குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, November 21, 2015

இது வழக்கமான மண்பாண்டம் அல்ல! மைக்ரோ வேவ் ?????







நுண்ணலை அடுப்பு என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மைக்ரோ வேவ் ஓவனின் தமிழ்ப் பெயர்தான் நுண்ணலை அடுப்பு. இந்த அடுப்பில் சமைக்கப் பயன்படும் பாத்திரங்கள், அதற்கென்றே வடிவமைக்கப்பட்டவை. பிற அடுப்புகளில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை இந்த அடுப்பில் பயன்படுத்த முடியாது.

 உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரங்களே இதுவரை நுண்ணலை அடுப்புகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன. ""உடலுக்குத் தீங்கு செய்யாத மண் பாத்திரங்களை மைக்ரோ வேவ் அடுப்பில் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்'' என்கிறார் பகவதீஸ்வரன். கன்யாகுமரியில் செயல்பட்டு வரும் "சென்டர் ஃபார் சோசியல் டெவலப்மென்ட்'டின் இயக்குநர் அவர். 
 அவரிடம் பேசினோம்:
 
 ""கிராமப்புறங்களில் முதலில் எல்லாம் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் மிகவும் நன்றாக நடந்து கொண்டிருந்தது. மண் எண்ணெய் அடுப்பு, கேஸ் அடுப்பு எல்லாம் வந்த பின்பு, அலுமினியம், எவர் சில்வர் பாத்திரங்கள் அதிக அளவில் சமையலறையில் புகுந்துவிட்டன. மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள் காணாமற் போய்விட்டன. இதனால் கிராமப்புறங்களில் இந்தத் தொழிலைச் செய்த பல ஆயிரக்கணக்கான மக்கள் படிப்படியாக வேலை இழந்தார்கள். பிழைக்க வழியின்றி வேறு தொழில்களுக்குப் போய்விட்டார்கள். ஒரு சிலரே இன்னும் கிராமப்புறங்களில் மண் பாண்டத் தொழிலைச் செய்து வருகிறார்கள். 
 இந்தத் தொழில் பழையபடி நன்றாக நடக்க வேண்டும் என்றால், மண்பாண்டத் தொழிலில் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்தும்போது, நீண்டகாலமாகச் செய்து கொண்டிருந்த மண்பாண்டங்களை விட தரமான மண் பாண்டங்களை உருவாக்க முடியும்.
 இதற்காக கைகளால் இயக்கப்பட்ட மண்பாண்டம் தயாரிக்கப்படும் சக்கரத்தை இயந்திரம் மூலம் சுழலச் செய்தோம். உலோக அச்சுகள் மூலம் மண்பாண்டங்களை உருவாக்கிப் பார்த்தோம். காஸ்டிங் முறையில் பலதரப்பட்ட மண் பாத்திரங்களைத் தயாரித்தோம். இப்படிப் பலவிதங்களில் முயற்சித்தாலும், மண் பாண்டங்கள் அதிக அளவில் விற்பனையாகவில்லை. அதற்கான தேவை அதிகரிக்கவில்லை. 
 மண் பாண்டங்களுக்கான தேவை பெருக வேண்டும். அதற்கு என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தோம். 
 மண் எண்ணெய் அடுப்பு, கேஸ் அடுப்பு ஆகியவை வந்த பின்பு, தற்போது அதிரடியாகச் சமையலறைகளில் புகுந்து கொண்டிருப்பது மைக்ரோ வேவ் அடுப்பு. வருங்காலத்தில் இந்த அடுப்பை இன்னும் அதிகப் பேர் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அடுப்பில் சமைப்பதற்குப் பயன்படும் வகையில் மண்பாண்டங்களை உருவாக்கினால் என்ன? என்று தோன்றியது.
 ஆனால், எப்போதும் தயாரிக்கப்படும் மண்பாண்டங்களை இந்த மைக்ரோ வேவ் அடுப்பில் வைத்தால் ஒன்று மண்பாண்டம் அப்படியே வளைந்துவிடும். அல்லது உடைந்துவிடும். 
 காரணம், சாதாரண விறகு அடுப்பில், கேஸ் அடுப்பில் சமைக்கும்போது 900 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் ஏற்படும். அவற்றில் மண்பாண்டங்களை வைத்துச் சமைத்தால் ஒன்றும் ஆகாது. ஆனால் மைக்ரோ வேவ் ஓவனில் சமைக்கும்போது வெப்பம் 900 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் போய்விடும்.
 அப்படியானால் மண்பாண்டங்களை மைக்ரோ வேவ் அடுப்புக்குப் பொருத்தமாகத் தயாரிக்க வேண்டும். இதற்கு என்ன செய்வது? கொல்கத்தாவில் உள்ள இங்ய்ற்ழ்ஹப் எப்ஹள்ள் & இங்ழ்ஹம்ண்ஸ்ரீ தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் - ஐ அணுகினோம். அவர்கள் மண்பாண்டங்கள் செய்யப் பயன்படும் களிமண்ணோடு கால்சைட், சைனா கிளே, குவார்ட்ஸ் போன்ற பல வேறு சில இயற்கையான மண்பொருட்களை உரிய விகிதத்தில் கலந்து மைக்ரோ வேவ் அடுப்பில் பயன்படுத்துவதற்கேற்ப உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய சோதனைச்சாலையில் இந்த மண்பாண்டங்களைப் பலமுறை சோதித்துப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கும் மைக்ரோ வேவ் அடுப்பில் பயன்படுத்தக் கூடிய இந்த மண்பாண்டங்களை இனிமேல்தான் பெரிய அளவில் தயார் செய்ய வேண்டும். 
 அப்படித் தயார் செய்தால், மீண்டும் பழையபடி மண்பாண்டத் தொழில் செழிக்கும். கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். 
 "ஏற்கெனவே மைக்ரோ வேவ் அடுப்பில் பயன்படுத்த அலுமினியம், எவர்சில்வர் போன்ற உலோகப் பாத்திரங்கள் இருக்கும்போது, எதற்கு வேலை கெட்ட வேலையாக இந்த மண்பாண்டங்களை உருவாக்க வேண்டும்? கை தவறி கீழே போட்டால் உடைந்து போகும் மண்பாண்டங்களைத் தயாரிக்க எதற்கு வீண் முயற்சி?' என்றெல்லாம் பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள்.
 உண்மையில் இந்த உலோகப் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் நமது உடல் நலனுக்குத் தீங்கு செய்யக் கூடியவை. நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் இந்த உலோகப் பாத்திரங்களில் ரசாயன மாற்றங்கள் அடைகின்றன. உதாரணமாக நாம் சமைக்கும்போது எலுமிச்சம் பழம், புளி போன்ற அமிலப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். உப்பு போன்ற காரப் பொருட்களையும் பயன்படுத்துகிறோம். எலுமிச்சை, புளி போன்றவை சமைக்கும் பாத்திரத்தில் ரசாயன மாற்றம் அடைந்து, உலோக ஆக்சைடுகளை ஏற்படுத்தி அது உணவில் கலந்து பல நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. உப்பு உலோகங்களை அரித்துவிடும் என்று எல்லாருக்கும் தெரியும். அப்படி அரிக்கப்படும் உலோகம் உணவில் கலந்து உடலுக்குத் தீங்கு செய்யும்.
 சமைக்கும்போது உலோகப் பாத்திரங்களில் ஏற்படும் இந்த மாறுதல்கள் சட்டென்று கண்களுக்குத் தெரியாமலிருக்கலாம். அதனால் கேடு எதுவுமில்லை என்று சொல்ல முடியுமா? மண்பாண்டங்களில் சமையல் செய்தால் இம்மாதிரியான உடல் நலக் கேடுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை. மண்பாண்டச் சமையலில் உணவுப் பொருட்களின் சுவையோ மிக நன்றாக இருக்கும். 
 கீழே போட்டால் மண்பாண்டங்கள் உடைந்துவிடும் என்பதற்காக அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? கண்ணாடி, பீங்கான் டம்ளர்களில் தேநீர் அருந்துகிறோம். உடைந்துவிடும் என்பதற்காக அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கிறோமா?
 எனவே மைக்ரோ வேவ் அடுப்புகளில் மண்பாண்டங்களைப் பயன்படுத்துவது, ஒன்று கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகமாக்கப் பயன்படுகிறது. இன்னொருபுறத்திலோ, உடல் நலனுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. 
 இந்த புதிய தொழில்நுட்ப மண்பாண்டங்களை பெரிய அளவில் தயாரித்துச் சந்தைப்படுத்த அரசு உதவினால் நிறைய கிராமப்புற மண்பாண்டத் தொழிலாளர்கள் - கைவினைஞர்கள் நன்மையடைவார்கள்''என்றார் பகவதீஸ்வரன்.

Monday, November 16, 2015

இலங்கை யாழ்ப்பாணம் குலாலன் நிலைமை ?

p_rajandram
மனிதன் அழிந்துபோகக்கூடிவன் ஆனால் அவனால் படைக்கப்படும் படைப்புக்கள் காலந்தோறும் நிலைத்து நிற்கக்கூடியது. ஆனால் தற்போது அவையும் அழிந்து போகும் நிலையே காணப்படுகின்றன. நவீன தொழில்நுட்பயுகமாகிய இக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தத்தமது வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றான் இதனடிப்படையில் மனிதனின் பொருளாதாரமே அவனின் உணவு சுகாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புடன் கூடிய ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றது.
பொருளாதார மட்டம் அதிகரிக்கும் போது குடிசனங்களின் வாழ்வாதார நிலையில் ஏற்படும் மாற்றமானது நகரமயமாக்கலை சுட்டிநிற்கின்றது. சில்வர், ஈயம் போன்றவற்றினாலான சமையல் பாவனைப் பொருற்கள் அதிகரித்த பின்னர் மட்பாத்திரங்களின் நிலை பின்நோக்கி செல்கின்றது என்றே சொல்லலாம்.
OLYMPUS DIGITAL CAMERAதற்போதைய காலத்தில் மட்பாண்டங் களின் நிலை எவ்வாறு மாற்றமடைந் துள்ளது என அறிந்துகொள்ள மட்பாண்ட தொழில் நடைபெறும் ஒரு இடத்திற்கு சென்றேன். ஆடியபாதம் வீதி கல்வியங்காடு பகுதியில் மட்பாண்ட தொழில் செய்து வரும் பழனிமுருகையா ராஜேந்திரம் என்பவருடன் சிறிது நேரம் உரையாடினேன். நவீன தொழில்நுட்ப உலகில் பெரும்பாண்மையான மக்கள் சில்வர், ஈயம் போன்ற வற்றினாலான சமையல் பாவனைப் பொருற்களுக்கு மாறிவிட்ட நிலையில் தற்பொழுது உங்களால் இத்தொழிலை எவ்வாறு தொடாந்;து செய்யமுடிகிறது? என வினாவியபோது
எனக்கு இது பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழில் அப்பா தாத்தா சொய்யும் போது நானும் பழகினதுதான.; இப்ப 20 வருடமாக நான் இத்தொழிலை செய்து வருகின்றேன.; மழை காலத்தில் எம்மால் இத்தொழிலை செய்ய முடிவதில்லை மனைவி லலிதாம்பிகை தான் என் இத்தொழிலுக்கு வலதுகை என்று சொல்ல வேண்டும் எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள.; அவர்கள் படிக்கிறார்கள் வீட்டில் நிற்கும் நேரங்களில் எனக்கு உதவி செய்வார்கள். எனது அப்பா தாத்தா இத்தொழிலை செய்யும் போது நாங்கள் எப்படி ஒற்றுமையாய் செங்தோமோ அதே போல் இன்று எனது பிள்ளைகளும் படிப்பு நேரத்தை தவிர தாராளமாக ஒத்துழைப்பு தருகின்றனர்.
OLYMPUS DIGITAL CAMERAஎம் தொழில் அருகி வர காரணம் நாகரீக வளர்ச்சி மட்டுமல்ல போட்டி பொறாமையும் தான் போட்டி என்பது எல்லா தொழிலிலும் இருக்கும் ஆனால் பொறாமை என்பது முன்னேற்றத்தை தடுப்பது மட்டுமல்ல தானும் முன்னேறாமல் தடுப்பது தான் இதை யாரும் புரிந்து கொள்வதில்லை இங்கு போட்டி அதிகம் இதற்குள் ஒரு மூன்று வீட்டில் தான் இத்தொழில் செய்கின்றனர் போட்டி என்றால் கூட பிழைத்துவிடலாம் பொறாமையை எதுவும் செய்யமுடியாது பொறாமை என்பதால் என் பிள்ளைகளுக்கு இத்தொழிலை தொடர்ந்து செய்வதில் விருப்பம் இல்லை விட்டுவிடுங்கள் என்று பல தடவை சொல்லி விட்டார்கள். எனக்கு இத்தொழில் பழகிவிட்டது அத்துடன் இவ் மட்பாண்ட தொழிலுக்கு யாழ்மாவட்டத்தில் நான் தலைவராக இருக்கிறேன் அதனால் விட முடியவில்லை தாங்கள் படிக்கும் வரை தான் இத்தொழில் செய்ய அனுமதி என்று சொல்லிவிட்டார்கள் எனக்கும் அவர்களின் விருப்பம் தானே முக்கியம். எனக்கு பின் இத்தொழிலை செய்ய யாரும் இல்லை என்ற கவலை எனக்கு இருக்கத்தான் செய்கின்றது.
