குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Sunday, April 26, 2015

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா குலாலர் மண்டகப்படி

தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்றான மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரைத் திருவிழா புகழ்பெற்றது. இது மதுரை நகரின் கலாச்சாரத்துக்கு பெருமை சேர்க்கும் திருவிழாக்களில் ஒன்றாகும். இந்து மதத்தில் உள்ள சைவ - வைணவ பிரிவுகளை இணைக்கும் அற்புதமான ஒரு விழாவாக சித்திரைத் திருவிழா உள்ளது. சித்திரைத் திருவிழாவில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி, விருதுநகர், தேனி, ராமநாதபரம், திண்டுக்கல் உட்பட அண்டை மாவட்ட மக்களும் வண்டிகட்டி வந்து பங்கேற்பது சிறப்பான ஒன்றாகும்.இப்படிப்பட்ட சித்திரைத் திருவிழா நேற்று மாலை வாஸ்து சாந்தி பூஜையுடன் தொடங்கியது.

 காலை கோயில் திறக்கப்பட்டதும் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு கோயிலுக்குள் குலாலர் மண்டகப்படி நடந்தது. மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் ஆகியோர் கொடி மண்டபத்தில் எழுந்தருளினார். இதன் பின்னர் காலை 11.36 மணிக்கு கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தர்பைப் புற்கள் மற்றும் பல வண்ண மலர்களால் கொடி மரம் அலங்கரிக்கப்பட்டது. பூஜை, அலங்காரத்துக்கு பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி சித்திரைத் திருவிழா கொண்டாட்டங்கள் தொடங்கியது. இன்று இரவு 7 மணிக்கு மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் ஆகியோர் கற்பக விருட்சம் சிம்மவாகனத்தில் எழுந்தருள்கின்றனர். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 28ம் தேதி நடக்கிறது. ஏப்ரல் 29ம் தேதி மீனாட்சியம்மன் திக் விஜயம் செய்கிறார். ஏப்ரல் 30ம் தேதி மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 1ம் தேதி சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடக்கிறது. மே 2ம் தேதி தீர்த்தவாரியுடன் மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது. சித்திரைத் திருவிழாவால் மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

No comments: