மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சித்திரைத் திருவிழா
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, மாசி மாதம் நடைபெறும் திருவிழாக்கள் முக்கியமானவை. இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (10–ந்தேதி) தொடங்குகிறது.
இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் காலை 10.30 மணியில் இருந்து 10.54 மணிக்குள் மிதுன லக்கினத்தில் கொடியேற்றம் நடக்கிறது. அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளுகிறார்கள்.
அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளுகின்றனர். இரவில் கற்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனங்களில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள்.
No comments:
Post a Comment