செப் 18ல் திருநெல்வேலி ல் மைசூர் ஆண்ட மாமன்னர் சாலியவாகனன் விருது மற்றும் திருநெல்வேலி மாவட்ட குலாலா் சமுதாய கல்வி பரிசளிப்பு விழா
Saturday, August 13, 2016
Tuesday, August 2, 2016
Monday, August 1, 2016
6 வது ஆண்டில் குலாலர் பேரியக்கம்
* குலாலர் பேரியக்கம் * நாளையுடன் 6 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் இன்று திரும்பிப் பார்க்கிறேன் என் பயணத்தை .... தமிழில் சரியாக அடிக்க கூட எனக்கு வரலை முதலில் அதே சமயம் சமுதாயத்தின் வளர்ச்சி குறித்த கட்டுரைகள் வரலாறுகள் புகைப்படங்கள் ஆகியவற்றை தொடர்ந்து பதிவு செய்து வந்தேன் தமிழ்நாடு குலாலர் பேரியக்கம் எனது முந்தய Facebook,கணக்கு பாதுகாப்பு காரணத்துக்காக முடக்க பட்டது ( 5000 உறவுகள் இருந்தார்கள் அதில் ) எவ்விதமான தடைகளும் இன்றி நமது குலாலர் பேரியக்கம் பல புதிய முயர்ச்சிகளுடன் குலாலர் சமுதாயத்தின் வளமையான அனைத்து வளர்ச்சி பணிகளையும் நிறைவேற்ற உறுதுணையாக இருந்து வருகிறது நமது சமுதாயத்தில் இன்னும் சிலர் விழிப்புணர்வு இல்லால் இருப்பதை காண்கிறோம் குலாலர் சமுதாயமே உன்னை போரடா வர சொல்லவில்லையே நலிந்துபோன இந்த குலாலர் சமுதாயத்தின் மீது குலாலன்ஆகிய நினும் இந்த சமுதாயத்தை மாற்ற முன்னேற்ற நினைக்காமல் கண்டுகொள்ளாமல் இருக்கியே குலால உன்னை முழுமையாக சமுதாயத்திற்கு பணியாற்ற சொல்ல வில்லையே நமது சமுதாய விழக்களில் கலந்து கொள்ளுங்கள் உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்போதும்
மண்பாண்டம் மண்பாண்டங்கள் இல்லை. ஆரோக்கியம் தரும் அற்புத பண்டங்கள் அதன் இன்றைய நிலை தெரியுமா உங்களுக்கு சொல்ல தேவையில்லை googleயில் நலிந்துபோன தொழில்.என்று search செய்து பார்த்தல் முதல் இடத்தில் உள்ளது நமது குலத்தொழில் மிகவும் வேதனையான விஷயம்.
எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது எனது சமுதாயமும் விழித்தெழும் முன்னேறும் அப்போதுதான் மார் தாட்டி குறலாம் குயவர் மகன் என்று. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் இன்றலவும் பொது இடங்களில் நீங்கள் என்ன ஜாதி என்று கேட்டால் குலாலர் என்று சொல்ல தயங்கும் உறவுகள் உள்ளனர்.
Wednesday, June 1, 2016
வாழ்க்கை ஒரு வட்டம். இன்று நீ பிறருக்கு செய்வதை நாளை பிறர் உனக்கு செய்வர்..
ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.
வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.
ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.
மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.
பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.
அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.
அவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன் அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: "மகனே! நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது?"
மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: "அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்"
## வாழ்க்கை ஒரு வட்டம். இன்று நீ பிறருக்கு செய்வதை நாளை பிறர் உனக்கு செய்வர்.

Wednesday, April 13, 2016
தமிழ் புத்தாண்டு தந்த தலைவர் சாலிவாகன சகாப்தம்
மறந்த மக்கள் மறக்காத வரலாறு
இன்று தமிழ் புத்தாண்டு முதலில் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த உலகிற்க்கு நாகரிகத்தை கற்று கொடுத்தவன் தமிழான் தமிழ் புத்தாண்டு தந்த இந்த அருமை தமிழான் நாம் அனைவரும் மறந்த மன்னர் சாலியவாகனை நினைவில் கொண்டுவரும் இந்த கட்டுரை
இவர் பிறந்த குலம் குலாலர் குலம் தன் நாட்டில் அடிமைகளாக வாழும் மக்களை மீட்டெடுக்க வீர போர்நடத்தி வெற்றி கண்டவர்,,வீர வேந்தன் சாலிவாகனன்
புரந்தரபுரி ஊரில் தாயார் .ஆதி சேஷன் ஆரவேளியம்மை தம்பதிக்கு கி.பி 78 இல் மகனாகப் பிறந்தார்
பராசக்தி காளிதேவியின் பக்தரான சாலியவாகனன் இளமை பருவத்தில் அமராவதி மன்னர் அரசா சபையின் போர்ப்படை தளபதியாக இருந்தார் அந்த காலகட்டத்தில் விக்கிரமாதித்தன் 54 தேசங்களை அண்டர் 55 வது தேசமாக அமராவதி அடைய அமராவதி மீது படையெடுத்துச் சென்றார் அமராவதி மன்னரிடம் சரியான படை பலம் இல்லாததால் விக்கிரமாதித்தன் (அமராவதி) பிரதிஷ்டான நகரம் மீது படையெடுத்துச் சென்று கோட்டை வாயிலில் நின்று சாலிவாகனனுக்கு எச்சரிக்கை அனுப்பினான்.சாலிவாகனன் தானும் படையுடன் சந்திப்பதாக சொல்லி காளிதேவியின் வரம் வேண்டி மண்ணினால் சேனைகளை பொம்மைகளாக உருவாக்கினான். தன்னுடைய அதிசய சக்தியால் அவைகளுக்கு உயிர் கொடுத்தான்.
மண் பொம்மைகளாக இருந்த வீரர்கள், ரதம், யானை, குதிரை உயிர்பெற்று எழுந்து சித்திரை 1 படையெடுத்தன. சாலிவாகனன் தலைமையில் வந்த படையை எதிர்த்து விக்கிரமாதித்தன் படைகள் மோதின. இருபுறத்து சேனைகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதில் பல்லாயிரக் கணக்கானோர் மடிந்தனர். இறுதியில் சாலிவாகனனது சேனைகள் வெற்றி கண்டது
புரந்தரபுரி நகரமே மகிழ்ச்சி அடைந்தது சேனைகள் படை சுட நகருக்கு வந்தார் மான்னர் சாலிவாகனன் மக்களை அழைத்து இன்று தான் நமது விடுதலை வந்துள்ளது இனி இங்கு மக்கள் ஆட்சி நடக்கும் என்று கூறி மான்னரக மகுடம் சூடினார்
அரசன் சாலிவாகனன் சித்திரை 1 நமது புதுவருடப்பிறப்பாக கொண்டாட
வேண்டும் என ஆணைபிறப்பித்தார் அதன் மூலம் தான் இன்றலவும்
நாம் சித்திரை1 தமிழ் புத்தண்டாக கொண்டாடி வருகிறோம் இதையும் ஒரு
சில அரசியல்வாதிகள் மாற்றினார்கள் இப்படி ஒன்று ஒன்றாக தமிழ்
சமுதாயத்திற்கு குலாலர்களின் பங்களிப்பை மறைக்க சதி செய்கிறார்கள்
ஏன் தெரியுமா
சாலிவாகன அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது அவர் தமிழர் கிடையாதம்
( அப்பொழுது தமிழ் நாடு ஆந்திர கேரளா ஏன்று பிரிவினை கிடையது அவர்
தமிழர் இல்லா விட்டால் ஏன் அவர் தமிழ் புத்தாண்டு ஏற்படுத்த வேண்டும் )
தமிழ் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. ( மு......ள் )
அப்பொழுது ஆட்சி மொழிகள் சமஸ்கிருதம் பிரகு எப்படி தமிழில் இருக்கும்
இந்த சாலிவாகனனது பெருமைகளை தமிழ் சினமாவின் ஆரம்ப கட்டத்திலே திரைப்படமாக எடுத்து உள்ளனர் (உள்ளனர் திரைப்படத்தின் பெயர் சாலிவாகனன் சகாப்தம்1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.)
சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு
இந்த மாவீரனை மக்கள் மறந்து விட்டனர் ஆனால் வரலாறு மறக்கவில்லை
சித்திரை 1
நமது குலாலர் சமுதாயதின் குலதெய்வமான. மாவீரன் சாலியவாகனனுக்கு தமிழ் நாட்டில் மணிமண்டபம் அமைத்து அவருக்கு குருபூசை நடத்துவோம்
இது 40 லச்சம் குலாலனின் கனவுகள் விரைவில் நினைவாகும்

சாலிவாகனன் வெற்றி வரலாறு VIDEO வடிவில் |

Saturday, April 9, 2016
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா
குலாலர் மண்டகப்படி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சித்திரைத் திருவிழா
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, மாசி மாதம் நடைபெறும் திருவிழாக்கள் முக்கியமானவை. இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (10–ந்தேதி) தொடங்குகிறது.
இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் காலை 10.30 மணியில் இருந்து 10.54 மணிக்குள் மிதுன லக்கினத்தில் கொடியேற்றம் நடக்கிறது. அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளுகிறார்கள்.
அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளுகின்றனர். இரவில் கற்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனங்களில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள்.
உண்மையை சொல்கிறேன்......................
குலால நான் ஒரு உண்மையை சொல்கிறேன் மற்றவர்கள் நீ எந்த ஜாதி என்று கேக்கும்போது நான் குலாலன் சொல்ல தயங்கும் குலாலன் இருக்கும் வரை நாம் சமுதாயம் முன்னேறுவது கடினம்தான் சொல்ல தயங்கும் குலால ஒன்றை மனதில் வைத்துகொள் ஆண்டவன் பிறந்த குலம் ஆண்டவனை படைக்கும் குலம் சாலியவகனன் வாழ்ந்த குலம்- அது குயவர் குலமென்னும் குலாலர் குலம் அரசாட்சி செய்த குலம் ஆலயம் காத்த குலம் ...
Saturday, April 2, 2016
Monday, March 14, 2016
தமிழகத்தை ஆள போகும் அரசுக்கு 40..லச்சம் குலாலனின் கோரிக்கை
வணக்கம்
இன்றைய குலாலனின் நிலைமையை நினைத்து பெருமையாக உள்ளது இப்போது நமக்குள் இருக்கும் ஒற்றுமை 10 ஆண்டுகளுக்கு முன் இருந்து இருந்தால் நமது சமுதாயம் இன்று நல்ல வளர்ச்சியை அடைந்து இருக்கும்
குலாலா நீ ஒரு நிமிடம் நமது சமுதாயத்தை பற்றி சிந்தித்து பார்
நமது சமுதாயத்தை தவிற பிற சமுதாயங்கள் அனைத்தும் இன்று வளர்ச்சியை அடைந்து உள்ளது
நான் வளர்ச்சி வளர்ச்சி என்று எதை சொல்கிறேன் தெரிமா இன்று அரசாங்க அரசு பணிகளில் 100% கூ 02% சதவிதம் குட அரசு பணிகளில் குலாலன் இல்லை கரணம் நமது சமுதாயத்தில் படித்தவர்கள் இல்லையா நமது சமுதாயத்திலும் அதிகம் படித்த இருக்கிறார்கள்தானே பிறகு என் நமக்கு அரசாங்கத்தில் இடமில்லை ..?
இதே நிலைமைதான் காவல்துறையில் அங்கும் நமக்கு இடமில்லை 100IPS அதிகாரிகள் இருந்தால் அதில் 1 IPS அதிகாரி குட குலாலன் இல்லையே..?
எங்களுக்கு அரசு துறைகளில் அதிகபடியான பணிகளில் குலாலன் வரவேண்டும் சரியான இட ஓதிக்கிடு அதுவே எங்கள் முதல் கோரிக்கையாக தமிழகத்தை ஆள போகும் அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறோம்
குலாலன் கண்ண்டுபிடித்த சக்கரத்தை கொண்டு இந்த உலகமே நடைபோட துடங்கியது ஆனால் அந்த சக்கரத்தை கண்டுபிடித்த குலாலன் சக்கரத்தில் கிழ் சிக்கிக்கொண்டு செத்துக்கொண்டு இருக்கிறான்
உலகிற்கு நாகரிகத்தை கற்று கொடுத்தவன் இன்று நாதியத்து நிற்க்கிறேன்
மண் எடுப்பதில் இருக்கும் பிரச்சனைகளை திர்த்து
மண்பாண்ட தொழிலை பாதுகாக்க வேண்டு அரசு உதவ வேண்டும் அழிந்துவிடும் நிலமையில் இருக்கும் குலாலனை தயவு செய்து காப்பாற்றுங்கள்
தமிழ் நாட்டில் அனைத்து சமுதாய தலைவர்கள் மன்னர்கள் வீரர்கள் போராளிகள் என அனைவருக்கும் திரு உருவ சிலைகள் மணிமண்டபங்கள் உள்ளன எங்களுக்கும் ஒரு மன்னர் இருகருங்க மன்னர் சாலியவகன சகாப்தம்
இவரை நீங்கள் மறக்கலாம் ஆனால் குலாலர் சமுதாயம் மறக்காது
அமராவதி தேசத்தின் போர்ப்படை தளபதியாகஇருந்து விக்கிரமாதித்தனை விழ்த்தி மன்னராக மணிமகுடம் சூடி 56 தேசங்களையும் ஒரே குடையின் கிழ் ஆண்டு சகாப்தத்தை உருவாக்கி தான்வெற்றி பெற்ற நாளை . சித்திரை 1 தமிழர்களின் புது வருடபிறப்பாக அறிவித்து சாலியவகன ஆண்டு கூ சொந்தக்காரர் மன்னர் சாலியவகன சகாப்தம் இவருக்கு தமிழ்நாட்டில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்
சட்டமன்றத்தில் நமது குரல் ஒலித்ததால் தான் நமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்,
நமது சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் கட்சிக்கு கடினமாக உழைத்து வெற்றிபெற செய்வோம் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட குலாலர் சமுதாய இளைஞரணி நிர்வாகிகள் ஆதரவு தாருங்கள் "
தமிழகத்தை ஆள போகும் அரசே
நீங்கள் வெளியிட இருக்கும் தேர்தல் அறிக்கையில் குலாலர்களின் முக்கிய கோரிக்கைகளை இடம்பெற செய்யா வேண்டும் அல்லது வாய்மொழி அறிக்கையாக அறிவிக்க வேண்டும் எந்த அரசியல் கட்சிகள் எங்களது கோரிக்கைகளை ஏற்று கொள்கிறதோ அவர்களுக்கு தான் 40 லச்சம் குலாலனின் வாக்குகள்
Tuesday, March 1, 2016
மண்+பாண்டங்கள் = "குயவர்கள்
உலோகம்கண்டுபிடிப்பிற்கு முன்பேநாம் மண்ணால் செய்தபாண்டங்களைபயன்படுத்தி வருகிறோம் .பல்லாயிரக்கணக்கானஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள்களிமண்ணால் உருவானமண்பாண்டங்கள்செய்து பயன்படுத்தி வந்துள்ளனர்என்பதற்கு புதைபொருள்ஆராய்ச்சியாளர்கள்கண்டுபிடித்த பலவகையானசாட்சியங்கள் உள்ளது.அக்காலத்தில் வீடுகள் கூடகளிமண்ணால் கட்டப்பட்டு அதில்வாழ்ந்தும் உள்ளனர்.
களிமண்ணால் செய்யப்படபாத்திரங்களில் சமைக்கப்படும்உணவுகள் தனி சுவைதரும்மேலும் அவ்வாறு செய்யப்பட்டஉணவுகளில் மருத்துவகுணம்நிறைந்து இருக்கும். மண்பாண்டங்கள் மூலம் சமைக்கப்பட்டஉணவுகளை உட்கொள்ளும்போது இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி போன்றநோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் மருத்துவர்கள்சான்றளித்துள்ளனர். மண்பானைகளில்சேமித்து வைத்து உபயோகிக்கும்தண்ணீர் சுவையாகவும்குளிர்ந்தும் இயற்க்கை மாறாமல்இருக்கும். இதனால் தான்மண்பானைகளை ஏழைகளின்குளிர்சாதனப்பெட்டி என்று சொல்றோம்.
தோண்டி,குடம்,தோசைக்கல் ,இட்லிப்பானை,குளிர் சாதனப்பெட்டி,சித்திரப்பானை,காய்கறிப்பானை, மண்சட்டி, கலையம், விளக்கு,முகூர்த்தப் பானை ,பூத்தொட்டி, அடுப்பு, அகல் மற்றும் பறவைகள்கூண்டு என்று பலவகையானபொருட்களையும் இந்தகளிமண்ணால்உருவாக்கப்படுகிறது .அக்காலத்தில்வீட்டில்அரிசி தானியங்களை சேமிப்பதற்கு மிகப்பெரியஅளவில் மண் தொட்டிகள் (குதிர்)உருவாக்கப்பட்டு அதில்தானியங்களை சேகரித்து வந்தனர்வறட்சிக்காலங்களில் குதிர்மிகப்பெரிய பயனுடையதாகஇருந்தது. . வீட்டை அலங்கரிக்கமண்ணால் செய்யப்படஅலங்காரப்பொருட்கள் மற்றும்தெய்வ சிலைகள் அம்மன் காளி,அய்யனார் போன்ற சிலைகளும்செய்யப்படுகிறது.தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன்செலுத்தவும் மண் சிலை,குதிரை , கால் பாதம்,வடித்து குலதெய்வத்தை வழிப்படுவது கிராமப்புறமக்களிடம் வழக்கமாக உள்ளது.நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்நோய் குணமடையவேண்டிக்கொண்டு நோய்குணமடைந்தவுடன்பாதிக்கப்பட்ட உடல் உறுப்பினைப்போன்று மண்ணால்செய்து அதனைத்தெய்வத்திற்குக்காணிக்கை ஆக்குகின்றனர்.
தாழி (பிணப் பானை) மண்ணால்செய்யப்படஒருவகை பானைவடிவம் இதில்ஒருவர் இறந்த பின்னர்அவரது உடலை அல்லது எலும்புகளை அவர்பயன்படுத்திய பொருட்களுடன்இதில் வைத்துப்புதைத்து விடுவது வழக்கம்.இவ்வாறு புதைக்கப்பட்டத்தாழிகள் தமிழ்நாட்டில் பலஇடங்களில் கிடைத்துள்ளன.அதுமட்டும்அல்லாது இசை வாத்தியங்களானகடம் , மத்தளம் போன்றவையும்தயாரிக்கப்படுகிறது .
இவ்வளவு சிறப்புகள் உள்ள இந்தமண்பாண்டங்கள்................?
Friday, February 19, 2016
அகில உலக மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் மாநாடு
சென்னை: குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் பகுதியில்அகில உலக மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் மாநாடு தொடங்கியது. தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத் தலைவர் சேம.நாராயணன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் கணபதி வரவேற்றார். மாநில பொருளாளர் மகேஷ் கண்ணன், இளைஞரணி தலைவர் பழனி முன்னிலை வகித்தனர். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் டிகேஎம்.சின்னையா ஆகியோர் மாநாட்டை துவக்கிவைத்து பேசினர். முன்னதாக தேசிய தலைவர் ராம்பிர்கிஷ் கே.பிரஜாபதி கலந்து கொண்டு, சங்கக் கொடியை ஏற்றிவைத்தார்.
மாநாட்டில், 2014-15ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மூலம் தமிழக அரசு காதி மற்றும் கிராம தொழிலில் பதிவு செய்யப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் மழைக் காலங்களில் மண்பாண்டம் செய்வது கடினம் என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வாழ்வாதார உதவித் தொகையாக ₹4 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்குவது என அரசு அறிவித்ததன் அடிப்படையில் 12,236 குடும்பங்களுக்கு ரூ.4.89 கோடி வழங்கியதற்காகவும், 2015-16-ம் ஆண்டில் நிவாரண நிதியுதவியாக ரூ. 5 கோடி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழச்சியில், ஏராளமான மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர் கலந்த கொண்டனர்.

Thursday, February 18, 2016
Thursday, February 4, 2016
குலாலர் சிங்கங்களே அலைகடலாய் எழுங்கள்
Saturday, January 30, 2016
Friday, January 29, 2016
Sunday, January 17, 2016
அவசர ஆலோசனை கூட்டம்
குலாலர் மாகசபை அவசர ஆலோசனை கூட்டம்
நாள் 19:01:2016
இடம் கவுண்டன் பாளையம் திருப்பூர்
நாளை குலாலர் மாகசபை மாநில தலைவர் கண்ணன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிர்வாகிகள் மற்றும் குலாலர் மக்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்
Tuesday, January 12, 2016
மக்களே மண்பாணை, மண் அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தி பொங்கலை கொண்டாட வேண்டும்
மண்பாண்ட தொழில் நாளுக்கு நாள் நலிந்து வரும் நிலையில், பொங்கலை மண்பாண்டங்களோடு கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பண்டைய காலத்தில் உண்ணும் உணவே மருந்தாக விளங்கியது. உணவு சமைக்க நம் முன்னோர்கள் இயற்கையான முறையில் மண்ணில் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண் பாண்டங்களில் உணவு சமைத்து சாப்பிட்டு 100 ஆண்டுகள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால், இன்று நாகரீக மாற்றத்தால் பழமையான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு தயாரிக்கும் முறைகள் முற்றிலும் மாறிவிட்டன. காஸ், எலக்ட்ரிக் மற்றும் மைக்ரோ ஓவன் போன்ற அடுப்புகளில் எவர்சில்வர், அலுமினிய பாத்திரங்களை கொண்டு உணவு சமைக்கிறோம். இவற்றால் ஏற்படும் கெமிக்கல் ரீதியான கெடுதல்கள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
செயற்கை உணவு முறையால் நாம் ஆரோக்கியத்தை இழந்து மனிதனின் சராசரி ஆயுளை நூறிலிருந்து 70க்கும் கீழாக இறக்கி கொண்டோம். தற்போது, பொங்கலன்று கூட விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலரே மண்பாண்டங்களை பயன்படுத்துகின்றனர். இதனால், இத்தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.
குறுவை மண் மற்றும் ஆற்று மண்ணை, 10க்கு 2 என்ற விகிதத்தில் கலந்து நன்றாக காய வைத்து ஒரு வாரத்திற்கு பிறகு நன்றாக மிதித்து, பிசைந்து பானை செய்யும் கருவியில் வைத்து இறுதி வடிவம் கொடுக்கின்றனர் இவ்வாறு செய்யப்பட்ட பானைகளை விறகுகள் மற்றும் இளநீர் கூந்தல்களை அடுக்கி சூளையில் வைத்து நன்றாக சுடுகின்றனர். பின்னர் இவற்றை விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
நாம் பெரும்பாலும் இன்று மண்பாண்டங்களை கோவில் கொடை விழாக்களுக்கும், துக்க வீட்டில் இறுதிச்சடங்குகள் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். பொங்கல் திருநாள் என்பது நமக்கு உணவளிக்கும் இயற்கைக்கு அதாவது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றிற்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். புகையில்லா பொங்கல், சமத்துவ பொங்கல், மாசில்லா பொங்கல் என பொங்கலை கொண்டாடும் நாம் இந்த ஆண்டிலாவது மண்பாணை, மண் அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தி இந்த மண்பாண்ட தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இயற்கையான முறையில் பொங்கலை கொண்டாட வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)