குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Monday, November 16, 2015

இலங்கை யாழ்ப்பாணம் குலாலன் நிலைமை ?

p_rajandram
மனிதன் அழிந்துபோகக்கூடிவன் ஆனால் அவனால் படைக்கப்படும் படைப்புக்கள் காலந்தோறும் நிலைத்து நிற்கக்கூடியது. ஆனால் தற்போது அவையும் அழிந்து போகும் நிலையே காணப்படுகின்றன. நவீன தொழில்நுட்பயுகமாகிய இக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தத்தமது வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றான் இதனடிப்படையில் மனிதனின் பொருளாதாரமே அவனின் உணவு சுகாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புடன் கூடிய ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றது.
பொருளாதார மட்டம் அதிகரிக்கும் போது குடிசனங்களின் வாழ்வாதார நிலையில் ஏற்படும் மாற்றமானது நகரமயமாக்கலை சுட்டிநிற்கின்றது. சில்வர், ஈயம் போன்றவற்றினாலான சமையல் பாவனைப் பொருற்கள் அதிகரித்த பின்னர் மட்பாத்திரங்களின் நிலை பின்நோக்கி செல்கின்றது என்றே சொல்லலாம்.
OLYMPUS DIGITAL CAMERAதற்போதைய காலத்தில் மட்பாண்டங் களின் நிலை எவ்வாறு மாற்றமடைந் துள்ளது என அறிந்துகொள்ள மட்பாண்ட தொழில் நடைபெறும் ஒரு இடத்திற்கு சென்றேன். ஆடியபாதம் வீதி கல்வியங்காடு பகுதியில் மட்பாண்ட தொழில் செய்து வரும் பழனிமுருகையா ராஜேந்திரம் என்பவருடன் சிறிது நேரம் உரையாடினேன். நவீன தொழில்நுட்ப உலகில் பெரும்பாண்மையான மக்கள் சில்வர், ஈயம் போன்ற வற்றினாலான சமையல் பாவனைப் பொருற்களுக்கு மாறிவிட்ட நிலையில் தற்பொழுது உங்களால் இத்தொழிலை எவ்வாறு தொடாந்;து செய்யமுடிகிறது? என வினாவியபோது
எனக்கு இது பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழில் அப்பா தாத்தா சொய்யும் போது நானும் பழகினதுதான.; இப்ப 20 வருடமாக நான் இத்தொழிலை செய்து வருகின்றேன.; மழை காலத்தில் எம்மால் இத்தொழிலை செய்ய முடிவதில்லை மனைவி லலிதாம்பிகை தான் என் இத்தொழிலுக்கு வலதுகை என்று சொல்ல வேண்டும் எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள.; அவர்கள் படிக்கிறார்கள் வீட்டில் நிற்கும் நேரங்களில் எனக்கு உதவி செய்வார்கள். எனது அப்பா தாத்தா இத்தொழிலை செய்யும் போது நாங்கள் எப்படி ஒற்றுமையாய் செங்தோமோ அதே போல் இன்று எனது பிள்ளைகளும் படிப்பு நேரத்தை தவிர தாராளமாக ஒத்துழைப்பு தருகின்றனர்.
OLYMPUS DIGITAL CAMERAஎம் தொழில் அருகி வர காரணம் நாகரீக வளர்ச்சி மட்டுமல்ல போட்டி பொறாமையும் தான் போட்டி என்பது எல்லா தொழிலிலும் இருக்கும் ஆனால் பொறாமை என்பது முன்னேற்றத்தை தடுப்பது மட்டுமல்ல தானும் முன்னேறாமல் தடுப்பது தான் இதை யாரும் புரிந்து கொள்வதில்லை இங்கு போட்டி அதிகம் இதற்குள் ஒரு மூன்று வீட்டில் தான் இத்தொழில் செய்கின்றனர் போட்டி என்றால் கூட பிழைத்துவிடலாம் பொறாமையை எதுவும் செய்யமுடியாது பொறாமை என்பதால் என் பிள்ளைகளுக்கு இத்தொழிலை தொடர்ந்து செய்வதில் விருப்பம் இல்லை விட்டுவிடுங்கள் என்று பல தடவை சொல்லி விட்டார்கள். எனக்கு இத்தொழில் பழகிவிட்டது அத்துடன் இவ் மட்பாண்ட தொழிலுக்கு யாழ்மாவட்டத்தில் நான் தலைவராக இருக்கிறேன் அதனால் விட முடியவில்லை தாங்கள் படிக்கும் வரை தான் இத்தொழில் செய்ய அனுமதி என்று சொல்லிவிட்டார்கள் எனக்கும் அவர்களின் விருப்பம் தானே முக்கியம். எனக்கு பின் இத்தொழிலை செய்ய யாரும் இல்லை என்ற கவலை எனக்கு இருக்கத்தான் செய்கின்றது.
செலவுக்கு ஏற்ற வருமாணம் இல்லா விட்டாலும் இது எமது குலத்தொழில் விட முடியாது முன்னைய மாதிரி இல்ல இப்ப சரியான போட்டி முக்கியமான விசேட தினங்களில தான் எமக்கு வருமாணம் வரும் அதுவும் இப்ப குறைவு என்டு தான் சொல்லனும் வன்னிப்பகுதியில இருந்து இங்க கொண்டு வந்து கடைகளுக்கு கொடுக்குறாங்கள் அதால எங்களுக்கு பிரச்சனை தான் காலம் எவ்வளவு தான் முன்னேறி போனாலும் மட்பாண்டங்களை பாவிப்பவர்கள் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எமக்கு ஒரு தொழில் சாசனம் இருக்கு. யாழ்ப்பாணம் மண்பாண்ட கலைஞர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கிறேன் எமது சங்கத்தில் 25 குடும்பங்கள் இத்தொழில் செய்வதாக பதிவு செய்திருக்கிறார்கள் ஆனாலும் 15 குடும்பங்கள் தான் இத்தொழிலை செய்து வருகின்றனர். ஏனைய குடும்பங்களுக்கு இத்தொழிலை தொடர்வதற்கு ஆட்கள் இல்லை வயது கூடினவர்கள் அல்லது பிள்ளைகள் வெளிநாட்டில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
எம் தொழில் குறைவடைந்து வருவது வேதனையை தருகின்றது இருந்தாலும் நாமும் என்ன செய்ய இன்றைய கால ஓட்டத்திற்கு ஏற்ப ஓடித்தான் ஆகவேண்டும். நாங்கள் மூன்று பேர்தான் இங்கு வேலை செய்கின்றோம். அதனால் எமக்கு மட்பாண்டம் 700 செய்து முடிக்க 15 நாட்கள்தேவைப்படுகின்றது. எமக்கு மிக முக்கியமான மூலப்பொருள் மண் ஓட்டிசுட்டான், கண்டாவளை, நெடுங்கேளி, முருங்கை, மல்லாவி போன்ற இடங்களில் இருந்து தான் மண் வருகின்றது அடுத்தது பொச்சுமட்டை அது நாம் எமக்கு தேவையான அளவு தொகையாகவே வாங்குவோம்.
பாணை, டபிள்அடுப்பு, ஒற்றைக்கல்அடுப்பு, கும்பபாணை, கொள்ளிசட்டி, கூசா, பூச்சாடி, பூவாஸ், கண்பாணை, குத்துவிளக்கு, கறிமூடி, சட்டிவகை, மூக்குச்சட்டி, காத்திகைதீபம், விளையாட்டு பொருட்கள், எள்ளெண்ணைச்சட்டி போன்றன எம்மால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்றார்;.
இவருடன் இவ் மட்பாண்டபொருட்களின் உற்பத்தி அழிவடைந்து விடப்போகிறது என எண்ணும் போது மிகவும் கவலையாகத்தான் இருக்கிறது. மட்பாண்டங்களில் சமைத்து உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு சிறப்பானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் ஆனால் எமது சமூகம் வெள்ளி, ஈயம் போன்றவற்றினால் உருவான சமையல் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களின் பாவனைக்கு எப்பவோ மாறிவிட்டது.
பழமை என்பதை நாம் எப்பொழுதும் கட்டிக்காப்பாற்றுவது என்பது மிகவும் அவசியமான தொண்றாகும். பழமை எமது உடல் ஆரோக்கியத்துக்கும் கலாசாரத்திக்கும் சமூதாய ஆரோக்கியத்துக்கும் அடிப்படை என்பதை நாம் மறந்து விட்டோம். மட்பாண்டப்பொருட்களைப் போன்று எத்தனையோ பழமைகளை தொலைத்து வருகிறோம் என்பதை இப்பொழுது யாரும் நினைகக் கூட நேரமில்லை.

No comments: