குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Thursday, February 7, 2013

இலவச மின்சாரம் வழங்க வேண்டும்

குற்றாலம்: மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்' என குலாலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழகம் அமைப்புசாரா மண்பாண்டம் மற்றும் செங்கல் தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டம் இலஞ்சி மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இலஞ்சி சமுதாய தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில தொழிற்சங்க துணைத் தலைவர் முருகானந்த வேளார், மாவடி சிவாச்சாரியர் ஆறுமுகநம்பி முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழக நெல்லை மாவட்ட தலைவர் ஆறுமுகநம்பி வரவேற்றார். அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் தியாகராஜன், மாநில தொழிற்சங்க தலைவர் சுப்புராஜ், நெல்லை மாவட்ட துணைத் தலைவர் நயினார், மாவட்ட பொருளாளர் சண்முகம், மாவட்ட தொழிற்சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் கணேசன், பாலாமடை சித்த மருத்துவர் முருகன், மாநிலக்குழு உறுப்பினர் முருகன், சுந்தரபாண்டியபுரம் சொரிமுத்து வேளார், மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் மாரியப்பன், வள்ளியூர் முருகன், காருக்குறிச்சி கிருஷ்ணன், மகாராஜன், மாவட்ட தொழிற்சங்க துணைத் தலைவர் கார்த்தீசன், மாவட்ட துணை செயலாளர் கட்டளை செல்வகுமார் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் குலாலர் சமுதாய மக்கள் மண்பாண்டம் மற்றும் செங்கல் உற்பத்தி செய்ய அரசு புறம்போக்கு குளங்களில் களிமண், சவடுமண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டர், கனிமவளத்துறை இணை இயக்குநர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நலிவடைந்து வரும் மண்பாண்டம் செய்யும் குலாலர் சமுதாய மக்களுக்கு மண்பாண்டம் செய்ய இலவச மின்சாரம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கரன்கோவில் மாரியப்பன் நன்றி கூறினார். கூட்டத்தில் நெல்லை மற்றும் பல்வேறு மாவட்ட குலாலர் சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.