இந்த பிரபஞ்சம் தோன்றிய
காலம் முதலே அதனோடு பயணிக்கும் ஒரு குலம்.
மனிதனை படைத்து உயிர் கொடூத்தது
கடவுள் என்றால் அந்த கடவுளை படைத்து உயிர் கொடுத்தவன் குயவன்.
அந்த
ஆண்டவனின் குலம் மண்ணை ஆண்டவனின் குலம்.
ஆதி குலம்,
முதல் அரச குலம்,முதல்
சத்திரியன்,முதல் விஞ்ஞானி, முதல் வணிகன்,முதல் மருத்துவன்,முதல் படைப்பு
தொழில் என அனைத்து புகழுக்கும் உரித்தான குலம் என்றால் அது குலாலர்
குலமே,குயவர் இனமே.
இவர்களே குசிவன், குசக்தி ஆனார்கள் இதுவே மருவி இன்று குசவன்
குசத்தி யாகி நிற்கிறது.பின் திருமால் பிரம்மா படைக்க பட்டான்.
திருமால்,சிவன்,பிரம்மா மூவரும் இணைந்து முதலில் மாபெரும் படைப்பு தொழில்
செய்தனர் அந்த படைப்பு தான் ஓர் மண்பானை பிரபஞ்சத்தில் தோன்றிய முதல்
தொழில் குயவு.அதன் பின் பிரம்மா மனிதர்களை படைக்கிறார் சுயம்பு மனு
உருவாகிறான் பிரம்மா தனக்கு உதவியாக உயிர்களை படைக்க பிரம்ம புத்திரர்களான
பிரஜாபதி அதாவது மக்கள் தலைவனை உருவாக்கினார்.
அவர்களை உலகெல்லாம் அனுப்பி
உயிர்களை படைக்க உத்தரவிடபட்டது இந்த பிரஜாபதியிடமிருந்து வந்ததே இன்றைய
மக்கள் சமூகம்.அனைவரும் குலால பிரஜாபதியிடமிருந்து வந்தவர்ரகளே.
உடலையும் உள்ளத்தையுயும்
ஒருநிலைபடூத்தி பரபிரம்மத்தை அறியலாம் நீண்ட மரணமில்லா வாழ்வு வாழலாம் என
நம்பினார். இந்து மதம் அறிவியலை ஆன்மீகத்தோடு தொடர்பு வைத்தது உடலை பேணி
உள்ளத்தை பேணி தர்மத்தின் வழி நின்று இம்மதம் சிறப்பாக விளங்கி வந்தது.
தன்னை காக்கும் இயற்கையையும் தன் முன்னோர்களையும் தெய்வமாக
வணங்கியது.உடலுக்கு அழிவுண்டு உயிருக்கு அழிவில்லை என நம்பியது ஒரு சீவன்
உடலை விட்டு பிரிந்து சென்று மீண்டும் உடலோடு இணைவதை போகர் விளக்குகிறார்.
சிவன் ,திருமால், பிரம்மா,பிரஜாபதி என்ற அரசர்களை தொடர்ந்து போஜன் போன்ற பல
மன்னர்கள் குலாலகுல சிறப்போடு உலகை ஆண்டனர் இந்து துவத்திற்கே உரிதான
தர்மத்தின் வழி நின்றனர்.
இப்பாரத நாட்டை இந்து என்ற புராதன மதத்தை
சேர்ந்தவர்கள் ஆண்டு வரும் வேலையில் பாரதநாட்டை விக்ரமாதித்தன் என்ற அரசன்
ஆண்டு வந்தான்.அவன் காளி தேவியின் அருளோடு சாகாவரம் வாங்கி பாரதத்தை
ஆண்டான்.அவனது ஆயுட்காலம் முடியும் நாள் வந்தது. சாதாரண மனிதனானால் எளிதில்
அழித்திருக்கலாம் ஆனால் விக்ரமாதித்தன் மாபெரும் சகாப்த நாயகன் அவனை
எளிதில் வீழ்த்த முடியாது என்பதால் அவனை அழிக்க திருமால் அவதரிக்க
முடிவெடுத்தார் பூமியில் அவரை காக்கும் பொருட்டு ஆதிசேஷன் அவரது தந்தை யாக
அவதரித்தார்.ஆதிசேஷன் என்ற குயவருக்கும் ஆரவள்ளி என்ற குயத்திக்கும் மகனாக.
சாலிவாகனன் கி.மு 78 ல் பிரதிஷ்டான நகரத்தில் புரந்தாபுரியிலுள்ள குலால
சேரியில் பிறந்தார். சாலிவாகனன் என்ற பெயரில் அவதரித்தார்.சாதாரண
குயவர் குடியில் பிறந்த சாலிவாகனன் சிறுவயதிலிருந்து தன்னை அரசனாக பாவித்து
வளர்ந்து வந்தான்.
சாலிவாகனன் என்ற பெயர் தமிழ் பெயர் சால் என்பதற்கு
குதிரை என பொருள் குதிரையை வாகனமாக கொண்டவன் சாலிவாகனன்.தமிழானது பண்டைய
காலத்தில் பாரத நாடெல்லாம் பேச பட்டது.
தமிழ் மக்கள் பயன்பாட்டு
மொழியாகவும் சமஸ்கிருதம் அரசவை மொழியாகவும் விளங்கியது.சாலிவாகனன்
சிறுவயதிலிருந்தே மிகவும் புத்திகூர்மையுடனும்,வீரத்துடன் சகல கலைகளையும்
கற்று வளர்ந்தான்.
மண்ணில் அரசபரிபாலன பொம்மை செய்து தன்னை அரசனாக எண்ணி
வளர்ந்து வந்தான்.அவனது புத்திகூர்மை விக்கிரமாதித்தன் செவிகளை எட்டியதூ.
சாலிவாகனனை தன் படையில் சேர்க்க விக்ரமாதித்தன் அழைப்பு விடுத்தான்.ஆனால்
சிறு வயது முதலே தன்னை அரசனாக எண்ணி வளர்ந்து வந்த சாலிவாகனன் கோரிக்கையை!
நிராகரித்தான்.அதனால் கோவம் கொண்ட விக்ரமாதித்தன் சாலிவாகனன் மீது படையை
ஏவினான் அவர்களை துவம்சம் செய்த சாலிவாகனன் விக்ரமாதித்தனுக்கு
எச்சரிக்கையிட்டான. விக்ரமாதித்தன் சாலிவாகனன் மீது படையெடுத்து வந்தான்.
இதனை அறிந்த சாலிவாகனன் தான் செய்து வைத்த மண் படைகளுக்கு உயிர்
கொடுத்தான்.
விக்ரமாதித்தன் படையோடு சாலிவாகனன் படை மோதியது.இறுதியில்
சாலிவாகனன் வெற்றி பெற்றான்.
விக்ரமாதித்தன் காட்டிற்குள் ஓடி ஒளிந்தான்
பகையை விட்டுவைக்க கூடாது என நினைத்தான் சாலிவாகனன்.விக்ரமாதித்தனை தேடி
பிடித்து கொன்றான். 56 தேசங்களை ஆண்ட விக்ரமாதித்தனை வீழ்த்தி அரசனான அந்த
நாளே தமிழ் புத்தாண்டு என்றானது.
எதிர்த்த சிறு சிறு அரசர்களை வென்றான்
அதாவது 56 தேசத்தை கைபற்றினான்.
விக்ரமாதித்தன் சகாப்தம்
சாலிவாகனன் சகாப்தமா மாற்றிய சாலிவாகனன் எதிர்த்தவர்களை சிறுபோர் நடத்தி
வென்றான்.
பாரதவர்ஷத்தை கைபற்றிய சாலிவாகனன் மேற்கத்திய நாடுகளை கைபற்ற
எண்ணிணான் ஆனால் அங்கு தர்மம் சீர்குலைந்து
விட்டது. எனவே நீ கை பற்றிய தேசங்களை தர்ம நெறியோட ஆள கட்டளை
இட்டார்.
சாலிவாகனன் நாக கன்னிகை என்ற நாககுல பெண்ணை திருமணம்
செய்தார்.அவரோடு விளையாடும் போது சமஸ்கிருதம் பேசிய நாககன்னிகை யின்
வார்த்தை அர்த்ததை தவறாக புரிந்து கொண்ட சாலிவாகனன் சமஸ்கிருதம்
கற்றூக்கொள்ள ஆசை பட்டான். அரசனாகும் வரை தமிழ் மட்டுமே பேச தெரிந்த
சாலிவாகனன் சமஸ்கிருதம் கற்க ஆசை கொண்டதை அமைச்சர்களிடம்
கூறினான்.சமஸ்கிருதம் கற்க எத்தனை நாட்கள் ஆகும் என கேட்டான்.மூன்று வருடம்
ஆகும் என கூறிய அமைச்சரிடம் வெறும் ஆறு மாதத்தில் கற்று கொள்வதாக
சவாலிட்டான். சிவபெருமானை நோக்கி தவமிருந்தான் சாலிவாகனன்.தவத்தின் பலனாக
அதன்
பின் சாலிவாகனன் அர்த்த சாஸ்திரம் ,அலங்கார சாஸ்திரம்,வைத்திய சாஸ்திரம்
என்ற நூல்களை எழுதினான். சகஆண்டு என்ற சாலிவாகனன் ஆண்டு முறையை உருவாக்கி
60 ஆண்டு சுழற்சி முறையை உருவாக்கினார்.
கலைகளுக்கு முக்கியத்தூவம்
கொடுத்தான் அனைவராலும் ரசிக்கும் படியான பொய் கால் குதிரை ஆட்டம் இவரது
ஆட்சியில் உண்டானது.
அனைத்து தொழிலுக்கும் முக்கியத்துவம்
கொடுத்தான்.மக்கள் இவனை கொண்டாடினார்கள். இவனது கால நாணயங்களில் அரசர்கள்
பெயர்கள் தமிழில் பொறிக்கபட்டிருக்கும்.ஆனால் இவனை தெலுங்கன் என கூறும்
வேளையில் இவர் காலத்தில் தெலுங்கு மொழிகள் எதிலும் இடம் பெறவில்லை என்பதே
உண்மை சாலிவாகனன் தமிழினத்தவனே.அது தான் உண்மை. அவன் தெலுங்கன் என்றால்
இன்று வரை அவனால் கொண்டாடபட்ட சித்திரை 1 கொண்டாடிய மூவேந்தர்முதல் நாம்
வரை யார்?ஒரு இனத்தின் அடையாளம் மறைக்கபடுகிறது 2000 வருடத்திற்கு முன்பே
100000 காலாட்படை 1000. யானைகள் 1000குதிரைகள் என மிக பெரிய படை பிரிவினை
கொண்டது சாலிவாகன பேரரசு.
இவனை தொடர்ந்து இவனது வம்சாவளியினர் பேரரசை
உருவாக்கி பாரத நாட்டை திறமையாக நிர்வாகம் செய்தனர். சதகர்ணி,கௌதமி புத்ர
சதகர்ணி அதில் குறிப்பிட தகுந்தவர்.
இவரை தொடர்ந்து வந்தவர்கள்
இஷ்வாகுகள்,சத்ரபதிகள்,,ஆந்திரர்கள்,கடம்பர்கள்,ராஜ
புத்திரர்கள்,பல்லவர்கள் ஆவர்.
சாலிவாகனன் இன்றைய தமிழகத்தை ஆண்ட போது
இங்கு அவனால் சிவன் கோவில் கட்ட பணி துவங்கி அது கைவிடபட்டதூ.
பின் அதூ ராஜ
ராஜனால் துவங்கப்பட்டு முடிக்கபட்டது.ஆம் ஒரு குயவன் எடூத்த காரியத்தை
இன்னொரு குயவன் முடித்து வைத்தான்.சரிதான் ராஜ ராஜன் குலால இனத்தவன்
ராஜராஜன் மட்டுமல்ல மூவேந்தர்களும் குலால குலமே.சோழ கல்வெட்டுகள் மூவேந்த
வேளாரின் பெருமைகளை பற்றி கூறுகிறது.வேட்கோவரான வேளார்கள் கோவில்
அதிகாரியாக,படைதளபதியாக,அரசராக,வணிகராக,ஊர்தலைவராக,மருத்துவரா பல
நிலைகளில் இருந்துள்ளனர். இன்றும் சேர வேளார்,சோழ வேளார்,பாண்டிய வேளார்
என்ற பட்டங்களில் தான் குறிப்பிடுகின்றனர்.சோழ அரசர்கள் உடையார் போன்ற பல
பட்டங்களை கொண்டாலும் அவர்கள் பட்டம் கட்டும் போது அதாவது முடிசூடும் போது
மூவேந்த வேளார் என்ற பட்டத்தை பயன்படுத்துவர்.வேளார்கள் சத்திரிய குலத்தை
சேர்ந்தவர்கள்.வேளார் என்ற பெயர் யாரிடமிரூந்து வந்தது அனைவரும்
அறிந்திருப்பர் தமிழ் கடவுள் முருகன் .அவரது பெயர் குமரவேள்.குமர
தலைவன்.இந்த வேளினமே வேளார்கள். தமிழுக்கு சொந்தகாரர்கள்.
முன்பே
சொல்லிருந்தேன். சிவன் மண்ணில் தண்ணீர் குடம் செய்தார்.அந்த
குடத்திலிருந்து வந்தவரே அகத்திய மாமுனி.குடமுனி,கும்பமுனி, குருமுனி
ஆவார்.சிவனிடமும்,முருகனிடமும் தமிழ் கற்றான் அகத்திய குயவன்.அது மட்டுமா
தமிழை உலகெல்லாம் கொண்டு சென்றவர் அகத்தியர்.அறிவியல் மருத்துவம் என
பலவற்றை தமிழ் மூலம் பரப்பினார். பல நதிகளை உருவாக்கினார். வடதிசையில் சிவ
பெருமான் திருமணம் காண அனைவரும் சென்ற போது தனியாக தென்திசையில் இருந்து
உலகை சமன் செய்தவர்.முருகன் யார் சிவன் என்ற குயவனுக்கும் சக்தி என்ற
குசத்திகும் பிறந்தவன் தட்சபிரஜாபதியின் பேரன். இன்றூம் தட்சனூக்கு வட
இந்திய குலால பிரஜாபதிகள் விழா எடுக்கின்றனர்.வேதங்கள்,புராணங்கள்
எல்லாம் குலால பிரஜாபதியிடமிருந்து வந்தவர்களே மனிதர்கள் மட்டுமல் உயிருள்ள
அனைத்துமாகும். இவ்வாறு பிரஜாபதியின் பேரனான குமரவேள் இனமான வேளார்கள்
பல்லாண்டாக அரசாண்டு வந்தனர.அப்படிபட்ட முருகனுக்கு இருபிடமான பழனி மலையை
உண்டாக்கியவன் அகத்திய குலாலன்.சிலை வைத்தது சீனத்து குயவன் போகர்.பூசைகள்
செய்தது புலிபாணி உடையார் என்ற குயவன். 500 ஆண்டு முன்பு வரை தமிழக
கோவிலில் பூசைகள் செய்த வேளார்கள் சதிகளால் .
அடிமையாக்கபட்டனர் சோழ
சாம்ராஜ்ய சொந்தம் வஜ்சனையால் அதிகாரம் இறக்கபட்டு நாயக்கர் ஆட்சியில்
பதவிகள் பறிக்கபட்டு புரதாண மதமான இந்து துவ வாதிகள் கோவிலை விட்டு
வெளியேற்றபட்டு போலி பூசகர்கள் பணி அமர்த்தபட்டனர்.
மாபெரும் இந்துதுவ வாதி
ராஜ புத்ர அரசர் மகாராணா கும்பா,அக்பரை கலங்கடிக்க வைத்த வீரன். 80
கோட்டைகளை கட்டிய மாமன்னன்.
சீன சுவருக்கு இணையான சுவரை கட்டியவன்.மிக
பெரிய கட்டிட பொறியாளன் .
எப்படி இறந்தார் கும்பாவின் மகன் வேற்று மதத்தை
சேர்ந்த பெண்ணணை மணந்து கொள்ள எதிர்த்தான் . அதனால் அவன் மகன் அவனை
கொன்றான்.கொரில்லா போர் யுக்தி,கடற்படை,மறைந்தூ தாக்குதல் என பல யுக்தியை
கையாண்டு இந்து மதத்தை தாங்கி பிடித்த மாமன்னன் துரோகத்தால் கொல்லபட்டான்
என குலாலர்ள் இந்து மதத்தினை பல
தடைகளூக்கிடையில் வளர்த்தனர். இன்று இவர்கள் சிறு கோவில் பூசாரிகளாகி
விட்டார்கள்.தமிழனின் ஆதி வழிபாடான ஐயனார் கோவில் பராமரிப்பின்றி
கிடக்கின்றது.
நம் முன்னவன் பூமியில் புதைந்து கொண்டிருக்கிறான்.கடைசி
வேளார் மூச்சு இருக்கும் வரை ஐயனாரின் புகழுக்கும் பூசைக்கும் அழிவு
நேராது. சாலிவாகனனை அடுத்து குலால குல பேரரசு உதயமானதூ அதுவே விஜயநகர
பேரரசு இவர்கள் உடையார் பட்டத்தை உடையவர்கள் இவர்களை தொடர்ந்து மைசூர் அரசு
உருவானது இவர்களூம் உடையார் பட்டம் பயன் படுத்தியவர்கள். சாலிவாகனனுக்கு
முன்பே மாபெரும் குலால பேரரசு ஆண்டு வந்தது அது குசாண பேரரசு இப்பேரரசின்
புகழுக்குரிய மன்னன் கனிஸ்கன்.இவன் நாக வழிபாடு உடையவன்
.குசாண பேரரசிற்கு பிறகு
குலால குல குஸ்வாகா பிரிவை சேர்ந்த மாபெரும் பேரரசு உதயமானது.அது தான்
மௌரிய பேரரசு.அசோகர் அதில் புகழ்மிக்கவர்.இந்த பேரரசர்கள் பலர்
விக்ரமாதித்தன் என்ற பட்டம் பெற்றவர். இதற்கு பிறகு சாலிவாகனன்
பிறப்பு,மௌரியர் குலால பிரிவினர் சாலிவாகனன் குலாலன் அவ்வாரென்றால் மௌரிய
பேரரசில் ஒருவர் விக்ரமாதித்தன் என்ற பட்டம் பெற்று அவனுக்கு சாலிவாகனன்
பேரனானான்.
தமிழிலில் ராமாயணம் எழுதிய கம்பர் குலாலர்.காளி கோவில் பூசாரி
தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டு சொல்லிலடங்காதது.
தெலுங்கில் ராமாயணம் எழுதிய
அத்துகுரி மொள்ள என்ற பெண் புலவர் குலால செட்டி பிரிவை சேர்ந்தவர்.
கன்னட
திருவள்ளுவர் சர்வக்ஞர் மூன்று வரி குறள் 2000 எழுதியவர்.கன்னட
குலாலர்.
இளஞ்சேட்
சென்னி வேளார் மகன் கரிகாலசோழனின் அரசவை புலவர் கரிகாலன் செய்த தவறை
சுட்டிகாட்டியவர் புறநானூறு பாடல் பாடிய வெண்ணிய குயத்தியார்.
சிவபெருமான்
பக்திக்கு பாத்திரமான திருநீலகண்டநாயனார்,திருமாலின் பக்திக்கு பாத்திரமான
கோர கும்பர்,சித்துகள் பலசெய்து பிரிட்ஷ் அதிகாரியை காலில் விழ வைத்த மதுரை
கட்டிகுளம் மாயாண்டி சுவாமிகள் இவர்களின் ஆண்மீக பயணம் வியக்க வைக்கும்
உண்மை. ஆரம்பகாலத்தில் மண்ணில் புத்தம் தயாரித்து படிப்பறிவை ஊட்டியவன்
குயவன்.
மண்ணிலே சக்கரம் கண்ட முதல் விஞ்ஞானி குயவன்.மண்ணின் அறிவியல் தன்மை
அறிந்து அதை அக்கி என்ற நோய்க்கு மருந்தாக்கியவன் குயவன்.இதன் மூலம் மண்
குளியல் முறை உண்டானதூ.மண்ணை மூதலில் சாயமாக பயன் படுத்தியவன்
குயவன்.மண்ணில் பானை,சிலை செய்த படைப்பாளி குயவன்.நக்கி குடித்த தண்ணீரை
குவளையில் கொடுத்தவன் குயவன். காக்கை கழுகு கொத்தி நாறி போகும் உடலூக்கு
தாழீ கொடுத்த நாகரிகமனிதன் குயவன்.குயவனிடமிருந்து தமிழை
பிரிக்கமுடியாதது.
குயவனிடமிருந்து இந்து என்ற மதத்தை பிரிக்கமுடியாது.குயவனிடமிருந்து
வீரத்தை பிரிக்க முடியாது.குலாலனே பிரம்மம்,குலாலனே சத்திரியன்,குலாலனே
கடவுள்.மும்மூர்த்தி, பிரஜாபதிகள்,முருகன்,குசானர்கள்
,மௌரியர்கள்,சாலிவாகனன்,இஷ்வாகுகள்,,ராஜபுத்திரர்கள்,மூவேந்தர்கள்,விஜயநகர
அரசர்கள்,மைசூர் அரசர்கள் இத்துனை சத்திரியர்களை கொண்டது
குலாலகுலம்.கம்பர்,மொள்ள,வெண்ணி குயத்தி,சர்வக்ஞர்,திருவள்ளுவர் போன்ற
புலவர்கள் குலால குலம்.திருநீலகண்டர்,கோரகும்பர்,மாயாண்டி சுவாமிகள் போன்ற ஆண்மீகவாதிகள் குயவர்கள்.சாலிவாகனன் வழி தோன்றல் பல்லவர்கள் குயவர்கள். நந்தீசர்,அகத்தியர்,திருமூலர்,காளங்கிநாதர்,போகர்,புலிபாணி
என்ற சித்தர்கள் குயவர் குலம்.புத்த மதத்தை உருவாக்கிய புத்தர்
குயவர்.இயேசுநாதர் குயவர் என்றே பைபில் கூற்று.
வரலாற்றில் குயவனை தேட
வேண்டாம்.குயவனில் வரலாற்றை தேடு.
குயவர் வரலாறூ நூற்றாணடல்ல பல் யுகம்.
தெரிந்தவரை உள்ள வரலாறூ மெய் சிலிர்க்கிறதூ. இன்னூம் எத்துணை மர்மமானவன் குயவன்?
வரலாறு மீட்போம்
வரலாறு படைப்போம்
சமூக உயர்விற்காக என்றும்
ஒன்று பட்ட குலாலர் பொதுநல சங்கம்
நெல்லை மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர்
செங்கை தமிழன் ராஜேஷ் ஆறுமுகம் பிரம்மாவின் மகன்.