குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Sunday, May 13, 2018

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சித்திரை திருவிழாவில் முதல் மண்டகப்படி குலாலர் மண்டகப்படி

 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 29-ம் தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்தையொட்டி, சாமி சந்நிதியில் உள்ள கம்பத்தடி மண்டபம்  மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு, பட்டர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர்.


சித்திரைத் திருவிழாவிற்காக காப்புக் கட்டிய பட்டர்கள், காலை 10.05 மணிக்கு 66 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடிப் பட்டத்தை ஏற்றினார்.  பிறகு,கொடிமரத்துக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்து, யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளி, பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். கொடியேற்றம் நடந்த பிறகு, மேலே இருந்து மலர்கள் தூவப்பட்டன. பின்னர், சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில்,

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதன் பிறகு, அம்மனும் சுந்தரேஸ்வரரும் சாமி சந்நிதி இரண்டாம் பிராகாரத்தில் 3 முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். பின்னர், கோயிலுக்குள் உள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளினார்கள். தொடர்ந்து, இரவில் கற்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனங்களில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வர உள்ளனர்.  கொடியேற்ற நிகழ்ச்சியில், மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கோயில் இணை ஆணையர் நடராஜன் உட்பட, பலர் கலந்துகொண்டனர்.

No comments: