குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Monday, September 23, 2013

மதுரையில் குலாலர் சமுதாய பொதுக்குழு

மதுரையில் குலாலர் சமுதாய பொதுக்குழு : மாநில தலைவர் தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் ஆதரவு யாருக்கு என்பது குறித்து விவாதிக்க மதுரையில் பொதுக்குழு நடைபெற உள்ளதாக குலாலர் சமுதாய மாநில தலைவர் தெரிவித்துள்ளார்,

நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவை எங்கள் அமைப்பு ஆதரித்தது. மண்பாண்ட தொழிலாளர் களுக்கான நலவாரியம் அமைத்து தரப்படாத நிலையில் நெல்லை மாவட்டம் தவிர இதர மாவட்டங்களில் மண்பாண்டம் செய்ய தேவையான குளத்து மண் அள்ள அனுமதி வழங்க படவில்லை. அதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கபட்டது.

மாநில அளவில் தொகுதிக்கு 1 லட்சம் வாக்காளர்களை கொண்ட எங்கள் அமைப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து விவாதிக்க மதுரையில் வருகிற 22ம் தேதி பொதுக்குழுவை கூட்டியுள்ளோம் ,அதில் நாடாளுமன்ற தேர்தலில யாருக்கு எங்கள் ஆதரவு என்பகு குறித்தும், 2014 ஜனவரியில் முதலாவது மாநில மாநாடு நடத்துவது குறித்தும் முடிவு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார் பேட்டியின் போது மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.