குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, August 4, 2018

Hello வேளார்s கொஞ்சம் படிங்கப்பா.





இக்கட்டுரையின் நோக்கம் வேளார் என்பதற்க்கும் வேளாளர் என்பதற்க்குமான பெரும் இடைவெளியை வெளிக்கொணர்வதே அகும்.
வேளார் என்பதும் வேளாளர் என்பதும் ஒன்றுக்கொன்று இணையான சொற்கள் போன்று தோன்றினாலும் இரண்டும் வேறுபட்ட பொருள் தருவன.
வேள்,வேளார்,வேளான் -என்பன அரசன்/தலைவன் பொருள் தருபவன

அதே நேரம்

வேளாளர் ,வெள்ளாளர்-என்பன உழுகுடியைக் குறிக்கும் சொற்கள்


வேள்,வேளார்,வேளான் என்பது அரசனை/தலைவனைக் குறிப்பது!


அதே போல்

வேண்மான் -என்பது வேள் எனும் அரசகுடியினரின் மகன்
வேண்மாள் -என்பது வேள் எனும் அரசகுடியினரின் மகள்
என்றும் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.
வேண்மாள் ,வேண்மான் என்பதற்கான உதாரணங்கள்!
உதியன் சேரலாதன், வெளியன் வேண்மாள் நல்லினி தம்பதியருக்குப் பிறந்தவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
“குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன் வேண்மாள் அந்துவனை செள்ளை ஈன்ற மகன் … இளஞ்சேரல் இரும்பொறை”அந்துவன் (சேரன்)
கரிகாற்சோழருக்குப் பின்னர் தித்தன் ஆட்சிக்கு வந்தார். கடற்கரைப் பட்டினமான வீரையை ஆண்ட வெளியன் என்ற வேளிரின் மகன் தித்தன். இவர் சோழரின் மகளை மணந்து சோழரானார். இவரது முழுமையான பெயர் “வீரை வேண்மான் வெளியன் தித்தன்“ என்பதாகும்

“வேளார் என்பதும், வேளாளர் என்பதும் வெவ்வேறு இனத்தவரின் குடிப்பெயர்கள்.

வேளார் உழுவித்து உண்பவர்-அரச பரம்பையினர். வேளாளர் உழுது உண்பவர்- உழவர். உழுபவருக்கு வேளாண் என்ற குடிப்பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியது. வேளாண் என்பதற்கு உபகாரி என்று
 பொருள்.

“வேளாண் வாயில் வெப்பக்கூறி”
வேளாண் என்பது உதவியென்றே பழந்தமிழ் இலக்கியங்களில் பயின்று வந்திருக்கிறது.உதாரணங்கள் சில!


தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்

பொருள்: முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்- சாலமன் பாப்பையா

இக்குறளில் வேளாண்மை என்பது உதவி எனும் பொருள் தரும்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:81)
பொழிப்பு: வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவிசெய்யும் பொருட்டே ஆகும். இதில் வேளாண்மை என்பது உபசரித்தல் எனும் உதவி.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு

-பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.
மு.வரதராசன் -இக்குறளில் வேளாண்மை என்பது உதவி எனும் பொருளில் வருகிறது.

இப்போது வேளான்மை எனும் சொல் அன்று பயிர்செய்யும் தொழிலுக்குப் பயன்படுத்தப்படவில்லை.
வேளார் உழுவித்து உண்பவர்-அரச பரம்பையினர்.வேளாளர் உழுது உண்பவர்- உழவர்.
வேள் என்பதன் தோற்றுவாய்
வெள்ளை, வெண்மை, வெள்ளி என்ற சொற்கள் எல்லாம் வெண்மை நிறம் அல்லது ஒளியுடைய என்ற பொருள் தரும் வெள் என்ற அடிச்சொல்லின் அடியாகப் பிறந்தன எனலாம். வேள் என்ற சொல்லும் இதனடியாகப் பிறந்தது எனக்கொண்டால் அச்சொல் புகழ்பெற்ற ஒள்ளியராய் விளங்குவோர் என்ற பொருளைத் தருவதாலும அல்லது பழங்கலாத்தில் அரசர்களைப் பற்றிப் பொதுவாக நிலவிய நம்பிக்கையின்படி வேளிரிடத்துள்ள ஒளி அல்லது கடவுள் தன்மை என்ற பொருளைத் தருவதாகும்.

பட்டினப்பாலையில் “பல்ஒளியர் பணி பொருங்க” என்று பயின்றுவரும் அடி எடுத்துக் காட்டத்தக்கது. இவ்வடியில் பல் ஒளியர் என்று கூறுவது வேளிர்களையே ஆகும்.

ஆரம்பத்தில் வேளிர் எனும் மரபினருக்கு வழங்கப்பட்ட பெயரை பின்னாட்களில் வேளாளர் எனும் திரிபோடு பல்வேறு இனக்குழுக்களும் சேர்த்துக்கொண்டு சிறப்புப் பெற முனைந்துள்ளனர். ஆனால் இதே வேளாளர்கள் வெவ்வேறு சாதிப்பெயர்களில்(100க்கும் மேற்பட்ட பெயர்களில்) அரசுப் பட்டியலில் உள்ளதே வேளாளர் என்று இனம் காணப்படுவோர் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதை மிக எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய சான்றாகும்.

ஆகவே வேளிர் என சிறப்புற விளங்கியவர்கள் உயர்குடி வேளாராகிய இன்றைய குலாலர்   இனத்தவரே  இவர்களே சமூகத்தின் உயர் அடுக்கில் இருந்தவர்கள் என்பதும்

ஆனால் இன்று இப்பெருமையை போலியாக சூடிக்கொண்டவர்களே ,உயர்வுமிக்க  குலாலர்  இனத்தை தாழ்த்த நினைப்பது அறியமையாமை மட்டுமல்ல பெரும் கயமை!

No comments: