குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Friday, November 9, 2018

மாவீரன் சாலிவாகனன் குலாலர் பாடல் NEW salivaganan kulalar songs



        

      

                          குலாலர் சகாப்தம் மாவீரன்  சாலிவாகனன் பாடல்


https://drive.google.com/open?id=1eZf5AXRj2kdybQuJMsbE8fo_4OSh4H_-
 

Friday, October 12, 2018

மண்ணில் உதித்த மகான் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள்

  திருவடியே சரணம் !  மண்ணில் உதித்த மகான் 

       சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ  மாயாண்டி சுவாமிகள்


 


சுவாமிகள் சன்னதிக்கும் சென்று வாருங்கள்.வாழ்வில் மாற்றம் நிச்சயம்

நம்முடைய ஆன்மிகத் தேடலுக்கும் அடைய விரும்பும் பேரின்பத்துக்கும் நல்ல குரு ஒருவரே வழிகாட்ட முடியும் . ஒரு குருவை நாம் தேடிக் கண்டடையும் போது அவரின் திருமேனியைத் தரிசிப்பதும் அவருடைய திருநாமத்தைச் சொல்லுவதும் அவருடைய உபதேசத்தைக் கேட்பதும் அவருடைய திருவுருவை நம் மனதில் வைத்துத் தியானிப்பதும் ஞானத்தை அளிக்கும். நமக்கு நல்ல கொடுப்பினை இருந்தால் சிவனே குருவாக வந்து நமக்கு மெய்யுணர்வை அளிக்கிறார் என்று திருமூலர் கூறுகிறார் .
அதனால்தானோ என்னவோ சிவனாகவே மாறிவிட்ட மாயாண்டி சுவாமிகள் ‘தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’ என்று ஒரு நல்ல குருவாக இருந்து பல சித்தர்களை உருவாக்கியிருக்கிறார் .



மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பாச்சேத்தி. இந்த ஊருக்குத் தென் திசையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம்- கட்டிக்குளம். மகான்கள் பலர் தங்களது யாத்திரையின்போது இங்கு வந்து தங்கி, கட்டிக்குளத்துக்குப் புனிதம் சேர்த்திருக்கிறார்கள். தவிர, ராமேஸ்வரம் செல்லும் வழியில் கட்டிக்குளம் இருப்பதால், அந்த காலத்தில், பாத யாத்திரையாகச் செல்லும் துறவிகள், சில நாட்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம்.

இந்த ஊரில் சூட்டுக்கோல் ராமலிங்கம் சுவாமிகள் என்ற துறவி வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். இவரின் கையில் எப்போதும் இருக்கும் சூட்டுக்கோல், அபூர்வ சக்தி வாய்ந்தது (இவருக்குப் பின் இந்த சூட்டுக்கோல், இவரின் சீடரான செல் லப்ப சுவாமிகளிடமும் அதன் பிறகு, செல்லப்ப சுவாமிகளின் சீடரான கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளிடம் வந்தது).

கட்டிக்குளத்தில் வசித்த குப்பமுத்து வேளார், ஒரு மண்பாண்டத் தொழிலாளர். உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார். இவர் மனைவியின் பெயர் கூத்தாயி அம்மாள். சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களான இந்தத் தம்பதிக்கு, காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தன்று (1858- ஜூலை) ஓர் ஆண் குழந்தை பிறந்தது. மாயாண்டி என்று அவனுக்குப் பெயர் வைத்தனர். ஒரு நாள், சிறுவன் மாயாண்டி யுடன் ஐயனார் கோயிலுக்கு அபிஷேகம் செய்யப் புறப்பட்டார் குப்பமுத்து. மகனை வெளிக் கூடத்தில் உட்கார வைத்து விட்டு, கருவறைக்குள் நுழைந்தார். அபிஷேகத்தை முடித்து விட்டு, வெளியே வந்தபோது மகனைப் பார்த்து அதிர்ந்தார் குப்பமுத்து. கண்களை மூடி குத்துக்காலிட்டு அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தான் மாயாண்டி. அவன் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. பயந்து போன குப்பமுத்து, ''ஐயனாரப்பா... என் மகனைக் காப்பாத்து'' என்று அலறினார். சற்று நேரத்தில் அந்த நல்ல பாம்பு எப்படி மறைந்ததோ தெரியவில்லை.

அதைக் கண்ட அவர் தம் மகன் சாதாரணப் பிறவியல்ல என்று உணர்ந்து கொண்டார்.
.

பின்னாளில் இந்த ஐயனார் கோயிலில் மாயாண்டி பூஜை செய்யும் நேரங்களில், இதே நல்ல பாம்பு அவர் மேல் விழுந்து விளையாடும். இதைக் கண்ட ஊர்மக்கள், 'தெய்வத்தின் குழந்தை இவன்' என்று தெரிந்து கொண்டார்கள்.

திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்ட மாயாண்டிக்கு, குல வழக்கப்படி 12-வது வயதில் உபநயனம் செய்து வைக்கப் பட்டது. வீட்டில் இருந்த பரம்பரைச் சொத்தான வைத்திய சுவடிகளையும், சித்தர் நூல்களையும் படித்தார். அடிக்கடி மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மனை தரிசிப்பார். இந்த நிலையில் புளியங்குடியைச் சேர்ந்த உறவுக்காரப் பெண் மீனாட்சி, இவருக்கு மனைவியாக அமைந்தாள். ஒரு மகளும் மகனும் பிறந்தனர். அதன் பின் தவ வாழ்க்கையின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார் மாயாண்டி. 


சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.




குரு செல்லப்ப சுவாமிகள்

 
மன்னார்குடியைச் சேர்ந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரான செல்லப்ப சுவாமிகள் இராமேசுவர யாத்திரை செல்லும் வழியில் கட்டிக்குளத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார்

ஆசிர்வாதமும் வழிநடத்தலும்
 
ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .

ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .

ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .

அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார் .

சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது.
சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் .



சட்டையைக் கழற்றிவிடலாமா?
 
நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் 

 
சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார்


துரையில் இருந்து மானாமதுரை செல்லும் ரயிலில் ஒரு முறை ஏறிய மாயாண்டி சுவாமிகள், அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். ரயில் புறப்பட்டு சில நிமிடங்கள் ஆன பிறகு, டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

 இவர் வெள்ளைக்காரர். பயணச் சீட்டுக்காக சுவாமிகளை அழைத்துப் பார்த்தார். ம்ஹும்! பதில் இல்லை. குரலை சற்று உயர்த்திப் பார்த்தார். அதற்கும் பதில் இல்லை. எனவே, கொஞ்சம் எரிச்சலானவர் தன் கையில் இருந்த பென்சிலால் அவர் மேல் தட்டினார்.

 கண்விழித்துப் பார்த்த சுவாமிகளிடம், பயணச்சீட்டு தருமாறு கேட்டார். அவரைப் பார்த்துப் புன்னகைத்த சுவாமிகள், மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.
பரிசோதகர் முகம் மாறினார். 'இந்த பரதேசியை எப்படியாவது தண்டித்து விட வேண்டும்' என முடிவெடுத்தார். ரயில், வனாந்திரப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அபாயச் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தினார். பிறகு, தியானத்தில் இருந்த சுவாமிகளின் மேல் பென்சிலால் இரண்டு தட்டு தட்டி விட்டு, ''ம்ம்ம்... இறங்கு கீழே'' என்றார் மிகுந்த அதிகாரமாக. உடன் இருந்த மற்ற பயணிகள்
திகைத்தனர். காரணம்- அவர்களில் பலரும் மாயாண்டி சுவாமிகளை ஓரளவேனும் அறிந்திருந் தனர். எனவே, டிக்கெட் பரிசோதகரின் செயலைக் கண்டித்தனர்.


ஆனால், அவர் இதை ஏற்கவில்லை. ''உடம்பில் துணி எதுவும் இல்லாமல் தன் இஷ்டத்துக்குத் திரியும் காட்டுமிராண்டி ஆசாமிகளுக்கு இது போன்ற இலவச ரயில் பயணம் தேவைதானா?'' என்று சகட்டு மேனிக்கு திட்டினார். சுவாமிகள் ஏதும் பேசவில்லை. என்ன நடக்கிறது என்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

உடன் இருந்த பயணிகள், ''எங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவரை விடுவியுங்கள். இங்கே அவரை இறக்கி விடாதீர் கள். அடுத்த ரயில் நிலையத்திலாவது இறக்கி விடுங்கள். இது அடர்ந்த வனப் பகுதியாக இருக்கிறது.'' என்றனர்.

ஆனால், டிக்கெட் பரிசோதகர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். சுவாமிகளைப் பிடித்து வலுக் கட்டாயமாக இறக்கினார் நிலைமையை உணர்ந்த சுவாமிகளும், கீழே குதித்து வனத்தை நோக்கி நடந்தார். ஓர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து, தியானத்தைத் தொடர்ந்தார்.

பயணிகள் வருத்தத்துடன் அவரை பார்த்தனர், 'இந்தக் காட்டிலேயே விட்டு விட்டுப் போகிறோமே' என்று. அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார் சுவாமிகள். 'நடக்கப் போகிற அதிசயத்தைப் பாரடா' என்பதே அதன் அர்த்தம்!

ரயில் புறப்படுவதற்காக விசில் ஊதப்பட்டது. பச்சைக் கொடி காட்டப்பட்டது. ஆனால், ரயில் கொஞ்சமும் நகரவில்லை. ரயிலில் இருந்த ஊழியர்கள் குழம்பினர். இன்ஜின் முதற்கொண்டு அனைத்தையும் பரிசோதித்தனர். எதிலும் கோளாறு இல்லை. அந்த ரயிலில் இருந்த ஒரே ஒரு ஊழியர் மட்டும் காரணத்தைச் சரியாகக் கண்டுபிடித்து விட்டார். 'சுவாமிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டதுதான் குறை. அவர் தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது. அவர் வண்டியில் ஏறி அமர்ந்தால், நகர ஆரம்பித்து விடும்' என்றார். இவரது கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே, ஒருசில பணியாளர் களும் பயணிகளும் சேர்ந்து, சுவாமிகள் தவம் இருந்த ஆல மரத்தின் அருகே சென்றனர். சுவாமிகள் கண் திறந்தார். வந்தவர்கள் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து, ''என்ன அப்பு... வண்டி மானாமதுரைக்குப் போக ணுமா?'' என்று கேட்டார் சுவாமிகள்.

அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தலையசைக்க... உடனே விறுவிறுவெனச் சென்று ரயிலில் அமர்ந் தார் சுவாமிகள். அடுத்த விநாடி, அது என்ன மாயமோ தெரியவில்லை. எந்த வித தடங்கலும் இன்றி புறப்பட்டது ரயில். மானாமதுரை வந்ததும், சுவாமிகள் இறங்கிக் கொண்டார். அப்போது அந்த வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் இவரை நோக்கி ஓடோடி வந்து காலில் விழுந்து, மன்னிப்பும் கேட்டார். பிறகுதான், வெள்ளைக்காரர்கள் காலத்தில் ராமேஸ்வரம் வரை செல்லும் சாதுகளுக்கு ரயிலில் இலவச அனுமதி வழங்கப்பட்டது. அதற்குக் காரணம்... சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்.

மாயாண்டி சுவாமிகள் அமைத்த வெள்ளிக் குறிச்சி நரிவள்ளிமடத்தில், பெத்தார் என்பவர் தினமும் மாலை வேளையில் விளக்கேற்றுவது வழக்கம்.ஒரு நாள் அவர், விளக்கேற்ற சென்றபோது கடும் மழை பெய்தது! உரிய நேரத்தில் விளக்கேற்ற வேண்டுமே என்ற அவரசத்தில் மழையையும் பொருட்படுத்தா மல் விரைந்தார்.

வழியில் ஒரு கால்வாயைக் கடக்க நேர்ந்தது. அப்போது பாம்பு ஒன்று, பெத்தாரைத் தீண்டியது. உடலில் விஷம் ஏறுவதையும் பொருட் படுத்தாமல், ஓட்டமும் நடையுமாகச் சென்ற பெத்தார், மடத்தை அடைந்து மாயாண்டி சுவாமிகளைப் பிரார்த்தித்தபடி திருவிளக்கு ஏற்றி வைத்தார்.

மெள்ள நடந்து வெளியே வந்தபோது அவரை மயக்கம் ஆட்கொண்டது. மடத்தின் ஒரு மூலை யிலேயே அப்படியே சரிந்தார். ஆனால், அவருக்கு வேறு எதுவும் நேரவில்லை! மறுநாள் அவர், சுவாமிகளை தரிசித்தபோது... மாயாண்டி சுவாமி களின் திருக்கரத்தில் ஒரு கட்டு! இதைக் கண்டதும் குழம்பிப் போன பெத்தார், ''பாம்பு... நேத்து இரவு...'' என்று இழுத்தபோது, சுவாமிகள் அவரைப் பார்த்துப் புன்னகைத்தார். பிறகு, ''கவலைப் படாதே. விஷம் இறங்கி விட்டது'' என்றார்

அப்போதுதான் பெத்தாருக்குப் புரிந்தது, தன்னைத் தீண்டிய பாம்பின் விஷத்தை சுவாமிகளே ஏற்றுக் கொண்டார் என்று.ரு முறை, குன்றக்குடியில் குடி கொண்ட முருகப் பெருமானின் திருத்தேர் உலா வைபவம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது மாயாண்டி சுவாமிகள் அங்கிருந்தார். திடீரென தேரில் மளமளவென ஏறியவர், முருகப் பெருமானின் உற்சவர் விக்கிரகம் இருந்த இடத்தின் அருகே நின்று பழனியாண்டவராகப் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்தார்.

சுவாமிகளைப் பற்றி அறிந்திருந்த பக்தர்கள், அவரின் திருக்கோலம் கண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு தரிசித்தனர். ஆனால், சுவாமிகளைப் பற்றி அறிந்திராத பக்தர்கள் இந்த நிகழ்வு கண்டு கொதித்தனர்.

'யார் இந்தப் பரதேசி? தேரிலேயே ஏறி வருகி றானே... என்ன திமிர் இவனுக்கு?' என்று கோபம் கொப்பளிக்க தேரின் அருகே வந்தனர். சுவாமி களை வலுக்கட்டாயமாகத் தேரில் இருந்து இறக்கி விட்டனர்.

அதன் பின் 'முருகப் பெருமானுக்கு அரோஹரா' என்று கோஷமிட்டபடி தேரை இழுக்கத் தொடங்கினர் பக்தர்கள். ஆனால், தேர் நகர மறுத்தது. இன்னும் அதிக பக்தர்கள் சேர்ந்து மீண்டும் தேரை இழுக்க முற்பட்டனர். ஊஹும். தேர் அசைந்து கொடுக்கவில்லை!

அதன் பிறகே, சில பக்தர்களுக்கு விஷயம் புரிந்தது. மாயாண்டி சுவாமிகளை சிலர் அவமதித்து விட்ட நிகழ்வை அறிந்தனர். உடனே, மாயாண்டி சுவாமிகளை அந்தக் கூட்டத்தில் தேடினர். அவர், ஒரு பாறையில் கற்றாழைச் செடி மீது வடிவேலனாக படுத்திருந்த கோலத்தில் காட்சி தந்தார்.

 அவர் அருகே நெருங்கி வணங்கினர். பிறகு, 'தேர் நகர்வதற்கு சுவாமிகள் அருள் புரிய வேண்டும்' என்று கேட்டுக் கொண் டனர். அத்துடன், சுவாமிகளை அவமதித்த பக்தர்களும் அங்கு வந்து, தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரினர்.
புன்னகைத்தவாறே மாயாண்டி சுவாமிகள் அங்கிருந்து எழுந்தார். அனைவரும் சுவாமிகளை அழைத்து வந்தனர். தேர் வடத்தின் மீது சுவாமிகள் கை வைத்து இழுக்க... பக்தர்களின் கரகோஷத்துடன் தேர் அசைந்தாடி அழகாக நகர்ந்தது.

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலைத் தரிசிப்போமா? 'சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம்' என்று அழைக்கப்படுகிறது இந்த இடம். ராமநாதபுரம் அரண்மனைக்கு ராமலிங்க விலாசம் என்று பெயர். அதற்கு ஈடான சிறப்பு இங்கு இருக்க வேண்டும் என்பதற்காக சுவாமிகள் அதே பெயரை வைக்கச் சொன்னாராம்.

ஏராளமான சித்தர்கள் வசித்து, தவம் புரிந்த இடம்- திருக்கூடல் மலை. இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இந்த மலையில் ஏராளமான சமாதிகள் உள்ளன.

பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அபிஷேக- ஆராதனைகள் சிறப்பாக இருக்கும். புரட்டாசி மாதம் வளர்பிறை கேட்டை நட்சத்திரத்தன்று (நவராத்திரி காலம்) சுவாமிகளின் குருபூஜை நடைபெறும். அந்தத் தினத்தில் மட்டும் சுமார் ஐம்பதாயிரம் பேர் வந்து தரிசித்துச் செல்வார்களாம். அவரது திருவுருவப் படத்துக்கு பூக்களால் அலங்காரம் செய்து வீதியுலா வருவார்கள்.

இதே தினத்தன்று ஆழ்வார்த் திருநகரி மற்றும் மியான்மர், சிங்கப்பூர் ஆகிய நாடுகள்... தவிர, சுவாமிகளின் அனைத்து மடங்களிலும் அன்னதானமும் குருபூஜையும் நடை பெறுகின்றன.

சித்தர்களுக்கும் மகான்களுக்கும் ஏது நிரந்தர வாசம்? பக்தர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சென்று அருள் புரிவதுதான் இவர்களின் சேவை!
இந்த அண்ட சராசரமே இவர்களது அருளாட்சிக்கு உட்பட்டவைதானே? அதனால்தானோ என்னவோ, மாயாண்டி சுவாமிகளுக்கு ரங்கூனிலும் ஒரு மடம் நிறுவப்பட்டு அங்கும் தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.

கட்டிக்குளம் அருள்மிகு சூட்டுக்கோல் மாயாண்டிசுவாமிகளின் 88ம் ஆண்டு குருபூஜை விழா கட்டிக்குளத்தில்  திருக்கோயிலில் 14.10.2018  அன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

Saturday, August 18, 2018

*வெள்ள* *நிவாரண நிதி* *திரட்டும் நிகழ்ச்சி* *திரு வி கே* *முனிசாமி குலாலர் * அவர்கள்






சுடு மண் கலைஞரும் (டெரகோட்டா) யுனெஸ்கோ விருது பெற்றவரும்

தேசிய விருது பெற்றவரும் உலக அளவில் தனது  கலைச் சேவையால் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் *திரு வி கே* *முனிசாமி* அவர்கள் கேரள இயற்கை சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம்


                         *வெள்ள* *நிவாரண நிதி* *திரட்டும் நிகழ்ச்சி* 



சனிக்கிழமை 18 .8.18 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 19 8 18 ஆகிய தேதிகளில் புதுச்சேரி கடற்கரை சாலை மகாத்மா காந்தி சிலை எதிரில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தனது தொடர் களிமண் சிற்பம் செய்து நிதி திரட்டுகிறார்.
 அவரின் முயற்சிக்கு ஆதரவு அளித்து ஊக்குவிப்போம்


Monday, August 13, 2018

Full History Of Kulalar அந்த ஆண்டவனின் குலம் மண்ணை ஆண்டவனின் குலம்












இந்த பிரபஞ்சம் தோன்றிய காலம் முதலே அதனோடு பயணிக்கும் ஒரு குலம்.
 மனிதனை படைத்து உயிர் கொடூத்தது கடவுள் என்றால் அந்த கடவுளை படைத்து உயிர் கொடுத்தவன் குயவன்.
அந்த ஆண்டவனின் குலம் மண்ணை ஆண்டவனின் குலம்.
ஆதி குலம்,
முதல் அரச குலம்,முதல் சத்திரியன்,முதல் விஞ்ஞானி, முதல் வணிகன்,முதல் மருத்துவன்,முதல் படைப்பு தொழில் என அனைத்து புகழுக்கும் உரித்தான குலம் என்றால் அது குலாலர் குலமே,குயவர் இனமே.
 இவர்களே குசிவன், குசக்தி ஆனார்கள் இதுவே மருவி இன்று குசவன் குசத்தி யாகி நிற்கிறது.பின் திருமால் பிரம்மா படைக்க பட்டான். திருமால்,சிவன்,பிரம்மா மூவரும் இணைந்து முதலில் மாபெரும் படைப்பு தொழில் செய்தனர் அந்த படைப்பு தான் ஓர் மண்பானை பிரபஞ்சத்தில் தோன்றிய முதல் தொழில் குயவு.அதன் பின் பிரம்மா மனிதர்களை படைக்கிறார் சுயம்பு மனு உருவாகிறான் பிரம்மா தனக்கு உதவியாக உயிர்களை படைக்க பிரம்ம புத்திரர்களான பிரஜாபதி அதாவது மக்கள் தலைவனை உருவாக்கினார்.
அவர்களை உலகெல்லாம் அனுப்பி உயிர்களை படைக்க உத்தரவிடபட்டது இந்த பிரஜாபதியிடமிருந்து வந்ததே இன்றைய மக்கள் சமூகம்.அனைவரும் குலால பிரஜாபதியிடமிருந்து வந்தவர்ரகளே.
உடலையும் உள்ளத்தையுயும் ஒருநிலைபடூத்தி பரபிரம்மத்தை அறியலாம் நீண்ட மரணமில்லா வாழ்வு வாழலாம் என நம்பினார். இந்து மதம் அறிவியலை ஆன்மீகத்தோடு தொடர்பு வைத்தது உடலை பேணி உள்ளத்தை பேணி தர்மத்தின் வழி நின்று இம்மதம் சிறப்பாக விளங்கி வந்தது. 
தன்னை காக்கும் இயற்கையையும் தன் முன்னோர்களையும் தெய்வமாக வணங்கியது.உடலுக்கு அழிவுண்டு உயிருக்கு அழிவில்லை என நம்பியது ஒரு சீவன் உடலை விட்டு பிரிந்து சென்று மீண்டும் உடலோடு இணைவதை போகர் விளக்குகிறார். சிவன் ,திருமால், பிரம்மா,பிரஜாபதி என்ற அரசர்களை தொடர்ந்து போஜன் போன்ற பல மன்னர்கள் குலாலகுல சிறப்போடு உலகை ஆண்டனர் இந்து துவத்திற்கே உரிதான தர்மத்தின் வழி நின்றனர்.
 இப்பாரத நாட்டை இந்து என்ற புராதன மதத்தை சேர்ந்தவர்கள் ஆண்டு வரும் வேலையில் பாரதநாட்டை விக்ரமாதித்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.அவன் காளி தேவியின் அருளோடு சாகாவரம் வாங்கி பாரதத்தை ஆண்டான்.அவனது ஆயுட்காலம் முடியும் நாள் வந்தது. சாதாரண மனிதனானால் எளிதில் அழித்திருக்கலாம் ஆனால் விக்ரமாதித்தன் மாபெரும் சகாப்த நாயகன் அவனை எளிதில் வீழ்த்த முடியாது என்பதால் அவனை அழிக்க திருமால் அவதரிக்க முடிவெடுத்தார் பூமியில் அவரை காக்கும் பொருட்டு ஆதிசேஷன் அவரது தந்தை யாக அவதரித்தார்.ஆதிசேஷன் என்ற குயவருக்கும் ஆரவள்ளி என்ற குயத்திக்கும் மகனாக. சாலிவாகனன் கி.மு 78 ல் பிரதிஷ்டான நகரத்தில் புரந்தாபுரியிலுள்ள குலால சேரியில் பிறந்தார்.  சாலிவாகனன் என்ற பெயரில் அவதரித்தார்.சாதாரண குயவர் குடியில் பிறந்த சாலிவாகனன் சிறுவயதிலிருந்து தன்னை அரசனாக பாவித்து வளர்ந்து வந்தான்.
சாலிவாகனன் என்ற பெயர் தமிழ் பெயர் சால் என்பதற்கு குதிரை என பொருள் குதிரையை வாகனமாக கொண்டவன் சாலிவாகனன்.தமிழானது பண்டைய காலத்தில் பாரத நாடெல்லாம் பேச பட்டது.
 தமிழ் மக்கள் பயன்பாட்டு மொழியாகவும் சமஸ்கிருதம் அரசவை மொழியாகவும் விளங்கியது.சாலிவாகனன் சிறுவயதிலிருந்தே மிகவும் புத்திகூர்மையுடனும்,வீரத்துடன் சகல கலைகளையும் கற்று வளர்ந்தான்.
மண்ணில் அரசபரிபாலன பொம்மை செய்து தன்னை அரசனாக எண்ணி வளர்ந்து வந்தான்.அவனது புத்திகூர்மை விக்கிரமாதித்தன் செவிகளை எட்டியதூ. சாலிவாகனனை தன் படையில் சேர்க்க விக்ரமாதித்தன் அழைப்பு விடுத்தான்.ஆனால்  சிறு வயது முதலே தன்னை அரசனாக எண்ணி வளர்ந்து வந்த சாலிவாகனன் கோரிக்கையை! நிராகரித்தான்.அதனால் கோவம் கொண்ட விக்ரமாதித்தன் சாலிவாகனன் மீது படையை ஏவினான் அவர்களை துவம்சம் செய்த சாலிவாகனன் விக்ரமாதித்தனுக்கு எச்சரிக்கையிட்டான. விக்ரமாதித்தன் சாலிவாகனன் மீது படையெடுத்து வந்தான். 
 இதனை அறிந்த சாலிவாகனன் தான் செய்து வைத்த மண் படைகளுக்கு உயிர் கொடுத்தான். 
விக்ரமாதித்தன் படையோடு சாலிவாகனன் படை மோதியது.இறுதியில் சாலிவாகனன் வெற்றி பெற்றான். 
விக்ரமாதித்தன் காட்டிற்குள் ஓடி ஒளிந்தான் பகையை விட்டுவைக்க கூடாது என நினைத்தான் சாலிவாகனன்.விக்ரமாதித்தனை தேடி பிடித்து கொன்றான். 56 தேசங்களை ஆண்ட விக்ரமாதித்தனை வீழ்த்தி அரசனான அந்த நாளே தமிழ் புத்தாண்டு என்றானது.
எதிர்த்த சிறு சிறு அரசர்களை வென்றான் அதாவது 56 தேசத்தை கைபற்றினான்.
 விக்ரமாதித்தன் சகாப்தம் சாலிவாகனன் சகாப்தமா மாற்றிய சாலிவாகனன்  எதிர்த்தவர்களை சிறுபோர் நடத்தி வென்றான்.
பாரதவர்ஷத்தை கைபற்றிய சாலிவாகனன் மேற்கத்திய நாடுகளை கைபற்ற எண்ணிணான் ஆனால்  அங்கு தர்மம் சீர்குலைந்து விட்டது. எனவே நீ கை பற்றிய தேசங்களை தர்ம நெறியோட ஆள கட்டளை இட்டார்.
 சாலிவாகனன் நாக கன்னிகை என்ற நாககுல பெண்ணை திருமணம் செய்தார்.அவரோடு விளையாடும் போது சமஸ்கிருதம் பேசிய நாககன்னிகை யின் வார்த்தை அர்த்ததை தவறாக புரிந்து கொண்ட சாலிவாகனன் சமஸ்கிருதம் கற்றூக்கொள்ள ஆசை பட்டான். அரசனாகும் வரை தமிழ் மட்டுமே பேச தெரிந்த சாலிவாகனன் சமஸ்கிருதம் கற்க ஆசை கொண்டதை அமைச்சர்களிடம் கூறினான்.சமஸ்கிருதம் கற்க எத்தனை நாட்கள் ஆகும் என கேட்டான்.மூன்று வருடம் ஆகும் என கூறிய அமைச்சரிடம் வெறும் ஆறு மாதத்தில் கற்று கொள்வதாக சவாலிட்டான். சிவபெருமானை நோக்கி தவமிருந்தான் சாலிவாகனன்.தவத்தின் பலனாக 
அதன் பின் சாலிவாகனன் அர்த்த சாஸ்திரம் ,அலங்கார சாஸ்திரம்,வைத்திய சாஸ்திரம் என்ற நூல்களை எழுதினான். சகஆண்டு என்ற சாலிவாகனன் ஆண்டு முறையை உருவாக்கி 60 ஆண்டு சுழற்சி முறையை உருவாக்கினார்.
கலைகளுக்கு முக்கியத்தூவம் கொடுத்தான் அனைவராலும் ரசிக்கும் படியான பொய் கால் குதிரை ஆட்டம் இவரது ஆட்சியில் உண்டானது. 
அனைத்து தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தான்.மக்கள் இவனை கொண்டாடினார்கள். இவனது கால நாணயங்களில் அரசர்கள் பெயர்கள் தமிழில் பொறிக்கபட்டிருக்கும்.ஆனால் இவனை தெலுங்கன் என கூறும் வேளையில் இவர் காலத்தில் தெலுங்கு மொழிகள் எதிலும் இடம் பெறவில்லை என்பதே உண்மை சாலிவாகனன் தமிழினத்தவனே.அது தான் உண்மை. அவன் தெலுங்கன் என்றால் இன்று வரை அவனால் கொண்டாடபட்ட சித்திரை 1 கொண்டாடிய மூவேந்தர்முதல் நாம் வரை யார்?ஒரு இனத்தின் அடையாளம் மறைக்கபடுகிறது 2000 வருடத்திற்கு முன்பே 100000 காலாட்படை 1000. யானைகள் 1000குதிரைகள்  என மிக பெரிய படை பிரிவினை கொண்டது சாலிவாகன பேரரசு.
இவனை தொடர்ந்து இவனது வம்சாவளியினர் பேரரசை உருவாக்கி பாரத நாட்டை திறமையாக நிர்வாகம் செய்தனர். சதகர்ணி,கௌதமி புத்ர சதகர்ணி அதில் குறிப்பிட தகுந்தவர்.
இவரை தொடர்ந்து வந்தவர்கள் இஷ்வாகுகள்,சத்ரபதிகள்,,ஆந்திரர்கள்,கடம்பர்கள்,ராஜ புத்திரர்கள்,பல்லவர்கள் ஆவர். 
சாலிவாகனன் இன்றைய தமிழகத்தை ஆண்ட போது இங்கு அவனால் சிவன் கோவில் கட்ட பணி துவங்கி அது கைவிடபட்டதூ.
பின் அதூ ராஜ ராஜனால் துவங்கப்பட்டு முடிக்கபட்டது.ஆம் ஒரு குயவன் எடூத்த காரியத்தை இன்னொரு குயவன் முடித்து வைத்தான்.சரிதான் ராஜ ராஜன் குலால இனத்தவன் ராஜராஜன் மட்டுமல்ல மூவேந்தர்களும் குலால குலமே.சோழ கல்வெட்டுகள் மூவேந்த வேளாரின் பெருமைகளை பற்றி கூறுகிறது.வேட்கோவரான வேளார்கள் கோவில் அதிகாரியாக,படைதளபதியாக,அரசராக,வணிகராக,ஊர்தலைவராக,மருத்துவரா பல நிலைகளில் இருந்துள்ளனர். இன்றும் சேர வேளார்,சோழ வேளார்,பாண்டிய வேளார் என்ற பட்டங்களில் தான் குறிப்பிடுகின்றனர்.சோழ அரசர்கள் உடையார் போன்ற பல பட்டங்களை கொண்டாலும் அவர்கள் பட்டம் கட்டும் போது அதாவது முடிசூடும் போது மூவேந்த வேளார் என்ற பட்டத்தை பயன்படுத்துவர்.வேளார்கள் சத்திரிய குலத்தை சேர்ந்தவர்கள்.வேளார் என்ற பெயர் யாரிடமிரூந்து வந்தது அனைவரும் அறிந்திருப்பர் தமிழ் கடவுள் முருகன் .அவரது பெயர் குமரவேள்.குமர தலைவன்.இந்த வேளினமே வேளார்கள். தமிழுக்கு சொந்தகாரர்கள்.
முன்பே சொல்லிருந்தேன். சிவன் மண்ணில் தண்ணீர் குடம் செய்தார்.அந்த குடத்திலிருந்து வந்தவரே அகத்திய மாமுனி.குடமுனி,கும்பமுனி, குருமுனி ஆவார்.சிவனிடமும்,முருகனிடமும் தமிழ் கற்றான் அகத்திய குயவன்.அது மட்டுமா தமிழை உலகெல்லாம் கொண்டு சென்றவர் அகத்தியர்.அறிவியல் மருத்துவம் என பலவற்றை தமிழ் மூலம் பரப்பினார். பல நதிகளை உருவாக்கினார். வடதிசையில் சிவ பெருமான் திருமணம் காண அனைவரும் சென்ற போது தனியாக தென்திசையில் இருந்து உலகை சமன் செய்தவர்.முருகன் யார் சிவன் என்ற குயவனுக்கும் சக்தி என்ற குசத்திகும் பிறந்தவன் தட்சபிரஜாபதியின் பேரன். இன்றூம் தட்சனூக்கு வட இந்திய குலால பிரஜாபதிகள் விழா எடுக்கின்றனர்.வேதங்கள்,புராணங்கள் எல்லாம் குலால பிரஜாபதியிடமிருந்து வந்தவர்களே மனிதர்கள் மட்டுமல் உயிருள்ள அனைத்துமாகும். இவ்வாறு பிரஜாபதியின் பேரனான குமரவேள் இனமான வேளார்கள் பல்லாண்டாக அரசாண்டு வந்தனர.அப்படிபட்ட முருகனுக்கு இருபிடமான பழனி மலையை உண்டாக்கியவன் அகத்திய குலாலன்.சிலை வைத்தது சீனத்து குயவன் போகர்.பூசைகள் செய்தது புலிபாணி உடையார் என்ற குயவன். 500 ஆண்டு முன்பு வரை தமிழக கோவிலில் பூசைகள் செய்த வேளார்கள் சதிகளால் .
அடிமையாக்கபட்டனர் சோழ சாம்ராஜ்ய சொந்தம் வஜ்சனையால் அதிகாரம் இறக்கபட்டு நாயக்கர் ஆட்சியில் பதவிகள் பறிக்கபட்டு புரதாண மதமான இந்து துவ வாதிகள் கோவிலை விட்டு வெளியேற்றபட்டு போலி பூசகர்கள் பணி அமர்த்தபட்டனர்.
மாபெரும் இந்துதுவ வாதி ராஜ புத்ர அரசர் மகாராணா கும்பா,அக்பரை கலங்கடிக்க வைத்த வீரன். 80 கோட்டைகளை கட்டிய மாமன்னன்.
 சீன சுவருக்கு இணையான சுவரை கட்டியவன்.மிக பெரிய கட்டிட பொறியாளன் .
எப்படி இறந்தார் கும்பாவின் மகன் வேற்று மதத்தை சேர்ந்த பெண்ணணை மணந்து கொள்ள எதிர்த்தான் . அதனால் அவன் மகன் அவனை கொன்றான்.கொரில்லா போர் யுக்தி,கடற்படை,மறைந்தூ தாக்குதல் என பல யுக்தியை கையாண்டு இந்து மதத்தை தாங்கி பிடித்த மாமன்னன் துரோகத்தால் கொல்லபட்டான்
என குலாலர்ள் இந்து மதத்தினை பல தடைகளூக்கிடையில் வளர்த்தனர். இன்று இவர்கள் சிறு கோவில் பூசாரிகளாகி விட்டார்கள்.தமிழனின் ஆதி வழிபாடான ஐயனார் கோவில் பராமரிப்பின்றி கிடக்கின்றது. 
நம் முன்னவன் பூமியில் புதைந்து கொண்டிருக்கிறான்.கடைசி வேளார் மூச்சு இருக்கும் வரை ஐயனாரின் புகழுக்கும் பூசைக்கும் அழிவு நேராது. சாலிவாகனனை அடுத்து குலால குல பேரரசு உதயமானதூ அதுவே விஜயநகர பேரரசு இவர்கள் உடையார் பட்டத்தை உடையவர்கள் இவர்களை தொடர்ந்து மைசூர் அரசு உருவானது இவர்களூம்  உடையார் பட்டம் பயன் படுத்தியவர்கள். சாலிவாகனனுக்கு முன்பே மாபெரும் குலால பேரரசு ஆண்டு வந்தது அது குசாண பேரரசு இப்பேரரசின் புகழுக்குரிய மன்னன் கனிஸ்கன்.இவன் நாக வழிபாடு உடையவன் 
.குசாண பேரரசிற்கு பிறகு குலால குல குஸ்வாகா பிரிவை சேர்ந்த மாபெரும் பேரரசு உதயமானது.அது தான் மௌரிய பேரரசு.அசோகர் அதில் புகழ்மிக்கவர்.இந்த பேரரசர்கள் பலர் விக்ரமாதித்தன் என்ற பட்டம் பெற்றவர். இதற்கு பிறகு சாலிவாகனன் பிறப்பு,மௌரியர் குலால பிரிவினர் சாலிவாகனன் குலாலன் அவ்வாரென்றால் மௌரிய பேரரசில் ஒருவர் விக்ரமாதித்தன் என்ற பட்டம் பெற்று அவனுக்கு சாலிவாகனன் பேரனானான். 
தமிழிலில் ராமாயணம் எழுதிய கம்பர் குலாலர்.காளி கோவில் பூசாரி தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டு சொல்லிலடங்காதது. 
தெலுங்கில் ராமாயணம் எழுதிய அத்துகுரி மொள்ள என்ற பெண் புலவர் குலால செட்டி பிரிவை சேர்ந்தவர்.
கன்னட திருவள்ளுவர் சர்வக்ஞர் மூன்று வரி குறள் 2000 எழுதியவர்.கன்னட குலாலர்.
இளஞ்சேட் சென்னி வேளார் மகன் கரிகாலசோழனின் அரசவை புலவர் கரிகாலன் செய்த தவறை சுட்டிகாட்டியவர் புறநானூறு பாடல் பாடிய வெண்ணிய குயத்தியார். 
சிவபெருமான் பக்திக்கு பாத்திரமான திருநீலகண்டநாயனார்,திருமாலின் பக்திக்கு பாத்திரமான கோர கும்பர்,சித்துகள் பலசெய்து பிரிட்ஷ் அதிகாரியை காலில் விழ வைத்த மதுரை கட்டிகுளம் மாயாண்டி சுவாமிகள் இவர்களின் ஆண்மீக பயணம் வியக்க வைக்கும் உண்மை. ஆரம்பகாலத்தில் மண்ணில் புத்தம் தயாரித்து படிப்பறிவை ஊட்டியவன் குயவன்.
மண்ணிலே சக்கரம் கண்ட முதல் விஞ்ஞானி குயவன்.மண்ணின் அறிவியல் தன்மை அறிந்து அதை அக்கி என்ற நோய்க்கு மருந்தாக்கியவன் குயவன்.இதன் மூலம் மண் குளியல் முறை உண்டானதூ.மண்ணை மூதலில் சாயமாக பயன் படுத்தியவன் குயவன்.மண்ணில் பானை,சிலை செய்த படைப்பாளி குயவன்.நக்கி குடித்த தண்ணீரை குவளையில் கொடுத்தவன் குயவன். காக்கை கழுகு கொத்தி நாறி போகும் உடலூக்கு தாழீ கொடுத்த நாகரிகமனிதன் குயவன்.குயவனிடமிருந்து தமிழை பிரிக்கமுடியாதது.
குயவனிடமிருந்து இந்து என்ற மதத்தை பிரிக்கமுடியாது.குயவனிடமிருந்து வீரத்தை பிரிக்க முடியாது.குலாலனே பிரம்மம்,குலாலனே சத்திரியன்,குலாலனே கடவுள்.மும்மூர்த்தி, பிரஜாபதிகள்,முருகன்,குசானர்கள் ,மௌரியர்கள்,சாலிவாகனன்,இஷ்வாகுகள்,,ராஜபுத்திரர்கள்,மூவேந்தர்கள்,விஜயநகர அரசர்கள்,மைசூர் அரசர்கள் இத்துனை சத்திரியர்களை கொண்டது குலாலகுலம்.கம்பர்,மொள்ள,வெண்ணி குயத்தி,சர்வக்ஞர்,திருவள்ளுவர் போன்ற புலவர்கள் குலால குலம்.திருநீலகண்டர்,கோரகும்பர்,மாயாண்டி சுவாமிகள் போன்ற ஆண்மீகவாதிகள் குயவர்கள்.சாலிவாகனன் வழி தோன்றல் பல்லவர்கள் குயவர்கள். நந்தீசர்,அகத்தியர்,திருமூலர்,காளங்கிநாதர்,போகர்,புலிபாணி என்ற சித்தர்கள் குயவர் குலம்.புத்த மதத்தை உருவாக்கிய புத்தர் குயவர்.இயேசுநாதர் குயவர் என்றே பைபில் கூற்று.
வரலாற்றில் குயவனை தேட வேண்டாம்.குயவனில் வரலாற்றை தேடு.
குயவர் வரலாறூ நூற்றாணடல்ல பல் யுகம்.
தெரிந்தவரை உள்ள வரலாறூ மெய் சிலிர்க்கிறதூ. இன்னூம் எத்துணை மர்மமானவன் குயவன்?
 வரலாறு மீட்போம் 
  வரலாறு படைப்போம் 
சமூக உயர்விற்காக என்றும் 
ஒன்று பட்ட குலாலர் பொதுநல சங்கம் 
நெல்லை மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் 
செங்கை தமிழன் ராஜேஷ் ஆறுமுகம் பிரம்மாவின் மகன்.

Tuesday, August 7, 2018

குயவர்குடி

குயவர் என்பவர் மண்ணை முக்கிய ஆதாரமாக கொண்டு மண்ணாலான பொருள்களை செய்பவராவர். சுழலும் சக்கரத்தின் உதவியுடன் மண்ணலான பொருள்களான மண்பானை, சட்டி, மண்தொட்டி போன்ற பல பொருள்களை குயவர் வடிவமைக்கிறார்.






குயவர், குலாலர், குலால கோலப்பர், வேலர், வேளார், சேரமா, செட்டி, பண்டுரை, பாண்ட, பாண்டிய, தெங்கரை, தெலுங்கு மானுடை, உடையார், பாட்டுக்காரர், ஓசிரையர், சாலியர், சோலியர், மண்ணையர் எனப் பல்வேறு இனக்குழுப் பெயராலும், தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திருவிட மொழிகளாலும், பூர்வீக நிலவாழ்வினாலும் பல்வேறு துணைப் பிரிவினராக அறியப்படும் குயவர்கள் அன்றைய காலத்தில் சமூக மதிப்பீட்டில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள் என்பது பல்வேறு கல்வெட்டு, இலக்கியப் பதிவுகளின் மூலம் புலப்படுகின்றன.

தென்னாற்காட்டின் திருவக்கரை கோயிலுக்கு செம்பியன் மாதேவி அளித்த தானங்களை, ‘கலங்களும் மற்றுஞ் சால்களும் குடங்களும் பெருந் திருவமுதுக்கு பானைகளும் சட்டிகளும் திருமுளைக்கு பாலிகைகளும் இடும் குசவன்’ என்று கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குயவர்கள் மட்பாண்டத் தயாரிப்போடு அவற்றைப் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் வணிகத்திலும் ஈடுபட்டார்கள். மண்ணே மூலப்பொருள் எனும்போது சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் நன்னீர் ஆதாரத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே குடில் அமைத்துத் தங்கினார்கள். சிற்றூர் பேரூர் என அவர்கள் வியாபாரம் செய்த ஊர்களின் விளைச்சல் பொருட்களை மாற்றாகப் பெற்றுக் கொண்டார்கள். ‘பண்டமாற்று’ என்ற வழக்குச்சொல் அவர்களின் தொழில் முறையிலிருந்து உருவானது.

சங்க, புராண இலக்கியங்களில், கலம்செய்கேரி, மண்ணுடையார், மண்ணீட்டாளர், மண்வினை மாக்கள், மண்மகன், வேட்கோ, வேட்கோவர் என்றெல்லாம் தொழில்முறையாக அடையாளப்படுத்தப்பட்ட இவர்கள் கோயில் பணியாளர்களாக, பாதுகாவலர்களாக பூசகர் மரபினராக இருந்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

திருநெல்வேலியின் மேலகரம், திருச்சியின் காட்டகரம், தென் ஆற்காட்டின் புத்தகரம், வட ஆற்காட்டின் கோட்டகரம், மாயவரத்தின் அகரங்கிரங்குடி சென்னை திருவத்தியூரின் அகரம் கண்ட கோபாலபுரம் ஆகிய ஊர்கள் குயவர்குடிகளாக அடையாளப்படுத்தமுடியும்.

Saturday, August 4, 2018

Salivahanan New Art Picture


      பாமரர்களின் ஆட்சியைக் கொண்டு வந்தவன் சாலிவாகன சகாப்தம்



.


Thanks To ippodhu

Hello வேளார்s கொஞ்சம் படிங்கப்பா.





இக்கட்டுரையின் நோக்கம் வேளார் என்பதற்க்கும் வேளாளர் என்பதற்க்குமான பெரும் இடைவெளியை வெளிக்கொணர்வதே அகும்.
வேளார் என்பதும் வேளாளர் என்பதும் ஒன்றுக்கொன்று இணையான சொற்கள் போன்று தோன்றினாலும் இரண்டும் வேறுபட்ட பொருள் தருவன.
வேள்,வேளார்,வேளான் -என்பன அரசன்/தலைவன் பொருள் தருபவன

அதே நேரம்

வேளாளர் ,வெள்ளாளர்-என்பன உழுகுடியைக் குறிக்கும் சொற்கள்


வேள்,வேளார்,வேளான் என்பது அரசனை/தலைவனைக் குறிப்பது!


அதே போல்

வேண்மான் -என்பது வேள் எனும் அரசகுடியினரின் மகன்
வேண்மாள் -என்பது வேள் எனும் அரசகுடியினரின் மகள்
என்றும் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.
வேண்மாள் ,வேண்மான் என்பதற்கான உதாரணங்கள்!
உதியன் சேரலாதன், வெளியன் வேண்மாள் நல்லினி தம்பதியருக்குப் பிறந்தவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
“குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன் வேண்மாள் அந்துவனை செள்ளை ஈன்ற மகன் … இளஞ்சேரல் இரும்பொறை”அந்துவன் (சேரன்)
கரிகாற்சோழருக்குப் பின்னர் தித்தன் ஆட்சிக்கு வந்தார். கடற்கரைப் பட்டினமான வீரையை ஆண்ட வெளியன் என்ற வேளிரின் மகன் தித்தன். இவர் சோழரின் மகளை மணந்து சோழரானார். இவரது முழுமையான பெயர் “வீரை வேண்மான் வெளியன் தித்தன்“ என்பதாகும்

“வேளார் என்பதும், வேளாளர் என்பதும் வெவ்வேறு இனத்தவரின் குடிப்பெயர்கள்.

வேளார் உழுவித்து உண்பவர்-அரச பரம்பையினர். வேளாளர் உழுது உண்பவர்- உழவர். உழுபவருக்கு வேளாண் என்ற குடிப்பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியது. வேளாண் என்பதற்கு உபகாரி என்று
 பொருள்.

“வேளாண் வாயில் வெப்பக்கூறி”
வேளாண் என்பது உதவியென்றே பழந்தமிழ் இலக்கியங்களில் பயின்று வந்திருக்கிறது.உதாரணங்கள் சில!


தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்

பொருள்: முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்- சாலமன் பாப்பையா

இக்குறளில் வேளாண்மை என்பது உதவி எனும் பொருள் தரும்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:81)
பொழிப்பு: வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவிசெய்யும் பொருட்டே ஆகும். இதில் வேளாண்மை என்பது உபசரித்தல் எனும் உதவி.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு

-பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.
மு.வரதராசன் -இக்குறளில் வேளாண்மை என்பது உதவி எனும் பொருளில் வருகிறது.

இப்போது வேளான்மை எனும் சொல் அன்று பயிர்செய்யும் தொழிலுக்குப் பயன்படுத்தப்படவில்லை.
வேளார் உழுவித்து உண்பவர்-அரச பரம்பையினர்.வேளாளர் உழுது உண்பவர்- உழவர்.
வேள் என்பதன் தோற்றுவாய்
வெள்ளை, வெண்மை, வெள்ளி என்ற சொற்கள் எல்லாம் வெண்மை நிறம் அல்லது ஒளியுடைய என்ற பொருள் தரும் வெள் என்ற அடிச்சொல்லின் அடியாகப் பிறந்தன எனலாம். வேள் என்ற சொல்லும் இதனடியாகப் பிறந்தது எனக்கொண்டால் அச்சொல் புகழ்பெற்ற ஒள்ளியராய் விளங்குவோர் என்ற பொருளைத் தருவதாலும அல்லது பழங்கலாத்தில் அரசர்களைப் பற்றிப் பொதுவாக நிலவிய நம்பிக்கையின்படி வேளிரிடத்துள்ள ஒளி அல்லது கடவுள் தன்மை என்ற பொருளைத் தருவதாகும்.

பட்டினப்பாலையில் “பல்ஒளியர் பணி பொருங்க” என்று பயின்றுவரும் அடி எடுத்துக் காட்டத்தக்கது. இவ்வடியில் பல் ஒளியர் என்று கூறுவது வேளிர்களையே ஆகும்.

ஆரம்பத்தில் வேளிர் எனும் மரபினருக்கு வழங்கப்பட்ட பெயரை பின்னாட்களில் வேளாளர் எனும் திரிபோடு பல்வேறு இனக்குழுக்களும் சேர்த்துக்கொண்டு சிறப்புப் பெற முனைந்துள்ளனர். ஆனால் இதே வேளாளர்கள் வெவ்வேறு சாதிப்பெயர்களில்(100க்கும் மேற்பட்ட பெயர்களில்) அரசுப் பட்டியலில் உள்ளதே வேளாளர் என்று இனம் காணப்படுவோர் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதை மிக எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய சான்றாகும்.

ஆகவே வேளிர் என சிறப்புற விளங்கியவர்கள் உயர்குடி வேளாராகிய இன்றைய குலாலர்   இனத்தவரே  இவர்களே சமூகத்தின் உயர் அடுக்கில் இருந்தவர்கள் என்பதும்

ஆனால் இன்று இப்பெருமையை போலியாக சூடிக்கொண்டவர்களே ,உயர்வுமிக்க  குலாலர்  இனத்தை தாழ்த்த நினைப்பது அறியமையாமை மட்டுமல்ல பெரும் கயமை!

Friday, August 3, 2018

இலட்ச கணக்கில் அணி திரள்வோம்...! இலட்சியங்களை அடைவோம்...

குலாலர் இனமே அலைகடலென திரண்டு வாரீர்.........

இலட்ச கணக்கில் அணி திரள்வோம்...!  
இலட்சியங்களை அடைவோம்...

 குலாலர் மீது உண்மையான அக்கறை கொண்டு ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அந்த மாற்றம் மீண்டும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட குலாலர் மக்களை அடிமையாக்கும் ஆதிக்க சக்திகளுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு
 
குலாலர் மாநில எழுச்சி மாநாட்டிற்கு நம் குல மாவீரர் சாலியவாகணன் புகழை இந்த நாட்டிற்கு காட்ட

வாரீர்! வாரீர்! என தோழமையுடன் வரவேற்கும்.

 விழா ஒருங்கிணைப்பாளர்:
A.அமல்ராஜ் குருவிகுளம் தொடர்புக்கு: 9943573814


இடம்: ஸ்ரீவில்லிபுத்தூர்
குலாலர் பஜார்
நாள் செப்டம்பர் மாதம் 16 ம் நாள்



Saturday, July 7, 2018

குலாலர் புராணம் விலைரூ.150 dinamalar.com & amazon.in விற்ப்பனைக்கு


குலாலர் புராணம்
விலைரூ.150


ஆசிரியர் : ர. அருள்நிதி
வெளியீடு: கீதம் பப்ளிகேஷன்ஸ்
பகுதி: இலக்கியம்



 உலகில் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு நெருப்பும், சக்கரமும் தான். சக்கரத்தின் துணை கொண்டு களி மண்ணில் மண்பாண்டங்களை உருவாக்கி, உலக மக்களுக்கு அளித்த  இனத்தை, குலாலர்கள் என்று சொல்வர



உலகில் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு நெருப்பும், சக்கரமும் தான். சக்கரத்தின் துணை கொண்டு களி மண்ணில் மண்பாண்டங்களை உருவாக்கி, உலக மக்களுக்கு அளித்த  இனத்தை, குலாலர்கள் என்று சொல்வர்.
இந்தக் குலமே, மக்கள் குலத்தின் தொன்மையான குலம். இவர்களை பற்றிய பூர்வ உத்திரக் கதைகளின் தொகுப்பே இது. நம்மைச் செய்கின்ற குயவனர் கடவுள். அந்தப் பெரிய குயவனின் பிள்ளைகள் ஆகிய நாம் எல்லாரும் ஒற்றுமையாக வாழ்ந்து, பிறவிப் பெரும் பயன் அடைய  வழி காட்டும் பக்தி இலக்கியம் இது. சமய இலக்கியப் பொக்கிஷம்.
எஸ்.குரு



https://www.amazon.in/Kulalar-Puranam-R-Arulnithi/dp/B00YHRGND0

http://books.dinamalar.com/details.asp?id=22566

Wednesday, May 16, 2018

தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த '' வேட்கோவர் '' யார் என்று புரிகிறதா குலால

நன்றி
By கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை, துணை கண்காணிப்பாளர் (ஓய்வு)




கிராமங்களில் பல்வேறு தொழில் செய்பவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் சுய தேவைக்கு மற்றும் வேண்டும் பொருள்களை அங்கேயே செய்து கொண்டனர். அவ்வாறு பல தொழில்கள் மேற்கொள்ளப்பட்டாலும், மக்களின் தேவைக்கு ஏற்ப மட்பாண்டங்களை

 செய்து அளித்த குயவர் பெருங்குடி மக்கள் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விளங்குகின்றனர். தொழில்களில் தொன்மைச் சிறப்பு வாய்ந்தது மட்பாண்டத் தொழில். மனிதன் ஓர் இடத்தில் நிலையாகத் தங்கி உணவு உற்பத்தி செய்யத் தொடங்கியது புதிய கற்காலத்தில் (சங்ஜ் நற்ர்ய்ங் அஞ்ங்). அவனுக்கு அப்பொழுது உணவையும், நீரையும் சேகரித்து வைத்துக்கொள்ள மண்பானை போன்ற ஒரு பாத்திரம் தேவைப்பட்டது. களிமண்ணைப் பிசைந்து உருட்டி கைகளால் மண்பானை செய்து, வெயிலில் காயவைத்து பயன்படுத்தினான். இவ்வாறு கைகளால் செய்த பானைகள்   பழுப்பு நிறமுடைய - சொரசொரப்பான பானைகள் புதிய கற்கால இடங்களில் - அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன


இதற்குப் பின்னர் வருகிற இரும்பு உலோகக் காலமான பெருங்கற்காலம் மனிதன் நாகரிகத்தில் ஏற்பட்ட பல முன்னேற்றங்களை எடுத்துக் காட்டுகிறது. தங்குவதற்கு வீடுகள், இரும்புப் பொருள்கள், வண்ணக் கல் மணிகள், சக்கரத்தில் வைத்து வனையப்பட்ட பானைகள் போன்றவை அக்கால நாகரிகத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டுகிறது. பானைகளில் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. சூளையில் வைப்பதால் பானையின் உட்பகுதி கறுப்பாகவும் வெளிப்பகுதி சிவந்த நிறமாகவும் காணப்படும். இத்தகைய கறுப்பு - சிவப்பு நிற பானை ஓடுகள் தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் காணப்படுகின்றன. இராமநாதபுரம் அருகே 30.கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள "தேரிருவேலி' என்ற இடத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் சங்ககால பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அதில் "கொற்றன்' "நெடுங்கிள்(ளி)' போன்ற பெயர்கள் பண்டைய தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.



இத்தகைய பானை ஓடுகளில் குறியீடுகள் (எதஅஊஊஐபஐ) பண்டைய தமிழ் எழுத்துகள் எழுதப்பட்டு - பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. சாதாரண மக்களின் பயன்பாட்டுச் சிறப்பு, பொருளாதார நிலை, கல்வி அறிவு, உணவு உற்பத்தி செய்யும் நிலை போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ளப் பண்டைய பானை ஓடுகள் பெரிதும் உதவுவதால், தொல்லியல் ஆய்வில் இவை முக்கியமான சான்றாகவும் விளங்குகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாகப் பயன்படுத்திய பொருள், மட்பாண்டங்களே ஆகும். அதன் தொடர்ச்சிதான் இன்றும் பொங்கல் பண்டிகையின் போது மண்பானை வைத்து பலர் பொங்கலிடுகின்றனர்.




தமிழகம் அயல் நாடுகளுடன் கொண்டிருந்த வணிகம் மற்றும் கலாசாரத் தொடர்பு குறித்து அறிந்து  கொள்ளவும், மண்பானை ஓடுகள் பெரிதும் உதவுகின்றன. அரிட்டைன், ரெளலடட், ஆம்பொராமதுஜாடி போன்ற ரோமானிய பானை ஓடுகள் போன்றவை வெளிநாட்டுத் தொடர்பினை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் கரூர், கொடுமணல், மாங்குடி, மரக்காணம், அழகன்குளம், அரிக்கமேடு, மாமல்லபுரம், காஞ்சிபுரம், கங்கைகொண்ட சோழபுரம், நாகப்பட்டினம், பெரியபட்டினம் முதலிய பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் தொன்மை சிறப்புமிக்க மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன.



மட்பாண்டங்கள் செய்யும் குயவர் பெருமக்களைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவர்கள், "வேட்கோவர், கலம் செய்கேரி, மண்வினை மாக்கள், மண்மகன்' என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அவர்கள் கிராம மக்களுக்கு வேண்டிய பானைகள், சட்டிகள், என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அவர்கள் கிராம மக்களுக்கு வேண்டிய பானைகள், சட்டிகள், குறியீடுகளுடன் காணப்படும் உலோகக் கால மட்பாண்டங்கள்குறியீடுகளுடன் காணப்படும் உலோகக் கால மட்பாண்டங்கள்




பண்டைக் காலத்தில் கிராம சபைகளின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பானைகள் ஓட்டுப்

பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின்'' (அகம். 77:7-8)
இறந்தவர்களை மண் பானைக்குள் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது என்பதை, ""சுடுவோர் இடுவோர் தொடுகுழி படுப்போர் தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர்''என மணிமேகலை குறிக்கிறது. சோழ மன்னன் கிள்ளிவளவன் இறந்தபொழுது அவனைப் புதைக்க,

தாழியைச் செய்யும் குயவனைப் பார்த்து ஐயூர்முடவனார் கேட்பதாக ஒரு பாடல்  கோவே கலஞ்செய் கோவே') புறநானூற்றில் வருகிறது. இன்னொரு பாடலில், "போரில் மாண்ட என் கணவரை அடக்கம் செய்யும் ஈமத்தாழியிலேயே என்னையும் சேர்த்து அடக்கம் செய்ய சற்றே அகன்ற வாயுடைய பெரிய தாழியாகச் செய்து தர வேண்டும்' என்று வேட்கோவை வேண்டுகிறாள் (புறம்-256) என்ற செய்தி காணப்படுகிறது. இதற்குச் சான்றாக தமிழகத்தில் முதுமக்கட்தாழிகள் ஆதிச்சநல்லூர், கொற்கை, அமரிதமங்கலம், பூம்புகார், செம்பியன் கண்டியூர், கோவலன் பொட்டல், எடமணல் (சீர்காழி அருகில்) முதலிய பல இடங்களில் தொல்லியல் ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


பிற்கால வரலாற்றிலும் "வேட்கோவர்' சிறப்பிடம் பெற்று விளங்குவதை கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. மண் பானை செய்பவர்கள் "வேட்கோவர், வேட்கோ, கலமிடும் குசவன், மண்ணுடையார், பெருங்குசவன்' என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பதைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது


.
குயவர்கள் கோயில் ஊழியர்களாகப் பணிபுரிந்துள்ளனர். திருக்கோயில்களுக்கு வேண்டிய பானைகள், குடங்கள், சட்டிகள், கலசங்கள் போன்றவற்றை செய்து அளித்துள்ளனர். திருவக்கரை கோயிலுக்கு செம்பியன் மாதேவியரால் அளிக்கப்பட்ட தானங்களைக் குறிப்பிடும் கல்வெட்டில்,


""கலங்களும் மற்றுஞ் சால்களும் குடங்களும் பெருந்திருவமுதுக்கு பானைகளும் சட்டிகளும் திருமுளைக்கு பாலிகைகளும்  இடும் குசவன்''

எனக் குறிப்பிடப்படுகிறது. திருவரங்கம் கோயிலில் பெருமாளுக்கு அமுது படைக்கப்படும் மண்பானை "கூன்' என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. திருக்கோயிலில் மடங்கள், மடைப்பள்ளிகளிலும் அவர்கள் பணிபுரிந்திருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு நிலங்களும் அளிக்கப்பட்டன. கிராம சபைகளும் அவர்களுக்கு நிலம் அளித்துள்ளது. இவ்வாறு அளிக்கப்பட்ட

நிலம் "குசக்காணி, குசவன் நிலம், குசப்பட்டி, குலால விருத்தி, வேட்கோவக்காணி' என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கப்பட்டதைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. கோயிலில் பணிபுரிபவருக்கு வீட்டுமனைகளும் அளிக்கப்பட்டுள்ளது. குயவர்கள் செய்யும் தொழிலின் மீது குசக்காணம், சக்கர காணிக்கை, திரிகை ஆயம் போன்ற வரிகளும் விதிக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. திருக்கோயிலுக்கு வெளியூரிலிருந்து வந்து வழிபடும் பக்தர்களின் வசதிக்காக உணவு அளிக்கப்பட்டுள்ளது. அது "சட்டிச்சோறு' எனக் குறிப்பிடப்படுகிறது. அதற்காக அளிக்கப்பட்ட நிலம் "சட்டிச்சோறுபுறம்' என அழைக்கப்பட்டது.


