஆண்டு வி















நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் 4ம் ஆண்டு விழா பாளையில் நடந்தது. அறக்கட்டளை நிர்வாக பொறுப்பாளர் முருகானந்தவேளார் தலைமை வகித்தார். மாநில தலைவர் சேமநாராயணன், தொழிலதிபர் கோபால்சாமி, ஊர்க்காடு பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 148 மாணவ, மாணவிகளுக்கும், 53 ஏழை குலாலர் சமுதாய மாணவி, மாணவிகளுக்கு ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. அறக்கட்டளை அறங்காவலர்கள் மந்திரமூர்த்தி, தச்சை சுடலைமுத்து, பாலாமடை அய்யப்பன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். முன்னதாக சங்கரநாராயணன் வரவேற்றார். ஆசிரியர் வெங்கடாச்சலம் நன்றி கூறினார்.

Tuesday, July 8, 2014

குலாலர் இன மக்களுக்கு ஒரெ ஒரு பிரச்சனை

தமிழ் நாட்டில் உள்ள குலாலர் இன மக்களுக்கு ஒரெ ஒரு பிரச்சனை என்னவென்றால் பானை செய்ய ( வண்டல் மண் ) எடுக்கும் போது அதிகாரிகள் பிடித்து கொண்டு 25000 35000 ரூபாய் கேட்கிரார்கள்
இது தினமும் அரங்கேறீக்கொண்டுதான் இருக்கிறது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் 

விடிவு காலம் உண்டா சமுதாயத்தின் அடிமட்ட மக்களின்
தேவைகளை அறியாத தலைவரும் ஒரு தலைவரா

பிரச்சினைக்கு உரிய திர்வு கான நாம் என்ன செய்யப்போகிறோம்?

திர்வு
ஒருலச்சம் குலாலர்களை திரட்டி மாநில அளவில் போராட்டம் நடத்தினால் திர்வு ??

மண்பாண்ட தொழிலாளர் கணக்கெடுப்பு

மண்பாண்ட தொழிலாளர் கணக்கெடுப்பு ஜூலை 10ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக் காலங்களில் தமிழக அரசால் பராமரிப்புத் தொகை ரூ.4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்வாரிய அலுவலர், தொழிலாளர் நல அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் வருகிற ஜூலை 10ஆம் தேதி வரை களஆய்வு செய்து மண்பாண்ட தொழிலாளர்களை கணக்கிட உள்ளனர்.

இந்த திட்டத்தின்கீழ் மண்பாண்ட தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த நபர்கள், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்த மண்பாண்ட தொழில் செய்யும் உறுப்பினர்கள், இதர மண்பாண்ட தொழில் செய்வோர் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த தொழிலாளர் நல அலுவலர் அல்லது கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்

வேளார், குயவர், குலாலர், கும்பரர், கும்மரி, கும்கர்,பிராஜபதி, மண்ணுடையார், உடையார், பத்தர் என பல பெயர்களில் அழைக்கபடும் நமது சமூகத்தினரின் கலை பண்பாடு மற்றும் வரலாறு தகவல்கள், அன்றாட நிகழ்வுகள், கல்வி பற்றிய செய்திகள், சங்கங்களின் தகவல்கள், பறந்துப்பட்டிருக்கும் நம் உறவுகளின் தகவல்கள், சமூக தொடர்புகள், வேலை வாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை தருவதே இந்த

குலாலர் தளம்நோக்கமாகும்.

நமது மூன்று ஆசைகள்

நமது மூன்று ஆசைகள்


தமிழ் நாட்டில் உள்ள அனைத்து குலாலர்கள் ஒருமை படுத்த. வேண்டும்

நமது குலாலர் சமுதாயதின் குலதெய்வமான. மாவீரன் சாலியவாகனனுக்கு தமிழ் நாட்டில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் 

சித்திரை 1. அவருக்கு குருபூசை நடத்த வேண்டும் 

உங்களுடைய கருத்து

உறவுகளுக்கு வணக்கம்

என் இனிய உறவுகளுக்கு வணக்கம் 

சிதைந்து கிடக்கும் நம் குலாலர் வரலாறு

மறைக்கப்படாமல் இருக்க அதை பறைசாற்றுவது நமது கடமை ஆகும் .வரலாறு காப்பது நம் பெற்றோரை காப்பதற்கு சமம் 

நம் வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள 
நாம் குலாலர் சமுதாயதின் தலைவர்களின் முழுமையான வரலாறு புத்தகம் வெளியிடுவது முடிவு செய்யப்பட்டது
எத்தனைபேருக்கு வேண்டும் என்பதை சொல்லுங்கள்
உங்கள் முகவரிகு அனுப்பப்படும்

அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள மழைக் கால நிவாரணத் தொகையை வயது வித்தியாசமின்றி அனைத்து மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று, அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகம், குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம், செங்கல் தொழிலாளர் நலச் சங்க மாநிலப் பொதுக் குழு ஆலோசனை கூட்டம் வளையப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் முருகேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். சிவம் வரவேற்றார்.

நிறுவனத் தலைவர் தியாகராஜன், மாநிலத் தலைவர் ஆறுமுகம், மாநில நிர்வாகிகள் கலியமூர்த்தி, பிச்சை, வைரப்பெருமாள், ராதாகிருஷ்ணன், மாவட்டத் தொழில்சங்கத் தலைவர் சரவணன், கலிங்கசெல்வம், பரமசிவம், இலக்கிய அணித் தலைவர் பிரபு, மணிகண்டன், கலைவாணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

இதில், மண்பாண்டத் தொழிலாளர் நலன் கருதி மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் அந்தத் தொகையை வயது வித்தியசமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்பாண்டம், செங்கல், ஓடு, மண் மொம்மைகள் செய்யும் தொழிலாளர்களுக்கு இலவசமாக 80 யூனிட் களிமண் வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட ஏழூர் அகரம், அரூர், பிடாரமங்களம், செல்லிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் களிமண்களை மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்டப் பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Friday, June 13, 2014

களிமண்ணிலே கலைவண்ணம் படைக்கும் குலாலன்



மலேசிய நாட்டில் குலாலன்





ஆதியிலே கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கினார். அவனுள் உயிர்மூச்சை ஊதவே அவன் உயிருள்ளவன் ஆனான்’( ஆதி. 2/7) என்ற பைபிள் வசனம் களிமண்ணைப் பிசைந்து கடவுள் மனிதனைப் படைத்திருக்கும் உயிர் சம்பவத்தை விவரிக்கிறது.
களிமண்ணின் பயன்பாடு உலகத் துவக்கத்திலேயே இருந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் களிமண்ணால் பாத்திரங்கள், மண்பாண்டங்கள் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பலவகையான மண்பானைகள், களிமண் ஜாடிகள் இதற்கு சாட்சியம் பகர்கின்றன.
களிமண் பானைகளில் கறி அல்லது குழம்பு சமைக்கையில் அதன் சுவையே தனி. தோட்டப்புறங்களில் தாய்மார்கள் விறகு அடுப்பில் சமைப்பதற்கு மண்பானைகளைப் பயன்படுத்துகையில் எழும் வாசம் பக்கத்து வீடுகளுக்கும் மணம் பரப்பும்.. இன்றைய நவீனக் காலத்தில் அலுமினியப் பானைகளை கேஸ் அடுப்பிற்கு அதிகம் பயன்படுத்தும் நிலை வந்துள்ளது. இருந்தபோதும், பட்டணத்திலும் மண்பானையில் சமைக்கும் பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது.




மலேசிய நாட்டில் சில பகுதிகளில் மட்டும் களிமண் பானைகள் செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது. அதில் கோலசிலாங்கூர், புக்கிட் ரோத்தான், அசாம் ஜாவா பகுதியில் ஒரு தமிழ் குடும்பத்தினர் களிமண் பானைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் இந்தியர்கள் பொங்கல் திருநாளில் பானைகளைத் தேர்வு செய்து பொங்கலுக்கு பயன்படுத்துவது தவிர்க்க முடியாத அம்சமாகும்.
அவர்களுடன் பொங்கல் நாளுக்காக மேற்கொண்ட நேர்காணலில் களிமண் பானைகள் செய்யும் தொழில் இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
எவ்வளவு காலம் நீங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறீர்கள்?
ஏறக்குறைய 60 ஆண்டுகளாக இது எங்கள் குடும்பத் தொழிலாக இருந்து வந்துள்ளது. எனது தந்தையார் வெங்கடாசலம் இத்தொழிலை செய்து வந்தார். அவரோடு சேர்ந்து களிமண் பானை செய்தல் தொழிலைக் கற்றோம். அவர் தனது 85-வது வயதில் காலமானப் பின்பு நாங்கள் இத்தொழிலைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.
உங்கள் குடும்பத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
என்னுடைய பெயர் செல்லம்மாள். என்னுடன் பிறந்தவர்கள் 7 பேர். நான் குடும்பத்தில் 5-வது பிள்ளை. என் கணவர் திருநாகசெட்டியும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். என் 4 பிள்ளைகளில் மூவர் படித்து பட்டம் பெற்று பல துறைகளில் வேலை செய்கிறார்கள். 4-வது மகள் எஸ்பிஎம் படித்து வருகிறார். என்னுடன் பிறந்த சகோதரியும் சகோதரரும் மண்பாட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.
மண்பானைகள் செய்யும் கலையை விவரித்து சொல்லுங்களேன்?
தேர்ந்தெடுக்கப்பட்ட களிமண்ணை 2 நாட்களுக்கு பெரிய தொட்டிகளில் ஊற வைப்போம். பின்னர் அதில் குறிப்பிட்ட அளவு மண் கலந்து 3 முறை இயந்திரத்தில் அரைக்க வேண்டும். பின்னர் களிமண்ணை அச்சில் கைகளால் வார்த்தெடுத்து தேவையான அளவுக்கு பானையை வடிவமைத்து வெய்யிலில் ஒருநாள் முழுவதும் காயவைக்க வேண்டும். மறுநாள் 500 பானைகளை ஒரே சமயம் அடுப்பில் வைத்து நெருப்பில் வேக வைக்க வேண்டும்.
ஏறக்குறைய 4 மணிநேரம் 800 சென்டிகிரேட் சூட்டில் பானைகளை வேக வைக்கணும். சூடு குறைவாக இருந்தால் மண்பானைகள் வேகாது. அடுப்பு சூடு அதிகரித்தாலும் பானைகள் உடைந்து விடும். எனவே இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
பானைகளை வடிவமைப்பதில் பொறுமையும் நிதானமும் தேவை. ஒருநாள் முழுவதும் அடுப்பில் இருக்கும் பானைகளை மெல்ல எடுத்து, பின்னர் சாயம் அல்லது வர்ண ஓவியங்கள் தீட்டி விற்பனைக்கு வைப்போம்.
உங்கள் மண்பானைகளை எப்படி விற்பனை செய்கிறீர்கள்?
மலேசியா முழுவதும் மண்பானைகளை விற்பனைக்கு அனுப்புகிறோம். நாங்களும் நேரடியாக லோரியில் பானைகளை மொத்த வியாபாரிகளுக்கு அனுப்புகிறோம். சில்லரை வியாபாரிகளும் மொத்த வியாபாரிகளும் எங்களிடம் நேரடியாக பானைகளைக் கொள்முதல் செய்வதும் உண்டு.
நம் நாட்டில் உள்ள கோயில்களுக்கும் எங்களிடம் வந்து அகல்விளக்கு, நெய் விளக்குகளை வாங்குகிறார்கள். ஒரு மாதத்தில் ஏறக்குறைய 2,000 பானைகளைச் செய்கிறோம். ஒரு பானையின் விலை அதன் அளவை பொறுத்து 3 வெள்ளியிலிருந்து 10 வெள்ளிவரை விற்கப்படுகிறது.
6 அளவுகளில் மண்பானைகளைச் செய்கிறோம். இதை ஏ முதல் ஈ வரை என குறிப்பிடுகிறோம். மழைக்காலங்களில் மண்பானைகள் செய்வதில் சற்று சுணக்கம் ஏற்படும்.
மண்பானையில் சமைப்பதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும்?
மண்பானையில் சமையல் செய்வதற்கு முன்னர் அதைப் பழக்க வேண்டும். இல்லையென்றால் மண்வாசனை குழம்பில் இருக்கும். மண்பானையில் தேங்காய்பூ போட்டு மெல்லிய சூட்டில் வறுக்க வேண்டும். பின்னர் சோறு வடித்த கஞ்சியை அதில் ஊற்றி மெல்லிய சூட்டில் சுண்ட செய்ய வேண்டும். இதை 3 நாட்களுக்கு செய்த பின்னர் பானையைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
களிமண்ணைக் கொண்டு எத்தகைய பானைகள் செய்கிறீர்கள்?
மண்பானை, மண் சட்டி, அகல் விளக்கு, நெய் விளக்கு, மோட்ச விளக்கு, தூபக்கல், கல்யாண பானை, தண்ணீர் பானை, லிங்கம் என பல வகையான மண்பாண்டங்களைத் தயாரிக்கிறோம்.
பொங்கல் நாளுக்கு பானைகள் தயாராக உள்ளனவா?
ஒரு மாதத்திற்கு முன்பே பொங்கல் விழாவிற்கு தேவையான மண்பானைகளைத் தயாரித்து வருகிறோம். பொங்கல் நாளில்தான் அதிகளவு பானைகள் விற்பனையாகும் என்கிறார் செல்லம்மாள்
தமிழர் வாழும் வீடுகளில் எல்லாம் பொங்கல் வைக்க கலை வடிவத்தில் பானைகளைச் செய்யும் குடும்பத்தினரின் தொழில் வளர்ந்து வருகிறது. மண்பானையில் சமைத்த உணவு நோய் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் மண்பானையில் சமையல் செய்தால் அதன் சுவையே தனி என்கிறார் செல்லம்மாள் கணவர் திருநாகச் செட்டி.
மண்பானைகளை நேரடியாக கொள்முதல் செய்து விற்க விரும்புகிறவர்கள் பாண்டு ரங்கன் (012-6441236), இராஜசேகர் (017-6699024), ஆகியோரோடு தொடர்பு கொள்ளலாம்.
‘பொங்கலோ பொங்கல்’, ‘பொங்கலோ பொங்கல்’ என ஆனந்தத்தோடு பொங்கல் பொங்கி வருகையில் சொல்கிறோம். அச்சமயம் பொங்கல் பானை செய்தவர்களையும் நினைவு கூருவோம்.

Tuesday, June 10, 2014

நந்தவனத்தில் ஓர் ஆண்டி கடுவெளிச் சித்தர் பாடல்


பாடல்

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

"நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு
"-
 கடுவெளிச் சித்தர்

விளக்கம்

மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கைப் பாடல் போலத் தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவெளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித உயிர்(சீவன்) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டுகிறான். சீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு மாதமாய்(பத்து) மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.
சீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன்(இறைவன்) செய்து கொடுத்தான்.
தோண்டி(உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டுடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை(உடல்) தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.(மனிதன்)
மேலும் நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளை தேட வேண்டும் என்றும், வல்லவர்(பக்தர்) கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை நெஞ்சினில் வைத்து வாழ்த்திக் கொண்டாட வேண்டும் என்கிறார்.

தத்துவம்

சீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே 



குயவன் வாழ்க்கை தத்துவம்

 
 இறைவன் எனும் குயவன். வடித்த சிலை. மனிதன்..





காலச் சக்கரம் சுழன்றதடா! 
கைகள் மண்ணைப் பிசைந்தனடா!
ஆழியின் நடுவில் வைத்திடப் பல
ஆயிரம் பானை உதித்தனடா!

குயவன் மனம்விதம் மாறியதில்
குழைக்கும் கைகள் கோணுவதில்
உயர்ந்தும் சிறுத்தும் ஒழுங்கற்றும்
உருவம் கோடி உதித்தனடா!

கறுத்தி ருந்தன சில பானை!
கவினோ டிருந்தன சில பானை!
பருத்தி ருந்தன சில பானை!
பால்போல் இருந்தன சில பானை!

வெளுத்த பானை கறுத்த வற்றை
விரட்டி அடித்தன வேடர்களாய்! 
பலத்த பானை மெலிந்த வற்றை
பணிய வைத்தன வேந்தர்களாய்!

அழகிய பானை ஆனாலும் 
அங்க போன தானாலும்
நழுவிக் கீழே விழுந்தால் மீண்டும்
நைந்த மண்ணாய்ப் போகுமடா! 

வானவில் போன்ற வாழ்க்கைதனில்
வளர்பிறை பின்பு தேய்பிறையே! 
ஊன முற்ற மனித இனம் 
ஓயாச் சண்டையில் மாய்வது ஏன்!

Monday, June 9, 2014

திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்" - திருத்தொண்டத் தொகை



"திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்" - திருத்தொண்டத் தொகை
“சொல்லைச் சிவன் திரு ஆணைதன் தூம்மொழி தோள் நசையால்
ஒல்லைத் துறந்து உரு மூத்தற் பின் உமைகோன் அருளால்
வில்லைப் புரைநுத லாளொடு இளமை பெற்று இன்பம் மிக்கான்
தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே” - திருத்தொண்டர் திருவந்தாதி
சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்த ஓர் அடியவர் இருந்தார். அவர் சிதம்பரத்துச் சிற்சபையில் சிவகாமியம்மையார் காண அற்புதத் தனிகூத்தாடும் நடராசவள்ளலை நாளும் வாழ்த்தி வழிபடும் நலத்திறன் மிக்கவர். அன்பர் பணி செய்வதும் அவ்வடியாரின் ஓர் அருஞ்செயல். தாம் ஆக்கும் ஓடுகளிற் சிறந்தனவற்றை அடியவர் அமுது செய்வதற்காக இலவசமாக அளிப்பது அவர்தம் வழக்கம். அவர் சிவபெருமானது எண்ணில்லாத சீர்மைகளுள் திருநீலகண்டத்தைப் பெரிதும் நயந்தார். அன்பாளர்கள் அமுது செய்தற் பொருட்டு பெருமான் நஞ்சுண்ட பெருங்கருணைத் திறத்தின் அடையாளமல்லவா திருநீல கண்டம்! ஆதலால் திருநீலகண்டம் என்பதைப் பெருமந்திரமாகக் கொண்டு ஒழுகினார். இதனால் அவருக்கு திருநீலகண்டக்குயனவார் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அவருக்கு அருந்ததியைப் போன்று கற்பிற் சிறந்த அமைந்தார். அவரிடம் ஓர் பலவீனமும் இருந்தது இளமை தூர்ந்த அவர் இன்பத்துறையில் எளியராயினமையே அது. அவர் தம் புற ஒழுக்கத்தை அறிந்த மனைவியார் மானத்தால் நொந்தார். கணவனுக்கு வேண்டும் பணிகளை எல்லாம் குறைவுறச் செய்து உடனுறைவுக்கு இசையாதிருந்தார். ஒரு நாள் நாயனார் அவரது புலவியைத் தீர்ததற் பொருட்டு அருகணைத்து வேண்டும் இரப்புரைகளைக் கூறித் தீண்டுவதற்குச் சென்றார். உடனே "எம்மைத் தீண்டுவாராயின் திருநீலகண்டம்" என அம்மாதரசி ஆணையிட்டார். அவ்வாணைக்கு நாயனார் கட்டுண்டார். மனைவியாரை அயலவர் போல் நோக்கி எம்மை எனச் சொன்னமையால் "எம் மாதரையும் தீண்டேன்" உறுதி கொண்டார்.
இளமை மிக்க நாயனாரும், மனைவியாரும் உடனுறைவின்றி வேறு வேறாக தம் மனையிலே (வீட்டிலே) வாழ்ந்தனர். தமது இவ்வொழுக்கத்தை அயலறியா வண்ணம் பேணி நடந்தனர். ஆண்டுகள் பலவும் செல்ல இளமை நீங்கி முதுமையெய்தினார். முதுமையெய்தி உடல் தளர்ந்த நிலையிலும் திருநீலகண்டத்திலும் கொண்ட பற்றுதியும் தம் உறுதி தவறாது ஒழுகினார்.
இவர் தம் செயற்கருஞ்செயலை உலகத்தவர்களுக்கு விளக்கம் செய்ய இறைவர் திருவுளம் பற்றினார். ஒரு சிவயோகியார் வேடம் பூண்டு நாயனரது மனைக்கு எழுந்தருளினார். நாயானார் அவரை எதிர்கொண்டு வணங்கி முறைபப்டி பூசனை செய்து "அடியேன் செய்யும் பணி யாது?" என இரந்து நின்றார். சிவயோக்கியார் தம்மிடமிருந்த ஓட்டினை அன்பரிடம் கொடுத்து "இத்திருவோடு ஒப்பற்றது இதனைப் பாதுகாப்பாக வைத்து நாம் வேண்டும் போது தருக" எனக் கூறிச் சென்றார். பல நாட் சென்ற பின்னர் ஓட்டினை வைத்த இடத்தில் இராத வண்ணம் மாயஞ்செய்து விட்டுச் சிவயோகியார் மீண்டும் வந்தார். வந்த சிவயோகியாரை வரவேற்று பூசனை செய்து பணிந்து நின்ற நாயனாரிடம் "யான் முன்பு உன்னிடம் தந்த ஓட்டினைத் தருக" எனக் கேட்டார். திருநீலகண்டர் வைத்த இடத்தில் எடுப்பதற்காகச் விரைந்து சென்றார். அங்கே ஓட்டினைக் காணாது திகைத்தார். அங்கு நின்றவரிடம் கேட்டும் எங்கும் தேடியும் காணதவராய் யாது செய்வதென்றறியாமல் அயர்ந்து அங்கேயே நின்றார். சிவயோகியார் "நொடிப்பொழுதில் எடுத்து வருவதாகச் சென்றீர்; யாது செய்கின்றீர்" என அழைத்தும்; அருகே வந்து கைதொழுது "சுவாமி பாதுகாப்பாக வைத்த இடத்தில் ஒட்டினைக் காணவில்லை. வேறிடந்தேடியும் அகப்படவில்லை, அந்தப் பழைய ஓட்டிற்குப் பதிலாக நல்ல புதிய ஓடு தருகிறேன். அதனை ஏற்று பிழை பொறுத்தருளுங்கள்" என இரந்து நின்றார். சிவயோகியார் "யான் தந்த மண்னோடன்றி பொன்னோடு தந்தாலும் கொள்ளேன் தந்ததையே கொண்டுவா" எனக் கூறினார். திருநீலகண்டர் "பெரியோய் தங்கள் ஓட்டைத் தரும்வழி காணேன். வேறு நல்ல ஓடு தருகிறேன் என்றாலும் ஏற்றுக் கொள்கின்றீர்கள் இல்லை" எனக் கூறி உணர்வொடுங்கி நின்றார். புண்ணியப் பொருளாக வந்த சிவயோயார் "யான் தந்த அடைக்கலப் பொருளைக் கவர்ந்துகொண்டு, பாவத்திற்குச் சிறிதும் அஞ்சாது பலபல பொய்மொழிகள் கூறுகிறாய், யாவரும் காணத் திருவோட்டை வாங்காது இவ்விடம் விட்டுப் போகேன்" என்றார். அதற்குச் “சுவாமி! தேவரீரது ஒட்டை அடியேன் கவரவில்லை. இதை எப்படித்தெரிவிப்பது? சொல்லும்” என நாயனார் கூறினார். “உன் அன்பு மைந்தனைக் கைப்பிடித்துக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்” எனச் சிவயோகியார் கூறினார். “அப்படிச் செய்வதற்கு எனக்கு மகன் இல்லையே! என் செய்வது” எனச் சிவயோகியாரை நோக்கினார் திருநீலகண்டர். “உன் மனைவியின் கையைப் பற்றி குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்” எனச் சிவயோகியார் கூறினார். “நானும் என் மனைவியும் எங்களிடையேயுள்ள ஒரு சபதத்தால் கைபிடித்துச் சத்தியம் செய்ய முடியவில்லை. நான் தனியே குளத்தில் மூழ்க்கிச் சத்தியம் செய்து தருகிறேன் வாரும்” என நாயனார் அழைத்தார். “தந்த ஓட்டைத் தராமல் இருக்கிறாய்; அதனை நீ கவரவில்லை எனின் உன் மனைவியின் கைப்பிடித்து சத்தியஞ்செய்துதரவும் தயங்குகின்றாய். தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பேரவையிலே இவ்வழக்கினைச் சொல்லப்போகின்றேன்; நீ அங்கு வா” என அழைத்தார் சிவயோகியார். திருநீலகண்டர் அதற்கிசைந்து அவருடன் சென்றார்.