செலவுக்கு ஏற்ற வருமாணம் இல்லா விட்டாலும் இது எமது குலத்தொழில் விட முடியாது முன்னைய மாதிரி இல்ல இப்ப சரியான போட்டி முக்கியமான விசேட தினங்களில தான் எமக்கு வருமாணம் வரும் அதுவும் இப்ப குறைவு என்டு தான் சொல்லனும் வன்னிப்பகுதியில இருந்து இங்க கொண்டு வந்து கடைகளுக்கு கொடுக்குறாங்கள் அதால எங்களுக்கு பிரச்சனை தான் காலம் எவ்வளவு தான் முன்னேறி போனாலும் மட்பாண்டங்களை பாவிப்பவர்கள் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எமக்கு ஒரு தொழில் சாசனம் இருக்கு. யாழ்ப்பாணம் மண்பாண்ட கலைஞர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கிறேன் எமது சங்கத்தில் 25 குடும்பங்கள் இத்தொழில் செய்வதாக பதிவு செய்திருக்கிறார்கள் ஆனாலும் 15 குடும்பங்கள் தான் இத்தொழிலை செய்து வருகின்றனர். ஏனைய குடும்பங்களுக்கு இத்தொழிலை தொடர்வதற்கு ஆட்கள் இல்லை வயது கூடினவர்கள் அல்லது பிள்ளைகள் வெளிநாட்டில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
எம் தொழில் குறைவடைந்து வருவது வேதனையை தருகின்றது இருந்தாலும் நாமும் என்ன செய்ய இன்றைய கால ஓட்டத்திற்கு ஏற்ப ஓடித்தான் ஆகவேண்டும். நாங்கள் மூன்று பேர்தான் இங்கு வேலை செய்கின்றோம். அதனால் எமக்கு மட்பாண்டம் 700 செய்து முடிக்க 15 நாட்கள்தேவைப்படுகின்றது. எமக்கு மிக முக்கியமான மூலப்பொருள் மண் ஓட்டிசுட்டான், கண்டாவளை, நெடுங்கேளி, முருங்கை, மல்லாவி போன்ற இடங்களில் இருந்து தான் மண் வருகின்றது அடுத்தது பொச்சுமட்டை அது நாம் எமக்கு தேவையான அளவு தொகையாகவே வாங்குவோம்.
பாணை, டபிள்அடுப்பு, ஒற்றைக்கல்அடுப்பு, கும்பபாணை, கொள்ளிசட்டி, கூசா, பூச்சாடி, பூவாஸ், கண்பாணை, குத்துவிளக்கு, கறிமூடி, சட்டிவகை, மூக்குச்சட்டி, காத்திகைதீபம், விளையாட்டு பொருட்கள், எள்ளெண்ணைச்சட்டி போன்றன எம்மால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்றார்;.
இவருடன் இவ் மட்பாண்டபொருட்களின் உற்பத்தி அழிவடைந்து விடப்போகிறது என எண்ணும் போது மிகவும் கவலையாகத்தான் இருக்கிறது. மட்பாண்டங்களில் சமைத்து உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு சிறப்பானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் ஆனால் எமது சமூகம் வெள்ளி, ஈயம் போன்றவற்றினால் உருவான சமையல் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களின் பாவனைக்கு எப்பவோ மாறிவிட்டது.
பழமை என்பதை நாம் எப்பொழுதும் கட்டிக்காப்பாற்றுவது என்பது மிகவும் அவசியமான தொண்றாகும். பழமை எமது உடல் ஆரோக்கியத்துக்கும் கலாசாரத்திக்கும் சமூதாய ஆரோக்கியத்துக்கும் அடிப்படை என்பதை நாம் மறந்து விட்டோம். மட்பாண்டப்பொருட்களைப் போன்று எத்தனையோ பழமைகளை தொலைத்து வருகிறோம் என்பதை இப்பொழுது யாரும் நினைகக் கூட நேரமில்லை.

குலாலர் சமூகத்தினரைபழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை





சமூகப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியுள்ள குலாலர் (மண்பாண்டத் தொழிலாளர்) சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டுக்கோட்டை வட்டார குலாலர் முன்னேற்ற சங்கக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தவிர, மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு கே. அப்பாவு தலைமை வகித்தார். டி.எம். சக்திவேல் முன்னிலை வகித்தார். நிறுவனத் தலைவர் வி. தியாகராஜன், மாநில துணைத் தலைவர் கே.பி. கலியபெருமாள், மாநில துணைத் தலைவர் கோ. கருப்புசாமி, தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் பி. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.