நன்னிலம் அருகே உள்ள திருவீழிமிழலைத் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏழு நாள்கள் நடைபெற்ற போது குயவர்கள் அந்த ஏழு நாள்களும் "அடுகலன்களும் நீர்கலன்களும்' அளிக்க தானம் அளிக்கப்பட்டதாக முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. திருக்கோயில்களுக்கும் வேட்கோவர்கள் தானம் அளித்துள்ளதை பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அவர்கள் "ஊர் கணக்காக' செயல்பட்டு வந்ததை திருவீழிமிழலை கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. நாகப்பட்டினத்தில் பெüத்த விகாரம் அமைக்க ஆனைமங்கலம் என்ற ஊர் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் அளிக்கப்பட்டது. அதனை வரையறுக்கும்பொழுது சாத்தமங்கலம் என்ற ஊரின் சார்பாக வேட்கோவன் நேந்திரன் சாத்தனான நானூற்றுவ பெருங்கோவேளான் கையெழுத்திட்டதை ஆனைமங்கலம் செப்பேடு கூறுகிறது.



மனிதனின் எல்லா சடங்குகளிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மண்பானை முக்கிய இடம் பெற்று விளங்குவதைப் போன்று தமிழக பண்பாடு - வரலாற்றில் வேட்கோவர்கள் முக்கிய இடம் பெற்று விளங்குவதை வரலாற்றுச் சான்றுகளால் அறிந்து பெருமை கொள்ள முடிகிறது. இக்கட்டுரை, "வேட்கோவர்' என்ற பெயரில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 1979-ஆம் ஆண்டு நடத்திய "தமிழ்நாடு அரசு கருத்தரங்கில்' படிக்கப்பெற்று நூலில் இடம்பெற்றுள்ளது.



விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுக்கா செட்டியார்பட்டி ரெங்கநாதபுரம் கொமந்தாபுரம் குலாலர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அரசரடி ஸ்ரீசித்தி விநாயகர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேகம் அழைப்பிதழ்








விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுக்கா செட்டியார்பட்டி ரெங்கநாதபுரம் கொமந்தாபுரம் குலாலர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அரசரடி ஸ்ரீசித்தி விநாயகர் திருக்கோவில் புனருத்தாராண அஷ்டபந்தனம்


                               மஹாகும்பாபிஷேகம் அழைப்பிதழ் 


25/05/2018. வைகாசி -11 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு மங்கள இசை முழங்க. கணபதி ஹோமம் , கோ பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெறும்

அதணை தொடர்ந்த் பிரசாதம் வழங்கல் மாலை 5:00 மணிக்கு முதல் யாகசாலை பூஜைகள் ஆரம்பம்

26/05/2018. வைகாசி 12 சனிக்கிழமை காலை 8:00. மணிக்கு இரண்டாம்கால யாகசாலை பூஜை நடைபெறும்
 மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெறும்
 
27/05/2018 வைகாசி 13. ஞாயிற்றுக்கிழமை காலை :3-00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெறும்
காலை 5:10. மணிக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெறும்
காலை 5:30. நையாண்டி மேளம் முழங்க பால் குடம் வீதி உலா

அதணை தொடர்ந்து காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும்

அதணை தொடர்ந்து காலை 10:00 மணியளவில் அன்னதானம் நடைபெறும்
கும்பாபிஷேக விழாவில் அனைத்து ஆண்மீக நெஞ்சங்களும் கலந்து கொண்டு
அரசரடி ஸ்ரீசித்தி விநாயகர் அருள் பெருக........

 news by Sakthi Vel

சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் வரலாறு


நம்முடைய ஆன்மிகத் தேடலுக்கும் அடைய விரும்பும் பேரின்பத்துக்கும் நல்ல குரு ஒருவரே வழிகாட்ட முடியும் . ஒரு குருவை நாம் தேடிக் கண்டடையும் போது அவரின் திருமேனியைத் தரிசிப்பதும் அவருடைய திருநாமத்தைச் சொல்லுவதும் அவருடைய உபதேசத்தைக் கேட்பதும் அவருடைய திருவுருவை நம் மனதில் வைத்துத் தியானிப்பதும் ஞானத்தை அளிக்கும். நமக்கு நல்ல கொடுப்பினை இருந்தால் சிவனே குருவாக வந்து நமக்கு மெய்யுணர்வை அளிக்கிறார் என்று திருமூலர் கூறுகிறார் .

அதனால்தானோ என்னவோ சிவனாகவே மாறிவிட்ட மாயாண்டி சுவாமிகள் ‘தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’ என்று ஒரு நல்ல குருவாக இருந்து பல சித்தர்களை உருவாக்கியிருக்கிறார் .

சிறுவனைச் சுற்றிய நாகம்

மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளார், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளார் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .

குத்துக்காலிட்டு மகன் தியானம் செய்துகொண்டிருப்பதையும் அவனுடைய உடலை நாகம் ஒன்று சுற்றிக்கொண்டு தலையின் மீது படம் எடுத்து நிற்பதையும் கண்டார் . “அய்யனாரப்பா என் மகனைக் காப்பாற்று” என்று குரல் எழுப்ப அந்தப் பாம்பு சட்டென்று மறைந்துவிட்டது. அதைக் கண்ட அவர் தம் மகன் சாதாரணப் பிறவியல்ல என்று உணர்ந்து கொண்டார்.

சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.

குரு செல்லப்ப சுவாமிகள்

மன்னார்குடியைச் சேர்ந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரான செல்லப்ப சுவாமிகள் இராமேசுவர யாத்திரை செல்லும் வழியில் கட்டிக்குளத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார் .

ஆசிர்வாதமும் வழிநடத்தலும்

ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .

ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .

ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .

அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார் .

சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் .

சட்டையைக் கழற்றிவிடலாமா?

நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் .
சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார்


Sunday, May 13, 2018

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சித்திரை திருவிழாவில் முதல் மண்டகப்படி குலாலர் மண்டகப்படி

 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 29-ம் தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்தையொட்டி, சாமி சந்நிதியில் உள்ள கம்பத்தடி மண்டபம்  மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு, பட்டர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர்.


சித்திரைத் திருவிழாவிற்காக காப்புக் கட்டிய பட்டர்கள், காலை 10.05 மணிக்கு 66 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடிப் பட்டத்தை ஏற்றினார்.  பிறகு,கொடிமரத்துக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்து, யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளி, பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். கொடியேற்றம் நடந்த பிறகு, மேலே இருந்து மலர்கள் தூவப்பட்டன. பின்னர், சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில்,

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதன் பிறகு, அம்மனும் சுந்தரேஸ்வரரும் சாமி சந்நிதி இரண்டாம் பிராகாரத்தில் 3 முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். பின்னர், கோயிலுக்குள் உள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளினார்கள். தொடர்ந்து, இரவில் கற்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனங்களில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வர உள்ளனர்.  கொடியேற்ற நிகழ்ச்சியில், மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கோயில் இணை ஆணையர் நடராஜன் உட்பட, பலர் கலந்துகொண்டனர்.

Saturday, May 12, 2018

மைசூர் மகாராஜா குலாலர் இனமே உன்மையான வரலாற்றில் இன்று

                            குலாலர்   மாநாட்டில் கலந்து

                             கொண்ட  மைசூர் மகாராஜா









மாநிலத் தலைவர் s.கண்ணன்



தமிழ் நாட்டில் முதன் முதலில் மாமன்னர் சாலியவாகணன் சிலை திறந்த

ஒன்றுபட்ட குலாலர் பொதுநலசங்கத்திற்க்கும் மாநிலத் தலைவர் s.கண்ணன்

அவர்களுக்கும் M.அழகாபுரி குலாலர் சமுதாய மக்கள் மற்றும் இளைஞர்கள்

சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கெள்கிறோம்

வீர மரணம் அ டைந்த எங்கள் குலாலகுல வம்ச ஜி சுசீலன்




ஜெய்ஹிந்.15 ம் ஆண்டு நினைவு அஞ்சலி.தாய் திருநாட்டுக்காக சத்தீஸ்காரில் வீர மரணம் அ டைந்த எங்கள் குலாலகுல வம்ச ஜி சுசீலன் அவற்களுக்கு நினைவு அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்
இப்படிக்கு .மனைவி.மகன்கள்&முட்டைக்காடு.குலார் தெரு ஊர் பொதுமக்கள்.

Thursday, May 10, 2018

welcome all

                                      

 

                                       welcome all 

 

                     this website all kulalar famly news

Saturday, April 14, 2018

2018 வீரன் சாலியவாகனன் குலாலர் குருபூஜை விழா all kulalar photos

2018 வீரன் சாலியவாகனன் குருபூஜை விழா

 




























































































































































வீரன் சாலியவாகனன் kulalar





வீரன் சாலியவாகனன்














kulalar photo





saliyavaganan hd photos





saliyavaganan







kulalar hd photos