தில்லைவாழந்தணர் சபையை அடைந்த சிவயோகியார் “இந்தக் குயவன் யான் அடைக்கலம் வைத்த ஓட்டைத் தருகிறானில்லை. அதனை அவன் கவர்ந்துகொள்ளவில்லை என்று மனைவியின் கைப்பிடித்து சத்தியம் செய்கிறானுமில்லை” என்று தம் வழக்கினைக் கூறினார். அதுகேட்ட அந்தணர்கள் திருநீலகண்டரை நோக்கி “நீர் நிகழ்ந்ததைக் கூறும்” என்றனர். “திருவுடை அந்தணர்களே இவர் தந்த திருவோட்டை மிகப்பாதுகாப்பான இடத்தில் வைத்தேன். அது மருமமாய் மறைந்து விட்டது. இதுவே நிகழ்ந்தது” எனத் திருநீலகண்டர் உள்ளதைக் கூறினார். “அப்படியாயின் இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியின் கைப் பிடித்து குளத்திலே மூழ்க்சிச் சத்தியம் செய்து கொடுத்தலே முறை” எனத் தில்லைவாழந்தணர்கள் தீர்ப்பளித்தனர். அது கேட்ட திருநீலகண்டர் தம் மனைவியைத் தான் தீண்ட இயலாத சபத்தை வெளிபடுத்த முடியாதவராய். “பொருந்திய வகையால் மூழ்கித் தருகிறேன்” எனச் சொல்லி சிவயோகியாருடன் தம் வீட்டை அடைந்தார். வீட்டில் இருந்த மனைவியாரையும் அழைத்துக் கொண்டு தில்லைத் திருப்புலீச்சரக் கோயிலின் முன்னுள்ள குளத்தை அடைந்தார். திருநீலகண்டத்தின் ஆணையினைக் காத்தற்பொருட்டு மூங்கில் தடியொன்றில் ஒரு முனையைத் தாமும் மறுமுனையை மனைவியும் பிடித்த வண்ணம் குளத்தில் இறங்கினர். அப்பொழுது சிவயோகியார் “மனைவியின் கையைப் பிடித்து மூழ்குக" என வற்புறுத்தினார். அது செய்யமாட்டாத சபதத்தை அங்குள்ளோர் அனைவரும் கேட்கும் வண்ணம் வெளிப்படுத்தித் திருநீலகண்டர் மனைவியாருடன் குளத்தில் மூழ்கினார். மூழ்கிக் கரையேறும் திருநீலகண்டரும் மனைவியாரும் முதுமை நீங்கி இளமைக் கோலத்தில் தோன்றினார்கள். அந்த அற்புதக் கண்ட அனைவரும் சிவயோகியாரைக் காணாது மருண்டு நின்றனர். மறைந்த இறையவர் உமையம்மையாரோடு, வெள்ளையெருதின் மீது தோன்றி 'புலனை வென்ற பெரியோர்களே! இவ்விளமையோடு என்றும் எம்மை நீங்காதிருப்பீர்களாக" என்றருளி மறைந்தருளினார். நாயனாரும் துணைவியாரும் இவ்வுலகிலே இறைபணியாற்றிச் சிவலோகமடைந்து பெறலரும் இளமை பெற்றுப் பேரின்பமுற்றனர்.
திருத்தொண்டர் புராணசாசனம்
தில்லைநகர் வேட்கோவர் தூர்தராகி,
தீண்டிலெமைத் திருநீல கண்டமென்று
சொல்லும் மனையாள் தனையே அன்றிமற்றும்
துடியிடையாரிடை இன்பம் துறந்து, மூத்து, அங்(கு)
எல்லையில் ஓடு இறை வைத்து, மாற்றி, நாங்கள்
எடுத்திலம் என்று இயம்பும், என இழித்து பொய்கை
மெல்லியாளுடன் மூழ்கி இளமையெய்தி
விளங்கு புலீச்சரத்தரனை மேவினாரே